ஒரு ஈழத்தமிழனாகிய நான் சிங்களவன் செய்த கொடுமைகளையும் தமிழினத்தின் வெளிப்படையான சில எதிரிகளையும் தேசத் துரோகிகளையும் நன்கு அறிவேன்.
மேலும் நான் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதாலாய் உங்களைப்பற்றியும் உங்கள் அரசியல் கட்டமைப்பு பற்றியும் செய்திகளிலும் தொலைக்காட்சிகளிலும்பார்ப்பதுண்டு. இதுதவிர ஈழவிடுதலைப்பற்றி யாராவது தமிழகத்தில் குரல் கொடுத்தால் என்ன நடக்கும் என்று நன்கு அறிவேன்.
தமிழினத்தின் தலைவன் நான் என்று நீங்கள் தான் பிதற்றிக்கொள்கிறீர்களேதவிர யாரும் அதை ஏற்றுக்கொண்டதுபோல தெரியவில்லை அய்யா,,,,,,, வயோதிபரே தமிழீழம் மலர்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாய் சொல்லிவிடுங்கள்.
என் வெளிப்படையான எதிரி என நீங்கள் மார்பில் பாச்சும் வாளை தாங்கிக்கொள்ளும் சக்திஎனக்குண்டு. வாடா என் உறவே என வாயார வரவேற்று முதுகில் அல்லவா அடிக்கிறீர்கள் நீங்கள் நினைத்திருந்தால் இவ்வளவு இழப்பை நாம் இழந்திருப்போமா ? என் தாயகம் தான் வீழ்ந்துபோயிருக்குமா??அப்படி என்னதான் செய்தான் ஈழத்தமிழன். பதவிக்காய் நாடகங்கள் பல ஆடி உண்ணாவிதரம் என்று எம்மை மடையனாக்கி, ஏன்?ஏன் ? இந்த கபட வேலை?? தள்ளாடும் வயதினில் பதவிக்காய் எவ்வளவு நாடகங்கள்அத்தனையும் நாமறிவோம். நெஞ்சம் வலிக்கிறது நினைத்துப் பார்க்கும்போது.
வரலாறு நாளை காறித்துப்பாதா? பட்டமும் பதவியும் எத்தனை நாளைக்கு ? சற்று சிந்தித்து பார்த்து செல்லும்பாதையை மாற்றுங்கள். சோனியா அம்மையுடன் சேர்ந்து என் இனத்தின் அழிவுக்கு அஸ்திவாரம் இட்டதுநீங்கள்தான். இதை மறுக்க எவராலும் முடியாது. உங்களை தமிழினத்தின் துரோகி என்று பாதிக்கப்பட்ட தமிழன்பச்சைகூட குத்திவிட்டான் அவன் நெஞ்சினில். வரலாற்று தவறல்லவா செய்துள்ளீர்கள்.
பரவாயில்லை, ஆனால் ஈழவிடுதலையும் ஈழத்தமிழினமும் உங்களுக்கு பிடிக்காவிடின் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டு என் இனத்துக்கு எதிரியாகவே இருங்கள். நாங்கள் உங்களை குறை கூறமாட்டோம். ஆனால்தேர்தல் காலங்களில் தமிழீழமே தமிழரின் தீர்வு, தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என் நெருங்கியநண்பர் எனகூறிவிட்டு மறுநாள் வந்து எதிர்முனையாய் பேசுவதும் அவ்வப்போது தமிழக உணர்வாளர்கள் கொடுக்கும்அழுத்தங்களை சகிக்காது ஈழம் பற்றி சில அறிக்கைகளை விடுவதுமாய் வித்தைகளை காட்டுகிறீர்கள்
தயவு செய்து இவ்வாறான அறிக்கைகள் விடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் மிகவும் வேதனையாக உள்ளது.வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதீர்கள். ஈழம் என்ற அந்த புனிதமான சொல் உங்கள் வாயிலிருந்து இனி வருவதை நான் விரும்பவில்லை. காரணம் உங்களை இனி என் சாதி நம்பாது. உங்கள் முகமூடி கிளித்து எறியப்பட்டுள்ளது
ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் துரோகி என்று வரலாற்றில் பதிவாகி வருடங்கள் ஆகிவிட்டது. இனிவரும்தேர்தல் காலங்களில் ஈழம் பற்றி பேசாதீர்கள். அது எம்மை காயப்படுத்துவது மட்டுமல்லாது என் தாய்த்தமிழ் உறவுகளைமுட்டாளாக்கிவிடும்.
மேலும் நாங்கள் ஈழத்தில் பிறந்ததால் சிங்களவன் முற்றுகையில் பல உயிர்களை காவுகொடுத்து பல இழப்புகளையும் சந்தித்துவருகிறோம். ஆனால் என் தாய் தமிழகத்தின் உறவுகள் ஏன் அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்.நட்டநடுக்கடலில் நாயைப்போல சிங்களகாடையர் என் உறவுகளை சுட்டுத்தள்ளியும் நீங்கள் பேசாதிருக்க காரணம்என்ன? எங்கே என் பதவி போய்விடுமோ என்றா?
உங்கள் பதவியை தக்கவைக்க பச்சைத்தமிழனை இரையாக்காதீர்கள். செம்மொழி மாநாடு எல்லாம்நடத்தினீர்கள். அம் மொழியை பேசுவதற்கு கொஞ்சத் தமிழனையாவது விட்டுவையுங்கள்.
தவிர உங்கள் தயவிலும் உங்கள் பெயரிலும் சில தொலைக்காட்சிகள் என் தாய் தமிழை கொண்று கலாச்சாரத்தையும்சீர்கெடுத்து வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு கவலை இல்லை. உங்கள் வங்கிக்கணக்கு நிரம்பிவிட்டால் போதும்.பாடசாலை வாயிலில் ஒட்டுப்பாவாடையுடன் ஒலிவாங்கியை கையில் ஏந்தியபடி புதிதாக வெளிவந்த திரைப்படம்பற்றி விமர்சனம் கேட்பதை பார்க்கும்போது எதிர்காலம் என்னாகுமோ என வேதனையாய் உள்ளது.
இது எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்க்கிறீர்கள். காவரியில் துடுப்பாட்டம் நடக்கிறது,வாயைத்திறக்க மறுக்கிறீர்கள். குடிநீரைக்கூட கொடுக்காத நீங்கள் எங்கே தமிழனுக்கு விடிவைக்காட்டுவீர்கள்.தமிழக எதிர்காலம் அரசியல் சினிமா என்ற இரண்டு சாக்கடைகளில் மூழ்கிக்கிடக்கிறது. இதற்கு முழுப்பொறுப்பும் நீங்கள்தான். தயவுசெய்து என் தமிழை வாழவிடுங்கள். எதிர்கால சந்ததிக்கு நல்ல வழியைக்காட்டுங்கள்.
மேலும் உங்களிடம் ஒரு கேள்வி. இந்திய இறையாண்மை என்றால் என்ன??அண்மையில் இயக்குனர் சீமானை கைதுசெய்தீர்கள். இதற்கான காரணம் என்ன? அப்படி என்னதான் அவர் பேசினார்?தமிழக மீனவரை சிங்களவன் சுட்டால், சிங்களவன் யாரும் நலமாக இங்கிருந்து திரும்பி செல்ல முடியாது. மானமுள்ள மனிதனுக்கு வரும் யதார்த்தமான கோபமிது. இதிலும் வேற்றுநாட்டவனைத்தான் குறிப்பிட்டு சொன்னார் சீமான்.
இதில் எப்படி உங்கள் இறையாண்மை கெட்டுவிடும். கறையான் பிடித்த உங்கள் இறையான்மை தமிழனைகொல்லும்போது கெட்டுவிடாதது ஏன் ? ஏன் இந்த கபடநாடகம் ?? தள்ளாத வயதில் பதவிக்கும் பணத்திற்கும் இவ்வளவுபோராசையா??
நீங்கள் தாய்ப்பால் குடிக்கவில்லையா?? தாய் மண்மீது தடுக்கி விழுந்து முத்தமிடவில்லையா??நீங்கள் தமிழனா ?? இவை அனைத்தும் புரியாத புதிராக உள்ளது எனக்கு.
நீங்கள் தாய்ப்பால் குடிக்கவில்லையா?? தாய் மண்மீது தடுக்கி விழுந்து முத்தமிடவில்லையா??நீங்கள் தமிழனா ?? இவை அனைத்தும் புரியாத புதிராக உள்ளது எனக்கு.
அய்யா வயோதிபரே, எட்டிப்பாக்கும் அளவு எமன் உங்களை நெருங்கிவிட்டான். எனவே இன்று முதல் ஒரு தமிழனாய்இருங்கள். தமிழை வாழவிடுங்கள். கூண் விழுந்த தமிழ் முதுகை நிமிரவிடுங்கள். கலைந்துபோன கலாச்சாரத்தைகாப்பாற்றுங்கள். கதறி அழும் ஏழைகளை காப்பாற்றுங்கள் .
ஈழ விடுதலை பற்றி அவ்வப்போது விடும் அறிக்கைகள் எம்மை காயப்படித்திய வண்ணமே உள்ளன. மானமுள்ள தமிழன்உங்கள் முன் மண்டியிட்டு நிற்கமாட்டான். இனிவரும் காலங்கள் கட்டாயம் பதில் சொல்லும். உங்கள் கல்லறை மீது கூடகறையான் புற்றிருக்கும். அதிலும் கருநாகம் குடிகொள்ளும்.
கரிகாலன் சேனைகள் களமிறங்கும் காலம் வெகு விரைவில் !
இப்படிக்கு,
ஈழத்தாய் மைந்தன்
சங்கிலியன்
ஈழத்தாய் மைந்தன்
சங்கிலியன்
sankiliyan@hotmail.com