Monday, July 26, 2010

'புலிகள்' இல்லாத வன்னியில்...

http://www.eelanation.com/arasiyal/35-ceylon/633-vanni-current-report.html

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.
ஊழல், களவு, சமூகச்சீர்கேடு என்பன அறவே இல்லை என்னும் அளவிற்குத்தான் அங்கு நிலைமை இருந்தது. புலிகளமைப்பின் பல்வேறுபட்ட மக்களாட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் வினைத்திறன் கொண்டதாகவும் யாரும் குறைகாண முடியாத தனித்துவத்தினைக் கொண்டதாகவுமே விளங்கின.

நீதித்துறையாக இருக்கலாம், காவல்துறையாக இருக்கலாம், நிருவாகத்துறையாக இருக்கலாம் அனைத்துமே மக்களுக்கு அதியுச்ச சேவையினை வழங்கியதை உலகறியும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் 'புலிகள்' தண்டிப்பார்கள் என்ற அச்சமே குற்றச்செயல்கள் மிகவும் குறைவாக இருந்தமைக்குப் பிரதான காரணம்.

சிறு குற்றத்திற்கும் 'புலிகள்' பெரும் தண்டனை கொடுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிறு குற்றம் புரிந்தாலும் கடும் தண்டனை விதித்ததாலே அக்குற்றம் மீண்டும் இடம்பெறாது என்ற எண்ணத்தின் காரணமாகவே புலிகளமைப்பு அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

சுவீடனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டின் தலைநகருக்கு அண்மையில் பாரஊர்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட வீதியின் ஓடுதளத்தில் வெறும் 200 மீற்றர் தூரம் வரை இவர் காரினைச் செலுத்தியமைக்காக 18,000 குரோண் பணத்தினை எனது நண்பர் குற்றப்பணமாகக் கட்டியிருந்தார்.

குறித்த நபர் அதே குற்றத்தினை மீண்டும் புரியாமல் இருக்கவே சுவீடன் காவல்துறையினர் பெருந்தொகைப் பணத்தினைக் குற்றப் பணமாக வசூலித்திருந்தார்கள். இதே உபாயத்தினையே கைக்கொண்ட புலிகள் சிறு குற்றத்திற்கும் பெரும் தண்டனை வழங்கினர்.

இதன் விளைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கோதுமை மா அளக்கும் விற்பனையாளர்(சேல்ஸ்மன்) தொடக்கம் உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரி வரை எவருமே ஊழலில் ஈடுபடுவதற்குத் துணிவதில்லை. எடுத்துக்காட்டாக, கல்வித்துறையினை எடுத்துக்கொண்டால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் திருகோணமலையின் வரோதயநகரில் இருக்கிவரும் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினது அதிகாரிகள் கூட தவறிழைப்பதற்குத் துணிவதில்லை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் கல்விக்கழகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாகிவிட்டன. அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினைக் கூற விரும்புகிறேன். வன்னியில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கவேண்டியது அவசியம். இல்லையேல் அடையாள அட்டை இல்லாதமைக்கான காரணத்தினைக் கேட்டு ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் படையினர் துழைத்தெடுத்துவிடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற தங்களது ஆவணங்கள் அனைத்தையும் இடப்பெயர்வின் போது தொலைத்துவிட்டார்கள். அடையாள அட்டை தொலைத்தவர்கள் மணிக்கணக்கான சிறிலங்கா காவல்நிலையத்தில் காத்திருந்து பொலிஸ் றிப்போட் எடுக்கவேண்டும். அதனைப் பின்னர் கிராம சேவகரிடம் கொடுத்து அடையாள அட்டையினை மீளவும் பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

இவ்வாறு தனது அடையாள அட்டையைத் தொலைத்த எனது உறவினர் ஒருவர் அண்மையில் முள்ளியவளைப் பகுதியிலுள்ள தனது கிராம சேவையாளரிடம் சென்றிருக்கிறார். நீண்ட நாட்கள் அலைக்களித்த பின்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்த குறிப்பிட்ட கிராம அதிகாரி அடிக்கட்டைத் துண்டை எனது உறவினரிடம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

காரணம் தெரியுமா? ஒரு 'போத்தல்' வாங்கித் தந்தால் மாத்திரமே அடிக்கட்டையைத் தருவேன் என்றிருக்கிறார். இங்கு போத்தல் என அந்தக் கிராம அதிகாரி குறிப்பிட்டது வேறு எதுவுமல்ல, சாராயப் போத்தலைத்தான். அடையாள அட்டைக்கு மாற்றீடாக அந்த அடிக்கட்டைத் துண்டை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு புதிய வீட்டுத் திட்டங்களுக்கான நிதியினை சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பன வழங்கி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் குடும்பம் ஒன்றுக்கு வீடமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்திற்காக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட கிராமத்தின் கிராம அலுவலருடையதே. இங்கும் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது. வன்னியிலுள்ள அனைத்து கிராம சேவகர்களும் இவ்வாறு குற்றமிழைக்கிறார்கள் என நான் கூற விரவில்லை. மக்களுக்குத் தகுந்த சேவையினை வழங்கவேண்டும் என அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயற்படும் கிராம அலுவலர்கள் பலர் உளர்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமமொன்றிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் உண்மையில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுப்பதை அந்தக் கிராம அலுவலர் வேண்டுமென்றே இழுத்தடிக்க, இவருக்கு அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்மணி ' 'ஐயாக்கு' கையில் ஏதும் பார்த்து வைத்தால்தானே ஐயாவும் மனம் திறப்பார்' எனக் கூறியிருக்கிறார்.

தம்மிடமிருந்த நகைகளை அடைவு வைத்து 10,000 ரூயாவினை அந்தக் கிராம அலுவலருக்குக் இலஞ்சமாகக் கொடுத்த பின்னரே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கூடிய 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினை இந்த வறிய குடும்பத்திற்குக் கிராம அலுவலர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோலுள்ளது வன்னியில் பலரது வாழ்க்கை.

மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் 'காசுக்கு வேலை' என்ற திட்டம் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவரவர் கிராமங்களில் வீதியினை அகலமாக்கி வாய்க்கால்களை வெட்டுதல், பாடசாலைகள் கோவில்களை துப்பரவு செய்தல் போன்ற பணிகளில் கிராமத்தவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவில் இந்தத் திட்டத்தின் கீழ் வீதியினை அகலாமாக்கியபோது தறித்து விழுத்தப்பட்ட 25 வரையிலான பாலை மரக்குற்றிகளை அதே கிராம அலுவலர் சட்ட விரோதமாக அறுத்துத் தீராந்திகளாக்கி விற்றிருக்கிறார். இதன் பெறுமதி சுமார் 450,000 ரூபாய்களாகும்.

இதுபோல வன்னியின் பல பாகங்களிலுமுள்ள வர்த்தகர்கள் மற்றும் பணக்காரர்கள் தேக்கு, முதிரை, பாலை, வேம்பு உள்ளிட்ட மரங்களைச் சட்டவிரோதமாக அறுத்துத் தள்ளுகிறார்கள். முள்ளியவளைப் பகுதியில் வசித்துவரும் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு இரவில் இரண்டு அல்லது மூன்று ரைக்ரர் லோட் முதிரை மரங்கள் தினமும் வந்திறங்குகிறது. இவர்கள் சிங்களக் காவல்துறையினருக்கும் படையினருக்கும் பணத்தினை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டே மரக்கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் சாதாரணமாக தமது வீடுகளுக்கான கதவு, யன்னல் தேவைகளுக்காக தமது நிலங்களில் நிற்கும் மரங்களைத் தறிக்கும் மக்களை காவல்துறையினர் பலவகைப்பட்ட ஆவணங்களையும் அத்தாட்சிகளையும் கோரி படாதபாடு படுத்துகிறார்கள்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் வனவளப் பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவேயுள்ள வனங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முனைப்புக்களையும் மேற்கொண்ட அதேநேரம் மீள் வனமாக்கல் திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்திருந்தது. மக்களின் மரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், குறித்த மரத்தின் பரம்பல் மற்றும் மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மரங்கள் தறிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக யார் மரம் வெட்டினாலும் வன வளப்பாதுகாப்புப் பிரிவினர் கடுமையான நடவடிக்கையினை எடுத்தார்கள். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அது போராளியாக இருந்தாலும் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் சட்டவிரோதமாக மரத்தினை வெட்டினால் மூன்று மாதங்கள் ஊதியம் எதுவுமின்றி மீள் வனமாக்கால் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதுதான் வழமையாக இருந்தது. வன்னியின் சொத்தாகக் கருதப்படும் காடுகளைப் பாதுகாப்பதற்கு வனக்காவல் படையையே வனவளப் பிரிவு கொண்டிருந்தது.

வன்னியில் பரவலாக இடம்பெறும் இன்னொரு பிரச்சினையினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். களவு - இது இப்போது மலிந்து கிடக்கிறது. வன்னியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் தங்களது சொந்துக்கள் அனைத்தையுமே அங்கு விட்டுவிட்டே வந்தார்கள். இந்தச் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் படையினர் ஒருபுறமும் மக்கள் ஒருபுறமுமாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

25,000 ரூபா பெறுமதியான நீர்ப்பம்பிகள் 6,000 ரூபாய்க்கும், 40,000 பெறுமதியான முதிரம் கதவுகள் சோடி 12,000 ஆயிரத்திற்கும் விற்பனையாகின்றன. விசுவமடுப் பகுதியிலுள்ள கறுப்புச் சந்தையில் இதுபோன்ற பொருட்களைத் தேவையான அளவு கொள்வனவு செய்யலாம். மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத பகுதிகளுக்கு கள்ளத்தனமாகச் செல்லும் இவர்கள் இந்தப் பொருட்களை அங்கிருந்து கொண்டுவருகிறார்கள்.

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் தங்களது சொத்துக்களுடன் இடம்பெயர்ந்திருந்த போதும் மோதல்கள் தீவிரம் பெற, தங்களது சொத்துக்களை அந்தத்த இடத்திலேயே போட்டுவிட்டு வெறும் உடுப்புக்களுடன் மாத்திரம் இடம்பெயர்ந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் இல்லாத வன்னியில் இள வயதினர் மத்தியில் குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகச் சீர்கேடுகள்பற்றிச் சொல்லவே தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தேநீர்சாலை ஒன்றில் தேநீர் அருந்துவதற்காகச் சென்றிருந்தேன். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகரெட் பக்கெற்றை வாங்கி கடையருகில் நின்றவாறே புகைப்பிடிக்கிறான்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் தனது கல்வியினை இடைநிறுத்திய இந்தச் சிறுவன் தற்போது கூலி வேலை செய்கிறானாம். இந்த உணவகத்தில் '21 வயதிற்கும் குறைந்தவருக்கு சிகரெட் விற்காதே' என்ற அரசாங்க அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததையும் நான் கண்டேன். எங்களது இளம் சந்ததியினர் பயணிக்கும் திசையினை எண்ணும்போது என்மனம் அழுகிறது.

ஏனையவர்களின் சொத்துக்களை மக்கள் அபகரிப்பதும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் இதுபோன்ற அபகரிப்புச் சம்பவங்களை நான் கூறத்தான் வேண்டும்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சியை மையப்படுத்தியதாகவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் திருமணம் செய்த போராளிகள் பலரும் கிளிநொச்சி நகரினை அண்டிய பகுதிகளில் காணிகளை வாங்கி வீடுகளைக் கட்டியிருந்தார்கள். வெளிநாடுகளிலுள்ள தங்களது உறவினர்களின் உதவியுடனும் பெற்றோர்களது உதவிகளுடனும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே சிறு துண்டு நிலத்தினை வாங்கி இவர்கள் வீடுகளைக் கட்டியிருந்தார்கள்.

இப்போது இந்தப் போராளிகள் ஒன்றில் இறுதிப்போரின் போது வித்தாகிவிட்டார்கள் அல்லது சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் வாடுகிறார்கள். கணவன் தடுப்பில் இருக்கும் நிலையில் குடும்பத்தினைக் கொண்டு நடத்துவதற்கே தினமும் போராடும் இவர்களது மனைவிமார் தங்களது வீடுகளையும் காணிகளையும் பார்த்து வருவதற்குக் கிளிநொச்சி சென்றபோது பெரும்பாலும் ஏமாற்றமே காத்திருந்தது.

காரணம் தெரியுமா? போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இதுபோன்ற சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தையும் இவர்கள் இழந்துவிட்டார்கள். உயிருடன் மிஞ்சுவோமா எனத் தெரியாத நிலையில் இந்த ஆவணங்கள் முக்கியமானவையாக அப்போது இவர்களுக்குத் தெரியவில்லை.

இன்று இந்தக் காணிகளை இவர்களுக்கு விற்றவர்களே - போராளிகள் கஸ்ரப்பட்டுக் கட்டிய வீடுகளில் குந்தியிருந்துகொண்டு - எழும்ப மறுக்கிறார்கள், இராணுவத்திடம் போய் முறையிட்டுவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள். எங்கள் காணிகளை அடாத்தாகத்தானே பறித்தீர்கள் என வீண் வம்பு பேசுகிறார்கள்.

கிளிநொச்சியின் செல்வாநகர் பகுதியில், ஒரு போராளி நானறிய நாலரை இலட்சம் பணம்கொடுத்து காணியொன்றை வாங்கி, 13 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். லண்டனிலுள்ள தனது சகோதரன் அனுப்பிய பணத்திலேயே அவர் அந்தக் காணியை வாங்கியிருந்தது எனக்குத் தெரியும். இறுதிப்போரின் போது அந்தப் போராளி இறந்துவிட, இரண்டு பிள்ளைகளுடன் உறவினரின் தயவுடன் வாழும் இந்த யுத்த விதவை அண்மையில் தனது காணிக்குச் சென்றபோது அங்கு காணியை இந்தப் போராளிக்கு விற்றவர்கள் குடியிருப்பதைக் கண்டாள்.

'காணியைத் தராவிட்டால் பிள்ளையைப் பிடிப்பேன் என நீங்கள் அச்சுறுத்தியதனாலேயே காணியைத் தந்தோம்' எனப் படுபொய் கூறியிருக்கிறார்கள். இனியும் இங்கு வந்தால் உன்னையும் இராணுவத்திடம் பிடித்துக்கொடுத்துவிடுவோம் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மோசமானது யாதெனில், உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் போராளிக் குடும்பங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு இப்போது வன்னியில் எவருமில்லை. இதே வன்னி மக்களுக்காக தங்களது உயிரையே விலையாகக் கொடுத்துப் போராடியவர்களுக்கு மக்கள் கொடுக்கும் சன்மானம் இதுதான்.

புலிகள் இல்லாத வன்னியின் நிலை இதுதான். நாம் இன்னொரு உண்மையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வன்னி மக்கள் அனைவரும் இவ்வாறு மோசமான நடந்துகொள்கிறார்கள் என நான் கூற வரவில்லை.

என்ன நடக்கிறதோ அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எவராலும் எதுவும் செய்துவிட முடியாத நிலையில், பலர் இவற்றைப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்றதொரு சமூகம் வன்னியில் உருவாகுவதற்குப் படையினர்தான் தூபமிடுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மீள்குடியேற்றப்பட்ட வன்னியில் தோன்றும் பிரச்சினைகள் இவை.

வன்னி தனது தனித்துவத்தினை இழக்காத வகையில் எவ்வாறுதான் மீளப்போகிறதோ என்ற அச்சம்தான் அனைவரது மனங்களிலும் தங்போது குடிகொண்டிருக்கிறது.

- யாழினி

Thursday, July 22, 2010

ரூ 1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் நள்ளிரவில் திடீர் கைது மேலும் இருவரும் கைதாகி சிறையில் அடைப்பு பொய்ப் பு

Source:http://www.thinaboomi.com/2010/july/22/index1.php

1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழின் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய முத்தையா என்பவரும் பொய்ப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் கைதானதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் பறிபோய் விட்டதாக அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்களைப் பற்றி தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த கிரானைட் தொழிலில் பல பண முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட மிகுந்த துணிச்சலோடு அந்த தொழிலில் நடக்கும் ஊழல்களை தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் கீழவளவு, கீழையூர், ரெங்கசாமிபுரம், அடஞ்சாண்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கத் தொழில் பற்றி தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் சட்டவிரோதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் தோண்டப்படுவதால் அதனால் பொதுமக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தினஞீமி நாளிதழ் அவ்வப்போது அம்பலப்படுத்தியது. வெடிகுண்டு வைத்து கிரானைட் குவாரிகள் உடைக்கப்படுவதால் பல வீடுகளில் கற்கள் விழுந்து அந்த வீடுகள் நாசமாயின. மேலும் இந்த தொழில் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுப்புற கிராமங்களில் சிலிக்கான் தூசி பரவி பொதுமக்கள் பலவித நோய்க்கு ஆளானதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் மதுரை மாவட்டம் ரெங்கசாமிபுரத்தில் பவள மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் கிரானைட் குவாரி தோண்டப்பட்டதால் அந்த கோயில் தொங்கிக் கொண்டிருப்பதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது. கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில்தான் கிரானைட் குவாரி தோண்டப்பட வேண்டும். ஆனால் 10 அடி தூரத்திலேயே கிரானைட் குவாரி தோண்டப்பட்டதை தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் கிரானைட் குவாரிகளின் ஞிளம், அகலம், ஆழம் இவற்றை கணக்குப் பார்த்து அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்யாததால் பலகோடி முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அவை சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் குவித்து வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதையும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதையும் தினஞீமி நாளிதழ் மிக துணிச்சலோடு சுட்டிக் காட்டியது.

இதன் ஒரு கட்டமாக மாவட்ட கலெக்டர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட போது, எங்கெல்லாம் குவாரிகள் இல்லையோ அந்த கலெக்டர்கள் மட்டும் பதிலளித்தார்கள். குவாரி உள்ள மாவட்டக் கலெக்டர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் தினஞீமி நாளிதழ் மாநில தகவல் ஆணையத்தையும் அணுகியது. அங்கிருந்தும் சரியான பதில் கிடைக்காததால், முடங்கிப் போன தகவல் ஆணையம் என்று கூட செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்த ஊழல் தொடர்பாக சென்னை உயர்ஞிதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த எம். ரமேஷ்குமார் என்பவர் வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

பின்னர் அடுத்த கட்டமாக தமிழக கவர்னரிடம் கூட ஒரு முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்படியாக தினஞீமி நாளிதழ் பல்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் நடைபெறும் கோடிக்கணக்கான மதிப்பிலான கிரானைட் ஊழல் பற்றி செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் கூட சில சாட்டிலைட் படங்களை வெளியிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத கிரானைட் குவாரி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. ரூ 1,500 கோடி கிரானைட் ஊழல் நடந்திருப்பதாகவும், விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்படுவதாகவும் தினஞீமி நாளிதழ் பரபரப்பு செய்திகளை படத்துடன் வெளியிட்டது. இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எரிச்சலையூட்டியிருக்கக் கூடும்.

இதன் காரணமாகவோ என்னவோ, தினஞீமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இருந்தாலும், தினஞீமி நாளிதழ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து ஊழல் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று துணிச்சலாக சில தினங்களுக்கு முன்பு கூட தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதற்கு மறுநாளும் கிரானைட் சுரங்க ஊழல் பற்றி மிகப் பெரிய படத்துடன் தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும் ஒவ்வொரு முறையும் கிரானைட் செய்திகளை வெளியிடும் போதும் தினஞீமி நாளிதழில் ஒரு பாக்ஸ் செய்தி இடம்பெற்றிருக்கும். அதாவது, கிரானைட் குவாரிகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் சம்பந்தமாக தங்களுக்கு தகவல் எதுவும் தெரிந்திருந்தாலோ மேலும் புகைப்பட ஆதாரங்கள் இருந்தாலோ அவற்றை அனுப்புமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வகையில் அந்த பாக்ஸ் செய்தி இடம் பெற்றது. அதன் பேரில் பொதுமக்கள் தந்த பல தகவல்களின் அடிப்படையில் பல செய்திகள் அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் தினஞீமி நாளிதழுக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டது தினஞீமி நாளிதழ்.

இதற்கிடையில் சிலர் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில் தினஞீமி நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் மற்றும் அந்த நாளிதழின் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் கீழையூரை சேர்ந்த( இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய) முத்தையா ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.பி.கோ. 341, 384, 387,392 மற்றும் 511, 394 _ பி ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கின் அடிப்படையில் தினஞீமி ஆசிரியர் மணிமாறன் உட்பட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நள்ளிரவில் ஒரு சமூக விரோதியை கைது செய்வது போல ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்துள்ள செயல் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாகும். பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். திருப்ஞீர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கங்கள் இந்த கைது நடவடிக்கைக்கு தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

பத்திரிக்கைகளின் குரல் வளையை நெறிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடுகளை பற்றி செய்திகளை வெளியிட்டால் அதை சட்டப்ஞீர்வமாகத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது போலாகும். இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கெடுப்பான் இலானும் கெடும்.

என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எனவே தவறுகளை சுட்டிக் காட்டினால் அது தவறா? என்று பொதுமக்களும் கேட்கிறார்கள். மன்னன் தவறு செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கலாம். இல்லாவிட்டால், கெடுப்பவர் இல்லாவிட்டாலும் அவன் தானாக கெட்டு விடுவான் என்கிறார் திருவள்ளுவர்.

அந்த அடிப்படையில்தான் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அதற்கு தமிழக காவல் துறை கொடுத்திருக்கும் பரிசுதான் கைது நடவடிக்கை. ஜனநாயகத்தை நெறிக்கும் இதுபோன்ற செயல்களை தினஞீமி நாளிதழ் வன்மையாக கண்டிக்கிறது.

Saturday, July 17, 2010

நாம் எல்லோரும் தமிழர் தானா: ஒரு போராடும் இனமாக இருக்கவேண்டாமா?

சிங்கள அடக்குமுறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனைப் பொறுக்காத இளைஞர்களால் ஆயுதப் போராட்டம் வெடித்தது. ஒரு புறம் அரசியல் போராட்டம், மறு புறம் ஆயுதப் போராட்டம் என இரு வடிவங்களில் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.


அரசியலால் வெல்லமுடியாத நிலத்தை ஆயுதப் போராட்டம் வென்றெடுத்தது. சுமார் 33 வருடம் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மே 18 ஆம் திகதி மௌனிக்கப்பட்டது. அதுவரை காலமும் புலத்தில் உள்ள மக்களும் சரி, தாயக மக்களும் சரி தமது பங்களிப்பை வழங்கி வந்தனர். அதற்கு ஏற்றால் போல, தாயகத்திலும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் நடைபெற்றது. ஆரம்பத்தில் பல விடுதலை போராட்ட அமைப்புகள் உருவாகியிருந்தாலும் அதில் விடுதலைப் புலிகளே தாக்குதல் திறன் கொண்ட முதன்மை அமைப்பாக விளங்கியது. புலிகள் இயக்கம் மீது சகோதர யுத்தம், சில படுகொலை குற்றம் போன்றவை சுமத்தப்பட்டாலும், அவர்களின் போராட்ட அர்ப்பணிப்பால், அவற்றை பலர் மறந்து, தம்மையும் அவ்வியக்கத்தில் இணைத்தனர். ஒரு காலத்தில் கீழ்க் காணும் இயக்கங்கள் யாழில் இயங்கியது என்றால் சிலரால் நம்பவே முடியாது..
L.T.T.E - (Liberation Tigers of Tamil Eelam)
– PLOTE - (People’s Liberation Organization of Tamil Eelam)
- TELO - (Tamil Eelam Liberation Army)
- TEA - (Tamil Eelam Arm)
- EROS - (Eelam Revolutionary Organization of Student)
- EPRLF - Eelan People’s Revolutionary Liberation Front
- TELE - (Tamil Eelan Liberation Extremists)
- TELF - (Tamil Eelam Liberation Front)
- TEEF - (Tamil Eelam Eagles Front)
- GATE - (Gurrilla Army of Tamil Eelam)
- RCG - (Red Crescent Gurrillas)
-EM - (Eagles Movement)
-SRSL - (Socidist Revolutionary Social Liberation)
-TEBM - (Tamil Eelam Blood Movement)
-TPCU - (Tamil People’s Command Unit)
-ELT - (Eelam Liberation Tigers)
-TLDF - (Tamil Liberation Defence Front)
-RELO - (Revolutionary Eelam Liberon Organization)
-TERO - (Tamil Eelam Revolutionary Organization)
-TERPLA - (Tamil Eelam Revolutionarry People’s Liberation Army)
-RFTE - (Red Front of Tamil Eelam)
-TELG - (Tamil Eelam Gurrillas)
-NLFTE - (National Liberation Front of Tamil Eelam)
-IFTA - (Ilankai Fredom Tamil Army)
-TEDF - (Tamil Eelam Diffence Front)
-TENA - (Tamil Eelam National Army)
-TPSO - (Tamil People’s Securrity Organization)
-TPSF - (Tamil People’s Securrity Front
-TEC - (Tamil Eelam Commandos)
-TESS - (Tamil Eelam Secuity service)
-PLP - (People’s Liberation Party)
-TELC - (Tamil Eelam Liberation Cobras)
-TPDF - (Tamil People’s Democratic Front)
-TS - (Three Stars)
-ENDLF - (Eelam National Democratic Liberation Front)
-EPDP - (Eelam People Demecratic Party)
-


இத்தனை போராட்ட இயக்கங்களும், அமைப்புகளும், படைகளும் தமிழர்களிடம் இருந்தது. பலஸ்தீன விடுதலை அமைப்பாக இருக்கட்டும், அல்லது ஆபிரிக்க விடுதலைப் போராக இருக்கட்டும், குறைந்தது 7 அல்லது 8 அமைப்புக்களுக்கு மேல் இருப்பதாகத் தெரியவில்லை ஆகக் கூடியது 20 அமைப்புகள் என்று வைத்துக்கொண்டாலும், தமிழீழத்தில் தான் சுமார் 36 அமைப்புகள் ஒருகாலத்தில் இருந்தது. இது எதை எடுத்துக காட்டுகிறது? எம்மில் எப்போதுமே ஒரு ஒற்றுமை இல்லை என்பதையே எமக்கு உணர்த்தி நிற்கிறது. எதை எடுத்தாலும், பிரிவு, ஒருவரை ஒருவர் துரோகியாக்குவது, தனது சொந்தப் பகையைத் தீர்ப்பது என்பது தற்போது தமிழர்களுக்கு இடையே வாடிக்கையாகிவிட்டது.

33 வருடம் நடந்த ஆயுதப் போராட்டம் மே 18 முதல் மௌனிக்கப்பட்டது. போரில் புலிகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தவேளை, அவர்கள் இங்கு இப்படித் தாக்குவார்கள், அங்கு இவ்வாறு எதிர் தாக்குதல் நடக்கும் என பல கட்டுரையாளர்களும் தம்மை புத்திஜீவிகள் என்போரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். இதில் இக்பால் அத்தாஸும் அடங்குவார். அவரை இலங்கை இராணுவம் கைதுசெய்வது போல நாடகம் ஆடி, பின்னர் அவர் ஏதோ இலங்கை அரசுக்கு எதிரானவர் என்று காண்பித்து, அதன் மூலம் தமிழர் இணையங்களில் எல்லாம் அவர் எதிர்வு கூறல் வெளிவர, புலிகள் போரில் பாரிய வெற்றியடைவார்கள் என்ற ஒரு பிரம்மையை சிங்களம் வேண்டும் என்றே ஏற்படுத்தி இருந்தது. பின்னர் மே 18ல் எல்லாம் முடிவடைந்தும், திடீரென மக்கள் சலிப்பில் மூழ்கினர், இதுவே அவர்களின் திட்டமும் கூட.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் கூட்டம் ஒன்று, புலிகளுக்கு காசு சேர்த்தவர்கள், பெரும் பணத்தை சுருட்டி விட்டார்கள் என்ற பரப்புரையை திட்டமிட்டு மேற்கொள்ள அதனை பெரும் விடயமாகச் சிலர் பேசுவதும், தமிழர் தேசிய தொலைக்காட்சி என்று தம்மை அடையாளப்படுத்தும் தொலைக்காட்சியும் எரியும் நெருப்பில் எண்ணை வார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பெரும் வேதனைக்கு உரிய விடயம். ஜூலை 23ம் நாள் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவா வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் ஒரு இளைஞர், ஜூலை 23ம் நாள் இரவு நேரப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? அல்லது தமிழ் தேசிய தொலைக்காட்சி என்று தன்னை பீற்றிக்கொள்ளும் தொலைக்காட்சி இதனை வெளிக்கொண்டு வருகிறதா? ஏன் செய்யவில்லை?

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இதுவரை காலமும் போராட்டத்திற்கு சிறிய தொகை கூடப் பங்களிப்புச் செய்யாத சிலர் கூட தாமும் கடைசிநேரத்தில் பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணம் எங்கே போனது என்றும் கேள்விகேட்பது பெரும் வெட்கக்கேடான விடயம். போராட்டங்கள் நடந்து இலங்கை இராணுவத்தின் பல முகாம்கள் அழிக்கப்பட்டபோது, எவரும் எதுவும் பேசவில்லை, புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியபோது இவர்கள் பேசவில்லை, ஆனையிறவு பெரும் தளம் வீழ்ந்தபோது இவர்கள் எதுவும் பேசவில்லை, ஆனால் மே 18 க்குப் பின்னர் எதையும் பேசலாம் என எண்ணுகின்றனர். ஒருவன் விழுந்து போனால் அவன் மீது ஏறி மிதிப்பதே தமிழன் கொள்கையாக வைத்துள்ளானா?, இல்லை ஒரு கை கொடுத்து தூக்கிவிடும் மனம் நமக்கு அற்றுப்போய்விட்டதா?

காசு கொடுத்தோம் அவர் அதை சுத்திவிட்டார் என்று கூறுவோர், உண்மையாகவே முன் வந்து தாம் யாரிடம் கொடுத்தோம் என்று கூறுவது நல்லது. கொடுதவரிடம் விளக்கம் கேட்பது நல்லது. அதை விடுத்து ஒட்டுமொத்தமாக விடுதலைக்காய் அயராது உழைக்கும் அனைவரின் மீதும் பழியைப் போட்டு, எமது போராட்டத்தை திசைதிருப்பி ஸ்தம்பிக்கச் செய்யாதீர்கள். தவறு இழைத்தவர்களை அடையாளம் கண்டு பிடியுங்கள். போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட பணத்தை தனி நபர் சுருட்டிவிட்டார் என்று கூறுவோரும், இவ்வாறு தமிழர்களை யார் தூண்டுகிறார்கள் என்போர் குறித்தும் தமிழர்கள் மிகுந்த அவதானமாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும். இவர்கள் ஏன் இவ்வாறு பிரிவினையைத் தூண்டுகிறார்கள் என்பது குறித்து நாம் நன்கு ஆராயவேண்டும். சுயலாபம் கருதி இவ்வாறு சிலர் தூண்டி விட இதை அறியாத பாமர மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
புலிகள் போராடும் வரை போராடினார்கள், உலக அரசியல், உலக நாடுகளை உலுக்கிய இஸ்லாமிய பயங்கரவாதம், இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை எப்போது பயங்கரவாதப் பட்டியலில் இட்டதோ அன்றே எம் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. எப்போது கருணா பிரிந்தாரோ அன்று பாரிய பின்னடைவை அடைந்தது. உலக நாடுகள் கூடி எப்போது புலிகளை அழித்தே தீருவோம் என்று களமிறங்கியபோது அன்றே எமது போராட்டம் சிதைக்கப்பட்டது. இது தான் உண்மை. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இதுவரை பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு போராட்டத்தை புலிகள் கைகளில் விட்டிருந்தோம், அவர்களும் அதனை செவ்வனவே செய்துவந்தனர். இப்போது போராட்டத்தை அவர்கள் புலம்பெயர் மக்களின் கைகளில் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அதனை நாம் செய்ய விரும்பாது, ஒருவர் மீது ஒருவர் குறைகூறுவதை பரம்பரை பழக்கம் போலச் செய்து வருகிறோம்.

போராட்டத்திற்காக பணம் சேர்த்த சிலர் அதனைக் கையாடல் செய்திருக்கலாம். அவர்கள் நிச்சயம் அடையாளம் காணப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மையாக விடுதலைக்காக உழைக்கும் நபர்களையும், இதனைச் சாட்டாக வைத்து கொச்சைப்படுத்துவது, இலங்கை புலனாய்வுத் துறையின் திட்டம், இதற்கு நீங்களும் துணைபோக வேண்டாம் புலம்பெயர் தமிழர்களே... சரியான குற்றவாழிகளை அடையாளம் கண்டுபிடியுங்கள், அதைவிடுத்து எல்லோரையும் சாடி, அதனூடாக நேர்மையாக உழைத்துவரும் சிலர் மீது பழி சுமத்தி அவர்களையும் ஒதுக்கினால், இனி வரும் காலங்களில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க, பலரும் அஞ்சுவார்கள், அல்லது எமக்கு ஏன் பொல்லாப்பு என்று ஒதுங்கிப் போகும் நிலை தான் மிஞ்சும், இதனையே இலங்கை அரசும் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.

எனவே புலம்பெயர் மக்கள், தம்முள் ஊடுருவிள்ளவர்களை முதலில் அடையாளம் காண்பது , நல்லது. குறை கூறுவோர் அல்லது தூண்டுவோர் பின் புலம் என்ன? எதற்காக இவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதை முதலில் ஆராய்வது நல்லது. நாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை தீவிரப்படுத்த முயலுங்கள், ஐ.நா நிபுணர் குழுவுக்கு உதவுவது, போர் குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துவது, இன அழிப்பு பற்றிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது, தாயகத்தில் தவிக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் உதவுவது, தாய் தந்தையை இழந்த சிறுவர்களுக்கு உதவுவது என்று எவ்வளவோ இருக்கும் போது, குறிப்பிட்ட ஒரு சிலரால் தூண்டிவிடப்படும் இதுபோன்ற சர்ச்சைக்குள் நாம் ஏன் எமது நேரத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்?

குறை கூறுபவர்களும், புலிகள் இயக்கத்தை அவதூறாகப் பேசிவருவோரும் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புலிகள் இயக்கம் போராட்டரீதியாக வீழ்ச்சியடைந்தை, சாதகமாகப் பயன்படுத்தி இவர்கள் தமது காழ்ப்புணர்வுகளை வெளிக்கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்களத்தைப் பாருங்கள், ஐ.நாவால் ஒரு பிரச்சனை என்றால் எதிர்கட்சிகள் கூட ஒன்றாக இணைகின்றன. ஆனால் தமிழர்களோ, பிரிந்து நின்று ஆயிரத்தி எட்டு இயக்கங்களை ஆரம்பிப்பதும், உள்ள அமைப்பை இரண்டாக உடைத்து வெளியேறுவதும், ரி.வி யில் ஒரு முறையாவது முகம் காட்ட அலைவதும், இல்லை தன்னை ஒரு அமைப்பின் தலைவர் என்று கூறி பெருமையடிக்கவுமே தமது நேரத்தை பெரும்பாலும் செலவழிக்கின்றனர்.

இந்த நிலை மாறவேண்டும், 33,000 போராளிகள் இறந்திருக்கிறார்கள், அவர்களை புலி எதிர்ப்பாளர்கள் புலிகளாகப் பார்க்கவேண்டாம், தமிழ் இளைஞர்களாகப் பாருங்கள், அவர்களையும் உங்கள் சகோதரராக எண்ணுங்கள், ஒரு இன விடுதலைக்காக அவர்கள் உயிர் நீத்திருக்கிறார்கள், இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் இழந்து, காதல், காமம், குடிவெறி, அப்பா அம்மாவோடு இணைந்து வாழாமல், பள்ளிக்கூடம் செல்லாது, ஊர் சுற்றித் திரியாது, அனைத்தையும் துறந்து, துறவிகளையும் மாமுனிவர்களையும் விட பல படிகள் மேலே போய் எமது இன விடுதலைக்காய் உயிர் நீத்தனர் அவர்கள். அவர்கள் கனவு நனவாக ஆவது நாம் போராட வேண்டாமா?

இனி வரும் காலங்களில்...அப்படி நாம் சும்மா இருந்தால் எம்மையும், எம்மினத்தையும், பார்த்து காறி உமிழ்வார்கள் வேற்றின மக்கள்...