Sunday, September 26, 2010

இது ‘பகுத்தறிவு சிங்கம்’ கருணாநிதியின் மூட நம்பிக்கை!


கண்ணெதிரில் கட்சிக்கார் யாராவது குங்குமம் வைத்தபடி எதிரில் தென்பட்டால் உடனே அதை அழிக்கச் சொல்வார்…
ராகு காலம் நல்ல நேரம் பற்றிப் பேசுபவர்களை எள்ளி நகையாடுவார்… கடவுள் இல்லை அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என நேரத்துக்குத் தக்கபடி கமெண்ட் அடிப்பார்…
ஆனால் இந்த உபதேசமெல்லாம் ஊருக்குதான். தனக்கென்று வரும்போது நல்ல நேரம் பார்த்தால் தப்பில்லை… சங்கராச்சாரியின் பிரசாதம் பரவாயில்லை… சாய்பாபா வீட்டுக்கு வந்து மாஜிக்கில் மோதிரம் வரவழைத்துத் தந்தாலும் ஓகேதான்… வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலில் தினசரி அவர் பெயருக்கு பூஜை கூட நடக்கலாம்…
-அவர் வேறு யாருமில்லை, பெரியாரின் தொண்டர், அண்ணாவின் அரசியல் வாரிசு, பகுத்தறிவு சிங்கம் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.
மேடைதோறும் பகுத்தறிவு பேசும் இந்த ‘முத்தமிழ் அறிஞர்’, தஞ்சையில் ராஜ ராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்கு செல்ல பெரும் தயக்கம் காட்டி வந்தார். காரணம் பெரிய கோயிலுக்கு முதன்மை வாயில் வழியாகச் சென்றால் ஆட்சி போய்விடும் அல்லது ஆயுள் போய்விடும் என்ற மூட நம்பிக்கையால் வந்த பயம்தான்.
பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாட நடக்கும் விழாவுக்கு வரும் முதல்வர் கருணாநிதி கோவிலின் முதன்மை வாயில் வழியாக செல்வாரா அல்லது வேறு பாதை வழியாக செல்வாரா என்று பெரும் விவாதமே நடந்தது.


அதற்கு விடை தரும் வகையில் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக பெரிய கோவிலுக்குள் சென்றார் கருணாநிதி.
ஏன் இப்படி?
எல்லாம் பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கைதான்!
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு பின்னர் மரணமடைந்தது போன்றவற்றை இந்த மூட நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் சில அரசியல்வியாதிகள்.
ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவார் என்றே பலரும் நம்பினர். ஆனால் தீவிர நாத்திகம் என்பதெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம்தான் என்பதை முதல்வர் மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்.
உபதேசம் செய்பவர்கள் முதலில் தங்களால் அதைக் கடைப்பிடிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்
. இல்லாவிட்டால் தாங்களும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதை ஒப்புக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். எதற்கு போலி பகுத்தறிவுவாதி வேடம்?
-என்வழி

No comments:

Post a Comment