Tuesday, December 15, 2009

வெந்ததைத் தின்று வாழ்பவரும், தானைத் தலைவரும்...










தானைத் தலைவருக்கு,
[Karunanidhi and Rajapakse]

இந்த தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள். ‘என்னடா, இவன் தன்னைத் தானே தறுதலைன்னு சொல்லுறானேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க தலைவரே புள்ளைகளுக்கெல்லாம் அப்பன் வெக்கறது தானுங்க பேரு. வேலை வெட்டி எதுக்கும் போகாம நீங்க குடுத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டில நீங்களும் உங்க வாரிசுகளும் வகைவகையா நடத்துற சேனல்கள்ல படம் பாட்டுத்துட்டு ஊர் மேஞ்சுட்டு இருந்ததனால ஊர அழைக்காமலேயே எங்கப்பன் எனக்கு வெச்ச ரெண்டாவது பேரு தானுங்க இந்த தறுதலைங்கற பேரு. பேரு நல்லா இருக்குங்களா தலைவரே?

என்ன பண்ணித் தொலைக்கிறது தலைவரே எங்கப்பன் அம்பானி மாதிரி சொத்து சேத்து இருந்தா எனக்கு அதகொடுத்துருப்பாரு. இல்ல உங்கள மாதிரி அரசியல் செல்வாக்கு சேத்து வெச்சிருந்தா வெளங்காத என்ன மாதிரி புள்ளைக்கு ஒரு பதவியவாவது தூக்கி கொடுத்திருப்பாரு. அந்தாளே ஊர்ஊராப் போயி வேலைதேடி கல்லு மண்னு சொமந்து எனக்கு சோறுபோட்டு “வெந்ததத் தின்னுட்டு விதிவந்தா சாகலாம்னு” இன்னைக்கு செல்லாக்காசா உக்காந்துட்டு இருக்காரு. அந்தாளுகிட்ட தறுதலை தண்ட சோறுங்கற பேர தவிர எனக்கு தூக்கிக் கொடுக்க ஒன்னுமில்ல. அதனால போனா போகுதுன்னு அதையே நானும் வாங்கிகிட்டேன்.

பேரு கிடக்குது தலைவரே பேரு. நமக்கெல்லாம் சோறு தானே முக்கியம். அதனால பேசாம கிடக்கிறேன். நீங்க குடுக்குற ஒரு ரூவா அரிசியில பொங்கிப்போடறதுக்கே எங்கப்பனுக்கு இத்தனை ஓப்பாளம். கேட்டா பருப்பு 98 ரூவா, பாலு 48 ரூவான்னு பாட்டு பாடறான் அந்த மனுசன். எதுத்தும் பேச முடியல. பேசுனா குடும்பம் ரெண்டாபோயிடும். நமக்கென்ன தலைவரே நாலஞ்சு டி.வி. சேனலா இருக்கு. குடும்பம் ரெண்டானா சேனல் 16 ஆகும்னு கணக்குப்போட்டு காய் நகத்தறதுக்கு? வீட்ட விட்டு வெளிய வந்தா சோத்துக்கே சிங்கியடிக்கனும். மானம் ரோசம் பாத்தா வயித்த யாரு பார்க்கறதுங்கறதாலதான் அடங்கிப் போயிட்டிருக்கேன் தலைவரே.

எல்லா அப்பனும் உங்கள மாதிரி இல்லாட்டியும் அட்லீஸ்ட் அம்பானி மாதியாவது சொத்து சேத்து வெக்கணும்னு ஒரு ஆடர் போடுங்க தலைவரே. ‘என்ன எழவு ? அப்பவும் “சப்பான்ல சாக்கிசான் கூப்பிட்டாக.. அமொpக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக ங்கற மாதிரி” இலவசமா டி.வி. கொடுத்தீக.. கேஸ் கொடுத்தீக.. நெலம் கொடுத்தீக.. இதையும் நீங்களே குடுங்கன்னு, அதுக்கும் இந்த பிச்சக்காரக் கூட்டம் உங்ககிட்டதான் கையேந்தி நிக்கும். அதையும் குடுத்திட்டீங்கன்னா நீங்க யார்கிட்டயும் ஓட்டுக்காகக் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. வரிசைல வந்து நின்னு ஓட்ட மாறிமாறி உங்களுக்கே குத்திட்டு போயிட்டே இருப்பாங்க. ஐடியா நல்லா இருக்குங்களா தலைவரே? மனசுல வெச்சுக்குங்க 2011 ல கூட்டணி சம்பந்தமா காங்கிரஸ் கூட ஏதாவது பிரச்சனை வரலாம் அப்படி வந்தா தேர்தல் அதுகள கழட்டிவிட்டுட்டு தேர்தல் அறிக்கைல இத சேர்த்திடுங்க. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.

எனக்கென்னமோ 2011ல இந்த காங்கிரஸ்காரன் கட்டாயம் தகராறு பண்ணுவான்னுதான் தோணுது. இப்பவே பாருங்க இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோன்னு ஒன்னு ஏட்டிக்குப் போட்டியாவே பேசிட்டுத் திரியுது. என்னடா தைரியமா பேரச் சொல்றானேன்னு பாக்கறீங்களா. அட அதனால என்னங்க அதென்ன மானநஷ்ட வழக்கா போடப்போகுது. அதெல்லாம் இருக்கிறவன் போட்டாதான் செல்லும் தலைவரே.

கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு போறதுக்கே பக்கத்து நாட்டுக்கு படையெடுத்து போறது கணக்கா பத்து பதினஞ்சு செட் வேட்டி சட்டை எடுத்துட்டு போய் கடைசீல திரும்பி வரும் போது எல்லாங் கிழிஞ்சி அண்டர் டிராயரோடு வர்ற கூட்டம்தானுங்க தலைவரே இவங்க. அவங்களுக்குத் தெரியும் அவங்களோட வெக்கம் மானத்தப்பத்தி, அதனால அப்படியெல்லாம் எதுவும் செய்ய துணியமாட்டாங்கத் தலைவரே. புதுசா எந்த வழக்குலயும் ஜாயின்ட் பண்ணமுடியலங்கற வருத்தத்துல இந்த சுப்பரமணிசாமி எதாவது முயற்சி பண்ணினா காங்கிரஸ்காரங்களும் அதப்பத்தி யோசிக்க ஒரு வாய்ப்பிருக்கு. ஏன்னா எதுவோ கெட்டா குட்டிச் சுவருதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்குங்க தலைவரே.

அது செரிங்க தலைவரே இந்த தமிழ், தமிழ்னு பேசிட்டுத் திரியற பத்துப் பதினஞ்சு பசங்க சேந்து மாவீரர் தினம் கொண்டாடினாங்களே உங்களுக்கு ஏதாச்சும் நியூஸ் வந்துச்சுங்களா? மன்னிச்சுக்கங்க தலைவரே உகாண்டால ஏதாச்சும் நடந்தாவே உங்களுக்கு நியூஸ் வந்துரும். உள்ளூர்ல நடந்தது தெரியாமயா இருக்கும். அதுல அவங்க பிரபாகரன் படத்த வெச்சாலோ இல்ல பிரிஜ;பாஸி அட்லாஸ வச்சாலோ இந்த இளங்கோவனுக்கு என்ன போச்சு? உலகத் தமிழினத் தலைவர் நீங்களே பேசாம இருக்கும் போது கதர் சட்டக்காரனுக்கென்ன அடிவயித்துல தீய வெச்சமாதிரி அப்படி எரியுது?

தமிழ்நாட்டுல யார் படத்த வெக்கலாம் வெக்ககூடாதுனு சட்டம் எதாவது இருக்குதுங்களா தலைவரே? அட அப்பிடியே இருந்தாலும் அத நீங்கதானே சொல்லனும், இதுகெல்லாம் எப்படி அதபத்தி பேசலாம் நீங்களே சொல்லுங்க தலைவரே. இதனால உங்களுக்குத்தானே கெட்ட பேரு. ஊர்ல எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

அதான் தலைவரே பரமசிவன் கழுத்துல இருந்து பாம்பு கருடனைப் பார்த்து கேட்டுச்சாம ‘கருடா சௌக்கியமான்னு’ கருடனோட நிழல பாத்தாலே ஓடி ஒழியற பாம்பு பரமசிவனோட கழுத்திலே இருந்த ஒரே தைரியத்துல கருடனைப் பாத்து “கருடா சௌக்கியமான்னு” கேட்ட கதையா உங்களோட கூட்டணியில இருக்கிற ஒரே ஒரு தைரியத்துலதான் தமிழ்ங்கற பேரக்கேட்டாலோ இந்தியாவோட தேசிய விலங்கு என்னானு கேட்டா புலின்னு சொல்ல கூட பயப்படற அந்தகதர் கூட்டம் பிரபாகரனோட பேனரையே கிழிச்சுப் பாத்துச்சாம். இளங்கோவன் பாம்பாம் நீங்க பரமசிவனாம். இதெல்லாம் தேவைங்களா தலைவரே உங்களுக்கு. ஒரு பழுத்த பகுத்தறிவுவாதிய எதுக்கெல்லாம் ஒப்பிடறாங்க பாருங்க.

உங்களுக்கு மறந்திருக்காது இருந்தாலும், திருச்சி செல்வேந்திரன் ஐயா முன்னாடி ஒரு கூட்டத்துல பேசுனத மறுபடியும் இங்க ஒரு தடவ சொல்ல வேண்டியது என் கடமை.

“ஒரு காங்கிரஸ் அமைச்சருக்கு அவசரமா ஒன்னுக்கு வந்துச்சாமா. சரி பக்கத்து ஊருக்குப் போய் போய்க்கலாம்னு அடி பொடிகளோட பஸ் புடிக்க போனாராமா. அந்த காலத்துல பஸ்சுல ஓவர் லோடு ஏத்தக் கூடாது. அதனால கண்டக்டர் , ஐயா ஏற்கனவே, பஸ் புல் ஆயிருச்சு; இத்தன பேர ஏத்த முடியாது. அதனால அடுத்த பஸ்சுல வாங்கன்னு சொன்னாராம். ஊடனே காங்கிரஸ் அமைச்சருக்கு வந்துச்சே கோவம். யோவ் நான் மினிஸ்டரு. என்னையே ஏத்த மாட்டீங்கறீயான்னு கண்டக்டரை நாலு ஏத்து ஏத்த, போனா போய்தொலையட்டும்னு அத வண்டியில ஏத்திட்டுப் போனாராம்.

அடுத்த நாள் கண்டக்டருக்கு அவங்க ஆபீஸ்ல இருந்து அழைப்பு வந்துச்சாம். போய் பார்த்தா… அங்க அவரோட மேலதிகாரி முன்னாடி காங்கிரசு அமைச்சர் உட்காந்திட்டு இருந்தாராம். மேலதிகாரி ஐயா, இந்த ஆளா பாருங்கன்னு கண்டக்டரை கைகாட்ட, மினிஸ்டரும் ஆமா அவன்தான்னு அடையாளம் காட்டுனாராம்.

உடனே மேலதிகாரி யோவ் நேத்து இந்த ரூட்ல போன நீ உன்னோட பஸ்சுல ஓவர் லோடு ஏத்தினியாமான்னு கேட்க, கண்டக்டர் இல்லன்னு பதில் சொன்னாராம். உடனே மினிஸ்டர் அவன் ஏத்தினது உண்மைன்னு சொன்னாராம். மேலதிகாரி, ஐயா அது உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டாராம். உடனே மினிஸ்டர் அவரு ஏத்திட்டு போனதே என்னத்தான்னு சொன்னாராம்.

கண்டக்டர் அப்பவும், இல்லவே இல்லைன்னு சொல்ல, சட்டுன்னு மினிஸ்டர் என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொன்னாராம். என்ன ஆதாரம்னு மேலதிகாரி கேட்க நேத்து நான் போன டிக்கெட்டு இதோ இருக்கு இந்தாங்கன்னு மேலதிகாரிக்கிட்ட கொடுத்தாராம்.

மேலதிகாரி டிக்கெட்ட வாங்கிப் பாத்துட்டு, ஐயா இதுக்கெல்லாம் அவர்மேல நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு சொல்லி கண்டக்டர அனுப்பிச்சிட்டாராம்.

ஏன் தெரியுமா? ஏன்னா அந்த டிக்கெட்டுல லக்கேஜ்ன்னு எழுதி இருந்துச்சாம். ஆக காங்கிரஸ்காரன லக்கேஜ்ன்னு முதல்முதலா கண்டுபிடிச்சது ஒரு கண்டக்டர் தான்யா”

தலைவரே, இத நான் சொல்லல. வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் சொன்னது. ஒரு கண்டக்டருக்கு தெரிஞ்ச விஷயம், பத்து பதினஞ்சு வாரம் டாப் 10ல முதலிடத்தப் பிடிச்ச உளியின் ஓசை மாதிரி உன்னதமான படம் கொடுத்த உங்களுக்குத் தெரியாம இருக்குமா? அப்புறம் ஏன் இன்னும் இதுகள தூக்கி சுமக்கறீங்க.

அதுக்கு இந்த வீரமணி மாதிரி ஆளுகள கூட வெச்சுக்கறது எவ்வளவோ மேல் தலைவரே. ஏன்னா தேவைப்படும்போது Law Point எல்லாம் புடிச்சு கொடுப்பாரு. கூடவே வெச்சிருக்கிற நன்றிக்காக அவரு சந்தோசமா அண்ணா விருதெல்லாம் உங்களுக்குக் கொடுப்பாரு. நீங்களும் அதுக்குப் பதிலா அவருக்கு பெரியார் விருது குடுத்து கௌரவிக்கலாம். குடுத்து வாங்கற உங்களுக்கும் சந்தோஷம் பாத்துட்டிருக்குற ஜனங்களுக்கும் ஒரு சந்தோஷம். ஆனா இந்த லக்கேஜுகளால யாருக்கு சந்தோஷம் சொல்லுங்க பாக்கலாம்.
அப்புறம் தலைவரே இந்த அம்பது அறுபது பவுன்ல உங்களுக்கு வர்ற செயின் மோதிரமெல்லாம் கலைஞர் கருவூலத்துக்கே குடுத்துடறீங்களே தலைவரே. நீங்க உங்களுக்குன்னு ஒன்னாச்சு வெச்சுக்கக் கூடாதா? ஆமா அந்த கருவூலத்தோட வேலை என்னங்க தலைவரே.



நீங்க அதுக்கு குடுக்குற நகையெல்லாத்தையும் இரண்டு இரண்டு பவுணா பிரிச்சு நாட்ல நகை போட வக்கில்லாதவ‌ன் பெத்த புள்ளங்களுக்கெல்லாம் நகைபோட்டு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுங்களா? என்னமோ போங்க தலைவரே உங்களுக்குன்னு நீங்க எதையாவது சேர்த்து வெச்சிக்குங்க தலைவரே! ஏன்னா எங்கப்பன மாதிரி கடைசி காலத்துல எதுவுமே இல்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற நெலமைக்கு வந்துடக் கூடாதில்லங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க தலைவரே.

சரி அத விடுங்க நம்ம லக்கேஜ் பிரச்சனைக்கு வருவோம். ஆக 67ல் ஆட்சிய பறிகொடுத்துட்டு அட்ரஸ் இல்லாம தொலஞ்சு போன இந்த லக்கேஜூகள ஒவ்வொரு தடவையும் நீங்க ஏன் தூக்கிட்டு அலையனும் அப்பறம் ஏன் முடியாம போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகனும். யோசிச்சுபாருங்க.

ஏற்கனவே இந்த தமிழ் தேசிய கோஷ்டிகள் எல்லாம் உங்கள கரிச்சு கொட்றாங்க. இலங்கைல ஒன்றரை லட்சம் தமிழர்கள் சாகறதுக்கு உங்க பதவி பயம்தான் காரணம், நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா, அவங்கள பாதுகாத்திருக்கலாம். இராஜபக்சேவோட சிங்கள பேரினவாதத்துக்கு நீங்களும் மன்மோகன் சிங் அரசும் துணை போறதா குற்றம் சாட்றாங்க.

நீங்க அனுப்பின குழு பண்ண கூத்துல திருமாவளவனுக்கு கதாநாயக வேஷம் கெடைக்கும்னு பாத்தா கடைசீல ராஜபக்சேக்கு அந்த வேஷத்தைக் கொடுத்துட்டு திருமாவ காமெடி பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு. “திரும்பி வரும்போது தம்பி திருமாவளவா, மீசையை மழித்துவிட்டு வாடா என் கண்ணேன்னு” ஒரு தந்தியாவது அடிச்சிருக்கலாம் நீங்க. திரும்பி வந்ததுக்கப்புறம் அவர அடையாளமாவது தெரியாம இருந்திருக்கும். அதே நேரத்துல நீங்களும் “நெஞ்சில் தமிழர்தம் நல்வாழ்வெனும் முத்துச் சுமையேற்றி கத்து கடல் சீறிச் செல்கையில் குத்து விளக்கிங்கொன்றை செத்து மடிய விட்டுச் செல்கின்றோம் என நினைப்பாயா தம்பி திருமா எனக் கேட்டேன். அதற்கு அவரும் மாட்டேன் தலைவா உம்மை மறந்தாலன்றோ நினைப்பதற்கு” என கூறிச் சென்றான். ஆனால் அவர் மட்டும் திரும்பவில்லைனு தேனமுதுல எழுதுன மாதிரி எழுதிட்டு நந்தி கடல் முழுக்க தேடியாவது, இல்லை வங்க கடல் முழுக்க சல்லடையிட்டு சலித்தாவது பிரபாகரனின் சடலத்தை பார்த்து கை குலுக்கிவிட்டுதான் திரும்புவான் என் தம்பின்னு கேப்புல கெடா வெட்டி இருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் வழியில்லாம அவரு மீசையோட திரும்பிட்டாரு, என்ன பண்ண தலைவரே! அங்க அவரு பேசுன பேச்சு பத்தாதுன்னு இங்கவந்து வேற எழுதறாரு அத வேற நாங்க படிச்சி தொலைக்கணுமான்னு தமிழ் கோஷ்டி கேக்குது என்ன பண்றது தலைவரே.

அவருக்குப் பதிலா நீங்க இந்த சத்தியராஜை அனுப்பி இருக்கலாம். ஏன்னா அவரு இன்னும் மனோகரா வசனத்தையெல்லாம் மனப்பாடமா சொல்லறாரு அட கொஞ்சம் வீராவேசமா பேசியாவது காட்டியிருப்பாரில்லைங்களா தலைவரே. என்ன அவரு நெஜமாலுமே பேசிட்டா சிக்கல்தான் அதுனால அவரு செரிப்பட மாட்டாருன்னு நீங்க நெனச்சிருக்கலாம். எப்படிப் பாத்தாலும் யார்யாரோ பண்ற தப்புக்கெல்லாம் உங்களுக்குதான் கெட்டபேரு வருது, மனசுக்கே கஷ்டமா இருக்குதுங்க தலைவரே. “ஆண்டவரே, இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்தருளும்” ன்னு சொன்ன ஏசுநாதருடைய இன்னொரு வடிவமா அன்பின் உறைவிடமா இருக்கிற தலைவரப் பத்தி இப்படி எல்லாம் பேசலாமான்னு கேட்டா “ராஜபக்ஷே தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்துவிட்டார். அவரை மன்னித்தருளும் ஆண்டவரேன்னு” கூட உங்க தலைவர் வேண்டுவாருன்னு சொல்றாங்க. உங்கள எல்லாரும் இப்படி பேசுறத கேக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குங்க தலைவரே. ஊங்களுக்கு கஷ்டமா இல்லீங்களா தலைவரே.

இதுல இந்த எல்லா விஷயத்தையும் மறைக்கத்தான் நீங்க செம்மொழி மாநாடு நடத்துறீங்க. அதுவும் கோயமுத்தூர் பக்கம் சரிஞ்சு கிடக்கிற கழக மார்க்கெட்டை தூக்கி நிறுத்தத்தான் அதை கோயமுத்தூர்ல நடத்துறீங்கன்னு கூட உங்க மேல பழி சொல்றாங்க தலைவரே. தமிழ் வளர்ச்சியில, தமிழனோட நலத்துல உங்களுக்கு இருக்கிற அக்கறைய யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. விட்டா எல்.கே.ஜி. பையன் பக்கத்துல இருக்கிற பையன கிச்சுகிச்சு மூட்டுனாலோ இல்ல கிள்ளி வெச்சாலோ கூட இதற்கு காரணம் இந்த கருணாநிதி தான்னு கண்டன பொதுக்கூட்டம் போட்டாலும் போடுவாங்க தலைவரே கொஞ்சம் கவனமா இருங்க.

மாநாட்டு வேலய உட்டு போட்டு மணிகணக்கா உங்களுக்கே எழுதீட்டு இருக்கறேன் மன்னிச்சுருங்க தலைவரே. அப்பறம்… இந்த மாநாட்டுல flex வெக்கறதுக்காக சில வாசகங்கள் எழுதியிருக்கேன் சரியா இருக்கானு நீங்க படிச்சுட்டு பதில் எழுதுங்க தலைவரே

“ தென்னாடுடைய தலைவா போற்றி

என்னாட்டு தமிழனுக்கும் இறைவா போற்றி

இந்திய தமிழனின் முதல்வா போற்றி

ஈழத் தமிழனின் ஈசனே போற்றி

இதுமாதிரி மகத்தான வேலய பார்த்திட்டு இருக்கும்போது கூட உருடியா ஒரு வேலயாச்சும் பண்றியா நீ தண்டசோறு தண்டசோறுன்னு எங்கப்பா திட்டீட்டேதான் இருக்காரு தலைவரே. அணணா பிறந்த நாளுக்கு கைதிகளுக்கு விடுதலை கொடுக்கிற மாதிரி உளியின் ஓசை படத்துக்காக உங்களுக்கு நீங்களே விருது குடுக்கிற இந்த நல்ல நாள்ல் எங்கப்பனையும் மன்னிச்சுருங்க தலைவரே ஏன்னா பாவிகள மன்னிக்கிற பக்குவம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு.
இப்படிக்கு
பெற்ற தகப்பனால் தறுதலை என்றழைக்கப்படும்
இரா.செந்தில்குமார்
Source: http://tamilthesiyam.blogspot.com/2009/12/blog-post_14.html

Monday, November 30, 2009

குத்துக்கரணம் அடிக்கும் கருணாநிதி










தமிழினத்தின் துரோகி கருணாநிதி செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போது திடிரென ஒரு கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். உலக தமிழினத்தின் தலைவராக வேண்டும் என்ற இரட்டை வேட முயற்சியில் தமிழின துரோகி என்ற பட்டத்தால் வெந்து போயுள்ள ஐயாவின் கேள்வி பதில்.


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?” என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?

பதில்: நான் எனது கடிதத்தில், “இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது” என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.

இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.

இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் “சகோதர யுத்தம் நடத்தியதால் தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?” என்று ஒரு கேள்வியும் அந்த இதழில் கேட்கப்பட்டு, அதற்கும் உங்களைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே?

பதில்: இதுவும் நான் சொல்லாததுதான். சகோதர யுத்தம் நடந்தது என்று சொல்லியிருக்கிறேன். அதனால் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதிலே என்ன தவறு என்று தெரியவில்லை.

கேள்வி: “மாவீரன் மாத்தையா” என்று நீங்கள் ஒரு துரோகியை அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்லியிருக்கிறாரே?

பதில்: மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான்! அப்போது அவரை மாவீரன் மாத்தையா என்று தான் அறிமுகம் செய்துவைத்தார்.

கேள்வி: அந்த இதழில் வந்த பேட்டியில் “வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டது என்று வேதனைப்படுகிறாரே கருணாநிதி?” என்ற ஒரு கேள்வியும் இடம் பெற்று, அதற்கும் பேட்டி அளித்தவர் எந்த அளவிற்கு உங்களைத் தாக்க முடியுமோ அந்த அளவிற்கு தாக்கி பதில் அளித்திருக்கிறாரே?

பதில்: இந்த கருத்து நான் எழுதியது தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதிலே என்ன தவறு? “விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு தளபதிகளுக்கு தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக்கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இது போன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்” என்று நான் எழுதியது உண்மைதான். இதிலே எந்தப் பிழையும் இருப்பதாக நான் இப்போதும் உணரவில்லை. நாம் கூறியதை அலட்சியப்படுத்தி இப்போது நம்மைத் தாக்கி மிக வேகமாக பதில் சொல்லியிருப்பவர்கள் சொன்ன யோசனைகளையெல்லாம் கேட்ட காரணத்தினால்தான் இன்று இலங்கை தமிழினம் அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாகி தவிக்கின்றது என்பதுதான் ஆதாரபூர்வமான உண்மை!

வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு நம்மைத் தாக்க வேண்டுமென்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்கத் தோன்றும். வீரத்தையும், விவேகத்தையும் பற்றி நான் இப்போது கூறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய “சாக்ரடீஸ்” ஓரங்க நாடகத்திலேயே “வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும், தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!” என எழுதியிருக்கிறேன். அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர்கள்தான் இப்போது அதனை இழித்துரைக்கிறார்கள். எனக்கு அப்போது பேசியதுதான் மனதிலே நிற்கிறது.
Source: http://kavishan.blogspot.com/2009/11/blog-post_4290.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FOYnN+%28%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29

Monday, November 23, 2009

சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்: சங்கிலியன்





ஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில் தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.

தமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

அதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.

தனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.
இப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.
பாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.
- சங்கிலியன்

Wednesday, November 18, 2009

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்







[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 04:44.28 AM GMT +05:30 ]

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)

கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.
மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.
இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்






Tuesday, November 17, 2009

பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு




பேரன்புக்குரிய கலைஞர் கருணாநிதிக்கு,
வணக்கம்.

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது என்றிருந்த காலமும் மாறி நாமும் கொஞ்சம் மாறியிருக்கிறோம்.

குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை. பிள்ளை கண்ணிவெடியில் சிக்கி கால்களை இழந்திருக்கிறது, தங்கை சித்தப்பிரம்மையாய் அலைகிறாள், மனைவியோ எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு.... என பலருடைய காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மீளக் குடியமர்த்துகிறார்கள். உண்மைதான். வேதனைகளின் ஈரம் இன்னும் காயாமல் இருக்கும்போது பழைய கிராமத்தை பார்க்க முடியவில்லை. அரசமரத்தடிப் பிள்ளையார் முதல் அஞ்சலகம் வரை எதுவுமில்லை. அடையாளமும் இல்லை.
அதே சந்தோசத்தை, அதே நினைவுகளை இனிவரும் காலம் மீளப்பெற்றுத்தருமா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

ஆம்! நாம் மீளக்குடியமர்த்தப்பட்டோம் குடிதண்ணீர் இல்லாமல்...
மீளக்குடியமர்த்தப்பட்டோம் மின்சாரம் இல்லாமல்...

எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்।
எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு, நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா।
அனுபவித்தால் தான் தெரியும்। கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் ஆனால் மௌனம் காத்தீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்।
ஆனால் பதில்கேட்க மறுத்தீர்கள்.
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। இடைநிறுத்தினீர்கள்.

எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?

எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।

நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்। பனைமரங்களுக்குள் நாம் அடைகாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்।
அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।

எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।

கலைஞரே,
எமக்கான தேவையை இந்த வரிகளுக்குள் அடக்கிவிட முடியாது. முடியுமானால் எம்மை நீங்கள் வந்து பாருங்கள். நீங்கள் தவறு செய்தீர்களா இல்லையா என்பதை அப்போது உணர்வீர்கள்.

ஐயா,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்
Source: http://puthiyamalayagam.blogspot.com/2009/11/blog-post_13.html

Monday, November 9, 2009

விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்…

“ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.


ஆறு மாதக்காலத்திற்குப்பின் திடீரெனக் கலைஞருக்கு ஈழத்தமிழர்மேல் கரிசனைப் பிறக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் கேட்காத இராஷபட்சே, கருணாநிதியின் குழு இலங்கை சென்று வந்தவுடன் ,மக்களை முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதித்திருக்கிறார்.



“இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது! முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார். விம்மி அழுத அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? “ - என அறிக்கை வெளியிடுறார் கருணாநிதி.



என்ன ஒரு நாடகத்தனமான அறிக்கை, அதிகாரமும், மீடியா பலமும் இருக்கிறது என்ற காரணத்தினால் தான் கற்பனையாக கூறுகின்ற எதையும் தமிழக மக்களை நம்ப வைத்துவிடலாம், தன்னிடம் அடிபொடிகளாக இருக்கும் அறிவு ஜீவிகளையும், அமைச்சர்களையும், சினிமாக்காரர்களையும் விட்டு ஆதரவு அறிக்கை வெளியிட்டால், தனக்கு தமிழினத் தலைவர் பட்டம் கிடைத்து விடும் என்று கணக்கு போடுகிறார் கலைஞர்.



ஈழத்தமிழினம் எதற்காக போராட ஆரம்பித்ததோ அந்தக் காரணங்கள் இன்றும் ஆழிந்துவிடவில்லை, அது சிங்கள இனவெறியாலும், துரோகத்தாலும் பல்கிப் பெருகி, இன்று அந்த மக்களின் உயிரையும், வாழ்க்கையையும் வேட்டையாடி விட்டது.



சொந்த இனம் வேட்டையாடப்படும் போதும் தனது ஆட்சிக்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாது என ஆஸ்பத்திரி நாடகம், நீதிமன்ற தடியடி, கண்ணீர் அறிக்கைகள், கைதுகள் என சிங்கள அரசு இன ஒழிப்பு நடத்தி முடிக்க கால அவகாசம் வாங்கித்தந்த கலைஞர் இன்று எதுவுமே நடக்காதது போல் அந்த மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப போகின்றனர் என்கிறார்.



காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிருந்து இறக்கிவிட்டு திராவிடக் கட்சிகள் ஆட்சியை பிடிக்க காரணமாயிருந்த மொழிப் போரில் தீக்குளித்த தியாகிகள் 6 பேர், ஆனால் கடந்த ஒரு வருடத்தில் ஈழப்பிரச்சினைக்காக தீக்குளத்தவர்கள் 16 பேர், அனைத்து தரப்பு மக்களும் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவற்றிற்கு கருணாநிதி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்துவிட்டு, 8 கோடித் தமிழனை ஒன்றரைக் கோடிச் சிங்களவனிடம் கெஞ்சச் சொல்லும் இந்த புத்திசாலித் தலைவர், தமிழனுக்காக எல்லாம் செய்தது போல் நாடகம் ஆடுகிறார். சகோதரப் போர்தான் இத்தனை இழப்புகளுக்கும் காரணம் என்று கதை பேசுகிறறார். சகோதரப் போர்தான் காரணம் என்றால் 2000 ல் சிங்களவனை விரட்டி அடித்தது எப்படி ? உலக நாடுகளையும், சிங்களவனையும் பேச்சு வார்த்தை மேசையில் உட்கார வைத்ததெப்படி?, செப்டம்பர் 11 க்கு பிறகான உலகின் தவறான தீவிரவாதக் கொள்கையும், கருணாக்களின் சுயநலமும் தான் இன்று ஈழம் பிணக்குவியல்களும், பிச்சைக்காரர்களும் நிறைந்த தேசமாய் மாறிப்போனதற்கு காரணம்.



சகோதர யுத்தமே காரணம் என்று பழைய கதையை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த இராஷதந்திரி கடந்த ஒரு வருடத்தில் இவர் ஆடிய நாடகங்கள் எத்தனை?.

ஈழத்தில் இந்திய போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவோம் என்றார். விலகினாரா ?
மூன்று முறை ஈழப் போரை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். என்ன நடந்தது ?
ஈழப்போரை நிறுத்த சொல்லி பிரதமருக்கு அடித்த தந்திக்கு என்ன பதில் வாங்கித் தந்தார்?
போராட்டங்களும், தேர்தலும் முடிந்த பிறகு கலைஞருக்கு ஏன் உடல் நலக்குறைவு ஏற்படவில்லை.
கலைஞர் ஏன் இத்தனைப் பேர் மீது தேசியப்பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சினார். அவர்கள் ஏன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இப்பொழுது திருட்டுத்தனமாக இராஷபட்சே அழைத்தவுடன், அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பாமல் தன் ஆதரவு குழுவை அனுப்பும் கருணாநிதி ஏன் ஜனவரியில் இராஷபட்சே விடுத்த அழைப்பை ஏன் ஏற்கவில்லை?.

ஐநா சபையில் இலங்கையின் இன அழிப்புக்குச் சாதகமாக இந்தியா வாக்களித்தபோது, கூட்டணியில் முக்கியத்தலைவரான கருணாநிதி அதைத் தடுக்க என்ன செய்தார் ?.



குடும்ப நலனென்றால் எந்த முறையில் பேச வேண்டும். தமிழர் நலன் என்றால் எந்த முறையில் பேச வேண்டும் என நன்கறிந்த இந்த இராஷதந்திரி, இனவிடுதலைக்காய் சயனைடு குப்பியுடன் எந்த நேரமும் மரணத்தை எதிர்நோக்கி போராடிக் கொண்டிருந்தவர்களை இந்த அறிக்கைப் புலி குறை சொல்கிறார்.



கலைஞர் அவர்களே வாக்குக்கு மாற்றாக நோட்டையும், இலவசங்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டு “ மானாட மயிலாட”, “எல்லாமே சிரிப்புதான்” . பார்த்து வரும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு முதல்வராய் இருந்து விட்டு போங்கள். ஆனால் மொத்த தமிழினமும் அவ்வாறனதல்ல.



இனத்திற்காய் ஆயுதம் தாரித்தும், நெருப்பில் வெந்தும் இறந்து போன 38 ஆயிரம் வீரர்களை கொண்டது, இலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்த இனம், அதிகார பலமும், அரசியல் பலமும் இல்லாது போனாலும் வல்லரசுகளையும் நியாயம் கேட்கும் கூட்டம், குடியேறிய நாடுகளில் எல்லாம் இரண்டாம் தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்றாவது ஒரு நாள் கௌரவமாக வாழ முடியும் என்ற கனவுகளுடன் வாழும் மக்களையும் கொண்டது.

ஆனால் குடும்ப நலத்திற்காய் சோனியாவிடம் அடிமையாய் இருக்கும் நீங்கள் விடுதலைக்காய் போராடும் ஒரு சுய மாரியாதைக் கொண்ட இனத்தின் தலைவனாக இருக்க முடியாது.



நாங்கள் பொரியாரின் சுயமாரியாதையையும், காமராசாரின் அரசியல் தூய்மையாகவும், பிரபாகரனின் அர்ப்பணிப்புடன் கூடிய வீரத்தையும் கண்ட இனம், அவர்களுடன் ஒப்பிடும் போது 80 வயதிலும் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் உழைக்கும் உங்கள் தகுதி என்னவென்று உங்களுக்கே தெரியும்.



கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச மக்களின் தொடர்பில் இருந்து ஈழமக்களை தீவிரவாதத்தின் பெயரால் தனிமைபடுத்தி சிங்கள அரசியலும், இராணுவமும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன.



தங்களது அதிகாரத்திற்கும், குடும்ப நலத்திற்குமாய் தமிழகத்தில் எழுந்த அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து ஈழத் தமிழினத்திற்கு நடந்த கொடுமைக்கு எங்களையும் பங்கேற்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விட்டீர்கள்.



ஆனால் புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூறி போராட்டம் நடத்தியதன் விளைவாக ஓரளவு அந்தந்த நாடுகள் இலங்கையின் அத்துமீறல்களை கண்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கருணாநிதியின் சுயநல அரசியல் விளையாட்டும், அதிகார, மீடியா பலமும் அதனை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்போல் தெரிகிறது .



இதுவரை சிங்கள இனவெறி அரசு எந்த விசயத்தில் நேர்மையாக நடந்து கொண்டது. இப்பொழுது அது 58 ஆயிரம் மக்களை விடுவிக்கிறோம் என்று கூறியவுடன் புளகாங்கிதம் அடைந்து அறிக்கை வெளிவிடும் கலைஞரும், அவர்களது குடும்ப செய்திப் பிரிவும், கலைஞரைப் பாராட்டி சுவரொட்டி ஒட்டும் உடன் பிறப்புகளும்.

அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள்?
அவர்களின் பெயர்ப்பட்டியல் என்ன?
இராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்படுபவர்களும், விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இணைக்கப்பட்டால் என்ன செய்வது?
விடுவிக்கப்படுவர்கள் சர்வதேச அமைப்புக் கண்காணிப்பின் கீழ்தான் விடுவிக்கப்படுகிறார்களா? அவர்களை சர்வதேச அமைப்புகளும், பத்திரிக்கைகளும் சந்திக்க முடியுமா?
அவர்களின் சொந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா?


என எதை பற்றியும் ஆராயமல் ஈழத்திலுள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் திளைப்பது போல் பேசத் தொடங்கியுள்ளனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எனும் அடுத்த நாடகத்திற்காக.



உலகத் தமிழர் அனைவருககும் தலைவனாய் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் இடத்திலும் நீங்களில்லை, அதனை கண்டுகளிக்கும் மனநிலையிலும் தமிழினம் இல்லை.



நடத்தப்பட வேண்டியது உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு, யூத இனம் வாழும் நாடுகளெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கொள்கைகள், கொண்ட நாடுகளாக உள்ளன. ஆனால் தமிழன் வாழும் நாடுகளில் எல்லாம் அவன் இரண்டாம் தர குடிமகனாக நடத்தப்படுகிறான்.



6 ½ கோடி மக்கள் இருந்து தமிழனின் குரலைக் கேட்க இந்தியாவில் ஆளில்லை, ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழன் அதிகமாக வாழும் அனைத்து நாடுகளும் தமிழருக்கு எதிராகவே வாக்களித்தன.



எனவே உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கும், அரசியல் இருப்புகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். காலம் தாழ்ந்திருந்தாலும், உடனடியாக கூட்டப்பட வேண்டியக் கூட்டம் அதுதான்.



(நட்புக்காக : தனஞ்செயன்)
Source: http://anburajabe.blogspot.com/2009/11/blog-post_09.html

Friday, November 6, 2009

திருப்பணிக்குக் காத்திருக்கும் சோழர்காலக் கோயில்

நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அது போல இறைவன் வாழும் இடமாகிய ஆலயத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது மரபாகும். ஆலயம் முழுமையாகச் சிதைந்தோ, பிளவுப்பட்டோ, அஷ்டபந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வர்.


ஆகம சாஸ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாகப் பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாகவும், பன்னிரெண்டு வருடத்திற்கு தல விருட்சத்தில் இருந்து அனுக்கிரஹம் செய்வதாகவும், அதற்கும் மேற்பட்டால் தல விருட்சத்திலிருந்து நீங்கி, சூர்ய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம். ஆகவே இறைவனை நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது செய்யப்பட வேண்டும். இந்த வகையில் பூந்தோட்டம்-திருநள்ளாறு செல்லும் சாலையில், "சேஷ மூலை' என்ற கிராமத்தில் சிவாலயத் திருப்பணியை மேற்கொள்ளும் பாக்கியத்தை சில அடியார்களுக்கு இறைவன் அளித்துள்ளார்.


இக்கோயிலில் ஆதிசேஷன் பூஜை செய்து அவர் அருள் பெற்றதால் இந்த ஊரை "சேஷன் மூலை' என்றும், ஸ்வாமியை "சேஷபுரீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள அம்பாளின் பெயர் "திரிபுரசுந்திரி' ஆகும். இந்தச் சிலை மிக நேர்த்தியாக சதுர் புஜங்களுடன் உள்ளது. இங்கு அம்பாள், சுவாமியின் வலப் பாகத்தில் வரும் வண்ணம் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.


அம்பிகை இறைவனின் வலப்பாகத்தில் வீற்றிருக்கும் தலங்கள் "கல்யாணத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பாண்டிய மண்டலத்தின் அம்பிகை, மலயத்வஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்து சிவபூஜை செய்து சிவபெருமானை மணந்து கொண்டாள். இதைக் குறிக்க மதுரை மீனாட்சி, கல்யாணப் பெண்ணாக-சிவபெருமானுக்கு வலப்பக்கத்திலேயே கோயில் கொண்டுள்ளாள். நெல்லை காந்திமதி, மதுரை மீனாட்சி, குற்றாலம் குழல்வாய் மொழியாள் போல "சேஷ மூலை'யிலும் இறைவனின் வலது பாகத்திலேயே அம்பிகை எழுந்தருளியுள்ளாள்.


கல்யாண சுந்தரியாக அம்பிகை இங்கு காட்சி தருவதால், திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வேண்ட அவர்கள் குறை நீங்கும்.


சேஷபுரி ஆலயத்தில் "தரும நந்தி' என்ற அழைக்கப்படும் நந்தி பகவான் சிலை, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆலயங்களில் சிவபெருமானை நோக்கியவாறு நந்தியின் சிலை அமைக்கப்பட்டு இருக்கும். நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் தொப்புள் கொடிப் பந்தம் என்று கூறுவர். நந்தியின் மூக்கு, சிவபெருமானின் நாபிக் கமல உயரத்திற்கு இருக்கும்படி அமைப்பர். இதனால்தான் சிவபெருமானுக்கும், நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசனம் செய்தல் சிறப்பு. பல ஆலயங்களிலும் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடக்கும்.


நந்திதேவர் எப்பொழுதும் சிவலிங்கத்தின் முன், அதையே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால் அவருடைய அனுமதி பெற்று உள்ளே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும்.


சிவபெருமானின் வேக வடிவமாகக் கருதப்படுவது பைரவர் ஆகும். பைரவர் என்ற சொல்லுக்கு "பயத்தைப் போக்குபவர்' என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்துச் சந்நிதிகளையும் பூட்டி அந்தச் சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோயிலைப் பூட்டுவது மரபு. இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் "úக்ஷத்திர பாலகர்' என்று இவரைக் கூறுவர்.


"சேஷ மூலை' சிவாலயத்தைச் சுற்றி இக்கோயிலின் சுற்று வட்டாரத்தில் திருநள்ளாறு, அம்பர் மாகாளம், திருவீழிமிழலை, திருவேட்டக்குடி, காரைக்கால் போன்ற புகழ்பெற்ற சிவ ஸ்தலங்கள் உள்ளன. சேஷ மூலை ஆலயத்தில் தென்திசைத் தலைவனான தட்சிணாமூர்த்திக்கு சிறப்பாகக் கோட்டம் அமைத்துள்ளனர். இச்சந்நிதியில் இறைவன் மோன நிலையில், சின் முத்திரை தாங்கி அருள்பாலிக்கிறார்.


வடக்கு திசையில் துர்கைக்கு சந்நிதி அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெய்வம் வீற்றிருக்கும் இடமாக அமைவது கர்ப்பக்கிரகம் ஆகும். இந்த இடத்தின் மீது கூம்பு வடிவில் உச்சியில் கலசத்துடன் கூடிய கட்டிட அமைப்பே விமானமாகும். இந்தக் கோயிலின் விமானம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.


இக்கோயிலில் திருப்பணியையொட்டி "புனருத்தாரணம்' செய்யப்படவுள்ள சந்நிதிகள் : கர்ப்பக் கிரஹம், அர்த்த மண்டபம், ஏக தள விமானத்துடன் சிவனுக்கு தனி சந்நிதி, அம்பாளுக்கு தனி சந்நிதி, சிறிய நந்தி மண்டபம், நாகருக்கு சந்நிதி, பிள்ளையார், வள்ளி}தெய்வானை ஸமேத சுப்ரமண்யருக்கு தனி சந்நிதி ஆகியன.


சிவாலயத் திருப்பணி செய்தால் ஒருவரின் 21 தலைமுறைகள் இறைவனின் திருவருளைப் பெறுவதாகக் கூறுவர். முன்பு மிகப் பெரிய கோயில்களை அரசர்களும், இறைவனின் அடியவர்களும் கட்டி இறைப்பணியை எங்கும் பரப்பினர். ஆனால் நாம் நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களைப் பராமரிக்காமல் அவைகளைப் பாழ்படுத்துகிறோம். அதன் எதிர் விளைவாக இயற்கையின் சீற்றங்களை அனுபவிக்கிறோம்.


நாம் புதிய கோயில்களைக் கட்டுவதைவிட நம் முன்னோர்கள் நமக்கு அளித்த மிகப் பழமையான கோயில்களை பொக்கிஷமாகக் கருதி புனருத்தாரணம் செய்வதே பெரும் புண்ணியமாகும்.


"சேஷ மூலை" ஆலயத் திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், "எஸ். வரதராஜன்,

மொபைல் : 94449 17124, 98400 76964. வீடு: 24611244" என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Religion&artid=150780&SectionID=152&MainSectionID=152&SEO=&Title=

Monday, November 2, 2009

கனிமொழி கூஜா ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.
அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...
அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.
நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?
போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?
போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.
தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை?
போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?
ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.
ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.
அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.
நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.
இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.
நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.
தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்.
source:http://kuzhali.blogspot.com/2009/10/blog-post_31.html

Saturday, October 31, 2009

“உலகத்தமிழ் மாநாடு” கருனாநிதியின் குடும்ப சொத்தா ?

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.

சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி டில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல், யார் விபீஷணன் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதல்வர் கருணாநிதியை விபீஷணன், எட்டப்பன், காக்கைவன்னியன் ஆகியோரது மொத்த உருவம் எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
முதலில் எட்டாவது உலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறும் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே வெறுமனே “உலகத்தமிழ் மாநாடு” என அறிவித்தார். இப்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 24 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இது சாவீட்டில் கொட்டு மேளம் தட்டித் தாலி கட்டின கதையாக இருக்கிறது!
ஐந்து தடவை முதலமைச்சராக இருந்த போது வராத தமிழ்ப் பற்று இப்போது முதல்வர் கருணாநிதிக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. தண்ணீரில் மூழ்கினவன் ; துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைப்பது போல துருப்பிடித்துப்போன தனது படிமத்தைத் துலக்கவும்தமிழினத் தலைவர் அல்லர் தமிழினக் கொலைஞர் – என்ற வரலாற்றுப் பழியைப் போக்கவும் இந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு உதவும் என முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ், தமிழர் என்ற உணர்வு முதல்வர் கருணாநிதியால் அமைச்சர் பதவிகளாக, கோபாலபுரங்களாக மாற்றப்பட்டு விட்டன. பதவி ஆசை காரணமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ மக்களையும் சிங்கள பேரினவாதத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டார்.

தமிழ்மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, மனிதச்சங்கிலி, பதவி விலகல், உண்ணாநோன்பு, பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என நீண்ட நாடகத்தை அரங்கேற்றி சிங்கள – பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்குத் துணைபோனார்!

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

அண்மையில் ஒரு திமுக – காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அதில் அரசியல் குளிர் காய நினைத்தார். ஆனால் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரோன் ‘இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை’ என இனவெறி பிடித்த ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் ‘நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் அனைத்துலக தரத்தில் சிறப்பாகவே உள்ளது’ என்று திருவாய்மலர்ந்து வதை முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களது வெந்த நெஞசங்களில் வேலைப் பாய்ச்சினார்!

யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவிற்கு வலம்புரி இதழ் ‘சனீஸ்வரன்’ என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் செய்தியாளர்களிடம் “இலங்கையும் – தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார்.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்ற குழுவினர், திருமாவளவன் நீங்கலாக, நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சவின் குருதி நனைந்த கைகளைக் குலுக்கிப், பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பரிசுகள் பெற்று ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பினார்கள்.

ஆனால் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் அவரைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ‘இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!’ என்ற மலிவான அரசியல் பரப்புரை செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு பழம்பாடல் நினைவுக்கு வருகிறது. அது முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாவோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

ஆலமரத்தைப் பலாமரமாகச் செய்தல் முடியுமோ? நேராக்குவதற்கு இயலாத நாயினது வளைந்த வாலை தேராக நிமிர்த்த முடியுமோ? கருமை நிறமுடைய காகத்தை கிளியைப் போலும் பேசும்படியாகச் செய்வித்தல் ஆமோ? கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயலுமோ? ஆகாது என்பதாம்.

இப்போது நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனவரி 2011 ல் நடத்தலாம் என உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களின் வேண்டுகோளை முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டிப் புறந்தள்ளி விட்டார்.

இதனை அடுத்து உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி மாநாட்டை நடத்த மெத்தப் பாடுபடுகிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு வெளியே வலை வீசி இருக்கிறார். இதில் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

“தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இலங்கையில் தமிழர் அரசியல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்துப் பலத்த விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், நான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது வில்லங்கமான காரியம். எனது நிலைப்பாடு குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும்.செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும் அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்று சிவத்தம்பி கூறியிருந்தார்.

ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதைத் தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சிவத்தம்பி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது குத்துக் கரணத்தை நியாயப்படுத்தத் தான் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னது கிடையாது அப்படியாக யாரும் பொருள் கொண்டிருந்தால் தனது சொற்பதத்தில் உள்ள குறைபாடு காரணம் எனத் தமிழறிஞர் சிவத்தம்பி சமாளிக்கிறார்.

எமது முந்திய அறிக்கையில் கூறியிருந்ததை மீண்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்குச் சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை.

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு தந்தி கூட அடிக்க முடியாது. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
எனவே தமிழீழ மக்கள் விடுதலை பெற்றுப் பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!
முதல்வர் கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி வளைந்து கொடுத்துத் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
Source:http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_29.html

Thursday, October 22, 2009

ஈழப் படுகொலைகளும், இந்திய ஊடகங்களின் வன்மமும்


-ஊடகவியலாளர்களை கொலை செய்தும் ஒடுக்கியும் அச்சுறுத்தியும் துரத்தியும் விடும் நாடாக மாறியிருக்கிறது இலங்கை.
-போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை
மக்களை மூளைச் சலவை செய்யவும் அச்சுறுத்தவும் தாங்கள் சேவை செய்யும் அதிகார பீடங்களின் ஊது குழலாகவும், தாங்கள் நம்பும் சாதி, மதம் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் சக்திகளாகவும் மாறியிருக்கின்றன இந்திய ஊடகங்களும் பெரும்பாலான ஊடகவியளார்களும்.

உலகெங்கிலும் உண்மைக்காவும் படுகொலை செய்யப்படும் மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் கவலைப்படும் ஊடகவியளார்களின் கதி அச்சப்படும் வகையில் அதிகரித்துச் செல்கிறது.இடது திவீரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம். என்றெல்லாம் கட்டி எழுப்பப்படும் அமெரிக்க நலன்களும், அதையொட்டி இராணுவ அனர்த்தனங்களுக்கு இடையில் சிக்கி அழியும் மக்கள் குறித்து பேசுவதற்கும் எந்த ஊடகங்களும் தயாரில்லை. ஆப்கானில் எண்ணெய் லாறியில் இருந்து வழிந்தோடும் எண்ணையை பிடிக்க காலிக் குடங்களோடு திரளுகிற மக்களை குண்டு வீசிக் கொல்கிறது அமெரிக்கப் படைகள்.அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது மேற்குலக ஊடகங்கள். பி.பி.சி, சி.என்.என். போன்ற ஏகாதிபத்திய உடகங்களுக்கு மாற்றாக அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் உருவாகி வளர்ந்தாலும் அதன் தேவைகள் ஒப்பீட்டளவில் போதுமானதாக இல்லை.பாக்தாத்தில் வைத்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்று இப்போது விடுதலையாகியிருக்கும் சையத்தும் சரி, இந்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் மீது செருப்பு வீசி சஸ்பெண் செய்யப்பட்டிருக்கும் ஜர்னைல் சிங் போன்றவர்களின் செயல் குறித்து விவாதிக்கக் கூட எந்த ஊடகங்களும் தயாரில்லை.பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அன்றாடம் வீசப்படும் குண்டுகள் குறித்து பிராந்திய மொழி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கிலும், சட்டீஸ்கர்,மேற்குவங்கம் போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்கிற மனித உரிமைப் படுகொலைகள் குறித்தும் தடுத்து தனிமைப்படுத்தி ரகசிய வதை முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. இன்றைக்கு உலகமே இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறது. இந்தக் கண்காணிப்புகள் மாநில போலிஸ், மத்தியப் படைகள் என விரிவடைந்து சென்றாலும் இவர்களின் சீருடை தரித்த கண்காணிப்பின் கீழ் சிறுபான்மை மக்கள் அவர்களின் மத அடையாளங்களை பேணி சுதந்திரமாக வாழ முடியாத சூழல். இந்தியாவில் ஊடகங்களில் மக்களின் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான, இடஒதுக்கீடு உரிமைக்கு எதிரான போக்குகள் ஊடகங்களில் காணப்படுகிறது.பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும் போருக்குப் பின்னரும் இந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுதத்தோன்றுகிறது. வன்னிப் போரும் ஆங்கில ஊடகங்களும்வன்னி மக்கள் மீதான போர் 2007 – ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் நடந்த அந்தப் போரின் தெரிப்புகள் இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லாமல் இருந்தது. அவ்வப்போது தமிழக ஊடகங்களில் புலிகள் தொடர்பான கட்டுரைகள், அதுவும் வீரசாகசக் கதைகளைக் கொண்ட கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன.2007ல் மாவிலாறு பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது நான் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சுப.தமிழ்செல்வனையும், இராணுவப் பேச்சாளர் இளந்திரையனையும் நேர்காணல் கண்டிருந்தேன்.போரின் கொடூரமான ஒரு பக்கத்தை பேசவோ, இந்தப் போர் ஈழ மக்களின் சிவில் சமூக வாழ்வின் மீதும், அவர்களின் உயிர்வாழ்வின் மீதும் எவளவு மோசமான பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்றோ அறியாதவர்களாகவோதான் இருந்தார்கள்.தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் போரின் கோடூர முகம் குறித்து போர் துவங்கிய காலத்தில் பேசவில்லை, 2008 – ஆம் செப்டம்பருக்குப் பிறகு போர் தீவீரமாகி 2009 ஜனவரியில் கிளிநொச்சி விழுந்த போதே தமிழகத்தில் போராட்டங்கள் தீவீரமாகின அதுவும் சிறு சிறு அமைப்புகள் ஆங்காங்கு போருக்கு எதிராக போராடி வந்தார்கள். வெகுமக்களை மையமிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகள் அதன் பின்னே களத்தில் குதித்து அதை மாபெரும் சூதாட்டமாக மாற்றின.
தியாகி முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குப் பின்னர் எழுந்த நெருப்பை அணைப்பதில் எல்லா தேர்தல் கட்சிகளுமே தீவீரமாக இருந்தது. ஆனால் பெருந்தொகையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது தமிழக மக்களிடையே கடுமையான அனுதாப அலையை தோற்று வித்தபோது அது ஆளும் கட்சிகளுக்கு அரசியல் நெருக்கடியாகவும், எதிர்கட்சிகளுக்கு அல்வாவாகவும் மாறிவிடும் என்கிற சூழலில் குதர்க்கமான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது சடுதியாய் தமிழகம் பற்றி எரிவதைப் போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டது.
அனைத்துக்கட்சிக் கூட்டம், ராஜிநாமா நாடகம், மனிதச் சங்கிலி நாடகம், என ஈழப் போராட்டம் சூதாட்டமாக மாற்றப்பட்டு வெகுமக்கள் மயப்படுத்தப்பட்ட போது தான் இந்திய ஆங்கில ஊடகங்களின் அகோரமான தாக்குதல் தொடங்கியது.
அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் பிரச்சாரத்தை துவங்கி வைத்தது இந்து பத்திரிகைதான். நெருக்கடிகளை எப்படியாவது சாமாளித்தாக வேண்டிய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. 14,10,2008 செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏற்பாடாகியிருந்தது. அன்று வெளியான இந்துப் பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி The Dangers of Tamil Chauvinism. )http://www.thehindu.com/2008/10/14/stories/2008101454490800.htm) என்ற கட்டுரையை எழுதியிருந்தார். தமிழக மக்களை நச்சு விதைகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரிக்கும் கட்டுரை அது. புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழகமே கிளர்ந்தெழுந்து விட்டது போன்ற தோற்றத்தையும் அதனால் இந்திய இறையாண்மையே கேள்விக்குள்ளாகும் சூழலும் எழுந்துள்ளதாகவும் அக்கட்டுரை சித்தரித்தது. அதில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களைக் கூட முட்டாள்கள் என்கிற ரேஞ்சில்தான் எழுதியிருந்தார் மாலினி பார்த்தசாரதி. அதுதான் இந்தப் போரின் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தையும் துடிப்பையும் இனவாதமாக சித்தரித்த முதல் எழுத்து. அந்த புள்ளியில் இருந்தே ஆங்கில ஊடகங்கள் ஈழம் குறித்து திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தை துவங்கினார்கள்.கிளிநொச்சி விழ்ந்த போது ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக ராஜபட்சேவின் நேர்காணலை வெளியிட்டார் இந்து ராம்.
முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி தமிழகம் முழுக்க எழுந்த அதிர்வலையும் கொளத்தூரில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திரண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கூட்டத்தையும் தீவீரவாத கூட்டமாகவும் பெரும் கலவரச் சூழல் எழுந்துள்ளது என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.ஆனால் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் அரசியல் கட்சிகளின் மேல் கடும் வெறுப்புற்றவர்கள். முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டு அது பற்றி செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் அதை ஒரு மனநோயாக சித்தரித்து மனோவியல் நிபுணர்களின் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள் என்பதோடு, வழக்கறிஞர்களின் போராட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளின் போராட்டங்களையும் தேச நலனுக்கு எதிரானது எனச் சித்தரித்து அரசின் ஒடுக்குமுறைக்கு தூபமிட்டதும் இதே ஆங்கில ஊடகங்கள்தான்.ஏன் இப்படி? புலிகளின் தோல்வியை இவர்கள் ஈழ மக்களின் தோல்வியாக மட்டும் பார்க்கவில்லை, தமிழகத் தமிழர்களின் தோல்வியாகப் பார்த்தனர். தவிரவும் இந்துஸ்தானத்திற்கு எதிரான திராவிடக் கருத்தியல் அதன் இடஒதுக்கீடு கொள்கை, பிராந்திய தன்மை இவைகள் எல்லாமே பார்ப்பனீயத்திற்கு எதிரானவை என்பதிலிருந்து ஆங்கில ஊடகங்களின் வன்மம் துவங்கிறது. உயர் கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷனுக்கு ஆதரவான நிலை, என்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக் கோர்க்கைகளில் தமிழகம் தனித்து நடப்பதிலிருந்து இந்த வன்மம் துவங்குகிறது.
அந்த வன்மத்தின் உச்சத்தைத்தான் நாம் மே மாதம் புலிகள் மீதான போர் முடிவுக்கு வந்த போது ஆங்கில ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தில் பார்த்தோம். பொதுவாக போரின் முடிவு என்பது பயங்கரவாதத்தை அழித்த அரசின் வெற்றி என்ற பார்வைதான் ஆங்கில ஊடகங்களின் பார்வை.ஆனால் இந்தப் போர் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களையும் பல்லாயிரம் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து துயரமான ஒன்றாக முடிவுக்கு வந்தது குறித்து கவலையற்று, பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடினார்கள்.
இந்திய ஆங்கில ஊடகங்கள். மே மாதம் 19 ஆம் திகதில் தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு ஆங்கில ஊடகங்களின் பிரச்சாரம் என்பது இராவணனை அழிக்கும் தசரா விழா போன்று கொண்டாடப்பட்டது. பிரபாகரன் எப்படி இறந்தார்? அது குறித்து பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று சோ ராமசாமியையும், சு.சாமியையும் பேட்டி எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பியது ஊடகங்கள்.எங்கோ சாலையில் நடந்து போகிற ஒருவரிடம். பிரபாகரன் இறந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறார் டைம்ஸ் நௌவ் செய்தியாளர் அவர் தீவீரவாதி கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி என்கிறார். உடனே செய்தியாளர் கேமிராவுக்குள் வந்து தமிழக மக்கள் பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ.பி.என், டைம்ஸ் நௌவ், ஹெட்லைன்ஸ் டுடே என எல்லா ஆங்கில ஊடகங்களுமே மூன்றாம் தரமான மஞ்சள் ஊடகங்களாக மாறிப்போனது அப்போதுதான்.சந்தீப் குமார் ரத்தோய், பர்கா தாத்தா, டைம்ஸ் நௌவ் செய்தியாளர் என எல்லா அதிமுகக்கிய இந்திய ஊடக முகங்களும் இனவாதிகளாக மாறி நீண்ட கால வன்மத்தை தமிழக மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தார்கள். போர்க்காலத்தில் ஈனத்தனமான பல செய்திகளை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அகதி முகாம் பற்றி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை கொண்டு வந்தது. மலையாளியான ஜெயாமேனன் எழுதிய அந்தக் கட்டுரை பாவத்தைக் கழுவுகிற பிலாத்துவின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான சிற்ந்த கட்டுரைகளை வெளியிட்டது தெஹல்கா இதழ்தான்.போர் காலத்தில் இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் பயிர்ச்சி எடுக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறான பயிர்சிச்கள் உதவிகள் வழங்கப்பட்டது என்றும். இந்தியா இலங்கை அரசிற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் பல கட்டுரைகளை இந்தியாவின் கோரமுகத்தை அம்பலப்படுத்தி தெஹல்கா எழுதியது. ஆனால் இந்து ராம் போன்ற இடது சாரி முகமூடிகள் இன்று வரை தொடர்ந்து போருக்குப் பின்னரும் இலங்கை அரசின் அங்கீகரிக்கப்படாத இந்தியத் தூதர்கள் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கை இனப்படுகொலை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள்.மக்களினங்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விசாரணைக்குட்பட்டே வருகிறது.படுகொலை நிகழ்த்தும் நாடும் அதைச் சூழ நிலவும் பிராந்திய அரைசியலும் உலகநாடுகள் எவ்விதமான துருவ அரசியலில் தங்களைப் பிணைத்துள்ளன என்பதைப் பொறுத்தும் இத்தகைய விசாரணைகளை முன்னநகர்த்துகின்றன. நாஜிப்படுகொலைகள், ருவாண்டா படுகொலைகள், உள்ளிட்ட படுகொலைகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு இனப்படுகொலைதான் இலங்கையிலும் நடந்தது. பொதுவாக குறிப்பிட்ட இனத்த்தை முடக்கி அழிக்கவோ, பலவீனமாக்கவோ நினைத்து இவ்விதமான இன அழிப்புகள் நடந்து சில காலம் பின்னரே இப்படுகொலைகள் உலகின் கண்களுக்குத் தெரியவரும். ஆனால் இலங்கையில் போர் தீவீரமாக நடந்த 2009 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்காலில் பகுதிக்குள் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் நடந்தவை அப்பட்டமான இனப்படுகொலை என்று உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள்.தமிழகத்தில் கடும் கொந்தளிப்பான போராட்டங்களும், அதை அச்சுறுத்தி அடக்குகிற நிலையும் காணப்பட்டது. போர் முடிந்த பிறகு மேற்குலக ஊடகங்கள் இனப்படுகொலைக்கான ஆவணச் சாட்சியங்கள் சிலதை வெளியிட்டன. அந்த வகையில் டைம்ஸ் இதழ் போர் முடிவுக்கு வந்த மே மாதம் இறுதியில் 29ஆம் திகதி முதல் கட்டுரையை வெளியிட்டது.இறுதிப்போரின் போது இருபதாயிரம் மக்கள் சிங்களப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றது அந்த புலனாய்வு அறிக்கை. பீரங்கிகள், கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சர்வதேச போர் நெறிகள் எல்லாவற்றையும் மீறி கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட கொடூர யுத்தம் என்று இதை வர்ணித்த டைம்ஸ் இதழ் தனது புலனாய்வுச் செய்தியாய் இதை பதிவு செய்தது.இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் எடுக்கப்பட்ட பேரழிவைக் காட்டும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை ” பீரங்கித் தாக்குதல் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பீரங்கி தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் டைம்ஸ் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணை மற்றும் புகைப்படங்களில், இலங்கை ராணுவம் உலக நாடுகளுக்கு அளித்த உறுதி மொழியை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஏற்பட்ட மனிதப் படுகொலை மற்றும் சூடானில் உள்ள தார்ஃபூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களைப் போல இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் அமைந்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டும் இலங்கை ராணுவ நடவடிக்கையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது”சில நாள் இடைவெளிக்குப் பிறகு டைம்ஸ் இக்கொலைகளை வார இறுதிக் படுகொலைகள் என்று கடுமையாகச் சாடி செய்தி வெளியிட்டது.பிரெஞ்சு ஊடகமான லே மாண்டே போன்ற இதழ்கள் 13 சதுரகிலோ மீட்டருக்குள் ஐம்பதாயிரம் மக்கள் சிக்கி அவர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக எழுதியது . இதில் நாம் சந்திக்கும் ஒரு முரண் என்னவென்றால் போர்பகுதிக்குள் எழுபதாயிரம் மக்கள் இருப்பதாக இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாராளுமன்றத்தில் சொன்னார். பல ஊடகங்களும் ஐம்பதாயிரம் என்றும் எழுபதாயிரம் என்றும் சொன்னன.உண்மையில் அங்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து புலிகள் சொல்லி வந்தார்கள். இந்தியாவும் இலங்கை அரசும் வேண்டுமென்றே மக்கள் எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல உண்மையான மக்கள் எண்ணிக்கை எவளவு என்று தெரியாத ஊடகங்களோ அனுமானமாக மக்கள் எண்ணிக்கையை வெளியிட்டாலும் அவர்களின் அக்கறையை நாம் மதிக்கத்தான் வேண்டும். போருக்குப் பின்னர் பான்கிமூன் நடந்து கொண்ட விதம், இந்திய வம்சாவளியில் வந்த விஜய்நம்பியாரை இலங்கை விவாகரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தது குறித்தும் அவரது தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசின் இரணுவத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு இராணுவ அட்வைசராக இருப்பது குறித்தும் இனனர் சிட்டி பிரஸ் நேரடியாகவே ஐநாவின் தூதுவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு விஜய் நம்பியாரின் இந்திய சார்பையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டதையும் கூட இன்னர் சிட்டி பிரஸ் வெளிக் கொண்டு வந்தது. அத்தோடு பெருந்தொகையான மக்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்ட போது அதுகுறித்து அமைதியாக இருந்து கழுத்தறுத்துவிட்டார் பான்கிமூன் என்று கடுமையாக பான்கிமூனைச் சாடியது இன்னர் சிட்டி பிரஸ்.இந்த ஊடக நிறுவனத்தின் கடுமையான சாடலுக்குப் பின்னர்தான் பான்கிமூன் மென்மையாகவேனும் இலங்கை அரசை கண்டிக்க முன்வந்தார். போருக்குப் பின் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 13,000& க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் குறித்தும் காத்திரமான கேள்விகளை அது எழுப்பியது.மௌனித்திருந்த மேற்குலக ஊடகங்கள் ஓரளவுக்கு செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ், லே மாண்டே, இன்னர் சிட்டி பிரஸ், வரிசையில் இலங்கை அரசின் இனவாதக் கொலைகளுக்கு ஆதாரமாக உறுதியான இரண்டு ஆவணங்களை வெளியிட்டது சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்.ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் சேனல் 4 நிறுவனத்தின் பணி இலங்கைப் போரில் அளப்பரியது. ஐடிஎன் செய்தி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சேனல் 4 மார்ச் மாத இறுதியிலேயே தனது படப்பிடிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இரும்புத்திறை போட்டு மூடப்பட்டு பெருமளவான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடத்திற்கு இலங்கை அனுமதித்தது சில ஊடகவியளார்களை மட்டும்தான். மேற்குலக ஊடகங்களுக்கு கண்டிப்பான முறையில் அனுமதி மறுக்கப்பட்டது. சில தமிழக ஊடகவியளார்கள் அங்கு செல்ல முயன்றோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ( சில இலங்கை ஆதரவு தமிழக. ஆங்கில, ஊடகவியளார்கள் இலங்கை அரசின் மறைமுக நிதி உதவியோடு அங்கு சென்றும் வந்தார்கள். இந்து ராம் இராணுவ ஹெலிகாப்டரிலேயே வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்) என்பதை எல்லாம் தாண்டி மக்கள் சார்ந்து எழுத நினைத்த எவருக்குமே அங்கு அனுமதி இல்லை. இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்தியாளர்கள் மட்டும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இப்படிப் போன ஒரு சிங்கள ஊடகவியளார்கள் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில மடிக்கணனிகளை திருடிய சம்பவம் கூட நடந்தது. இந்நிலையில் சானல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் நிக் பேட்டன் வால்ஷ், தயாரிப்பாளர் பெஸ்ஸி டூ, கேமராமேன் மாட் ஜாஸ்பர் ஆகியோர் வவுனியாவுக்குள் நுழைந்து அங்குள்ள அகதி முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி முதல் செய்தித் தொகுப்பை வெளியிட்டார்கள். பெருமளவான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகவும், அவர்கள் எந்த நம்பிக்கையும் அற்று கொடூரமான கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியை பதிவு செய்தார் நிக் பேட்டன்.வவுனியா ஆரம்ப சுகாதார மையத்திற்குள் ரகசிய கேமிராவைக் கொண்டு போய் அங்கிருந்த நோயாளிகள், குவித்து வைக்கப்பட்டிருந்த பிணங்கள் குறித்த செய்திகளை எல்லாம் முதன் முதலாக கொண்டு வந்தவர்கள் இக்குழுவினரே, மிக முக்கியமாக சேனல் 4 தொலைக்காட்சி கனரக ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட வில்லை என்று இந்தியா இலங்கை அரசுக்குக் கொடுத்த நற்சான்றிதழை உடைத்தெரிந்தார்கள். அவர்கள் தொகுத்தளித்த இந்த செய்தி ஆவணம் மே 5 ஆம் நாள் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் மூன்று பேரும் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.பின்னர் ஜனநாயத்திற்கான ஊடகவியளார் அமைப்பு வெளியிட்ட கொடூரமான இனப்படுகொலை விடீயோவை வெளியிட்டதும் சேனல்4 தொலைக்காட்சிதான்.இத்தனை ஊடகங்கள் இவளவு கேள்வி எழுப்பியும், போர் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் இவளவு ஆவணங்கள் வெளிக் கொணரப்பட்ட பிறகும் ஏன் இலங்கையைச் சூழ அமைதி நிலவுகிறது என்றால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் இந்திய வர்த்தக நலனுக்காகவும் இலங்கையில் உருவாகியுள்ள புதிய சந்தையை சுவைப்பதற்காகவும்தான் இதில் அமைதிகாக்கின்றன. மேலும் இவ் ஊடகங்களும் மேற்குலகமும் இலங்கை அரசிடம் பெரிதும் வேறு படுவது தன்னார்வக்குழுக்கள் தொடர்பாகத்தான். அவர்கள் தன்னார்வக்குழுக்களை முகாம்களுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள். ஆனால் இலங்கையோ இராணுவச் சர்வாதிகார பார்மா போன்று தன்னார்வக்குழுக்கள் உள்ளிட்ட எல்லா வெளி உதவிகளையும் தான் பெற்றுக் கொள்ளமட்டுமே நினைக்கிறது. தன்னார்வக்குழுக்கள் பௌத்த இறைமையை சிதைத்து விடும் என இலங்கை அரசு நம்புகிறது.ஆனால் இலங்கைக்குள்ளேயோ முகாம்களுக்குள்ளேயோ அனுமதிக்க மறுக்கிற தன்னார்வக்குழுக்களை புலம்பெயர் நாடுகளில் ஊக்குவிக்கிறது. அதுவும் ஏற்கனவே உள்ள ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்களை அல்ல இலங்கைத் தமிழர்களைக் கொண்ட புதிய குழுக்களை உருவாக்கி அதற்கு நிதி உதவி அளித்து புலத்தில் உள்ள புலி ஆதரவைச் சிதைப்பது புலி ஆதரவாளர்களை கைது செய்வது, அரசியல் எழுச்சி ஏற்படா வண்ணம் மக்களைக் குலைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இக்குழுக்களை பயன்படுத்துகிறது இலங்கை அரசு.போருக்குப் பின்னர் இலங்கை அரசின் பெரும்பங்கு நிதி இலங்கைக்கு வெளியில் அதன் ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடப்படுகிறது ராஜதந்திர நடவடிக்கை என்பது முன்னெடுக்கப்படுவது இந்த தன்னார்வக்குழுக்கள் மூலம்தான். சென்னையில் பணியாற்றிய அம்சா பதவி உயர்வு பெற்ற பிரிட்டனுக்குச் சென்றதும் இதற்காகத்தான்.தமிழக ஊடகங்கள்ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது மிக மோசமான விஷத்தைக் கக்கி நச்சை விதைத்த போது கிட்டத்தட்ட அந்த நாட்களில் தமிழ் மக்கள் மிகவும் மன அயர்ச்சி அடைந்திருந்தார்கள்.ஆங்கில ஊடகங்களின் இழிவான பிரச்சாரத்திற்கு எதிர்பிராச்சாரம் செய்து தமிழக மக்களை ஓரளவுக்கேனும் மன ஆறுதல் கொள்ளச் செய்யும் வேலையை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் பந்த் நடந்தால் அதை ஒரு விடுமுறை தினமாக கொண்டாடி சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பின பிரதானமான இரண்டு தொலைக்காட்சிகள். தமிழக அச்சு ஊடகங்களோ விற்பனையை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் இதழ்கள் தொடர்ந்து போர்க்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக செய்திகளை வெளியிட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழப்போர் குறித்த செய்திகள் வெளியிடாமல் தவிர்த்தன அல்லது தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காத வகையில் அச்செய்தி திரித்து எழுதப்பட்டதாக இருந்தது. தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரிந்த அன்றே ஈழப் போரின் முடிவுகளும் பெரும் துயரமான செய்திகளாய் நமக்கு எட்டின. புலிகள் அழிக்கப்பட்டார்கள். பல்லாயிரம் போராளிகள் அவர்களின் குடும்பங்களோடு கொல்லப்பட்டார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். போர் முடிந்தது ஜனநாயக சக்திகளுக்கு துயரமானதாகவும், பேரினவாதிகளுக்கு உற்சாகமளிக்கும் வகையிலும் போர் முடிவுக்கு வந்தது. நாற்பது வருட பிரச்சனையை நான்கு நாளில் முடிக்க முடியாது என்றவர்கள். போர் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ந்தார்கள்.
வன்னி மக்கள் மீதான இந்தப் போரைப் பொறுத்தவரையில் தமிழக ஊடகங்கள் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசவில்லை. எந்த நேரத்தில் எது முக்கியம் அற்றதோ அது குறித்துப் பேசினார்கள். போர் நடந்த போது இவர்கள் மக்கள் படுகொலைகள் குறித்துப் பேசாமல் வேறு விஷயங்களைப் பேசினார்கள். போர் முடிந்த பிறகு துயரமான மக்கள் படுகொலை குறித்துப் பேசாமல் பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறார்கள். பழைய புகைப்படங்களை பிரசுரித்து அது குறித்த காலத்தைப் பதிவு செய்யாமல் பொதுத் தன்மையோடு எழுதி நேற்று நடந்தது போல சித்தரிக்கிறார்கள். பிரபாகரன் இந்தியாவின் உதவியோடு தப்பியதாகவும் எழுதினார்கள். பேரினவாத படுகொலையை சிங்களப் படைகளின் முதுகெலும்பாக நின்று நடத்தியதே மத்திய காங்கிரஸ் அரசுதான்.
ஆனால் போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை.மாறாக இவர்கள் போரின் மீதான மத்திய அரசின் பங்கு குறித்தோ கடைசி நேரத்தில் புலிகளுக்கு தமிழகம் செய்த துரோகம் குறித்தோ பேசாமல் வீரசாகசக் கதைகளை எழுதி வருகிறார்கள். அரசியல் அழுத்தங்கள், சார்ந்திருக்கிற அணிகளுக்கு ஏற்றது மாதிரி ஊடகங்கள் ஈழப் போரின் மீதான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. இதுதான் தமிழ் ஊடகங்களின் செயல்பாடாக இருந்தாலும் தினத்தந்தி, தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் போன்ற இதழ்கள் போர்க்காலத்தில் மக்களின் துன்பம் குறித்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் அது அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.
மற்றபடி சென்னையில் இருந்த இலங்கை அரசின் துணைத்தூதர் அம்சாவின் செயல்பாடுகள் ஊடகவியளார்கள், அரசியல்வாதிகளை மையமிட்டு இருந்தன. ஊடக நிறுவனங்களின் பிரதான பொறுப்பாளர்கள் பலரும் அம்சாவிற்கு நெருகக்மாக இருந்தார்கள். போரின் முடிவுக்கு முன்னரும் பின்னரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அம்சா இவர்களுக்கு விருந்து கொடுத்தார். பரிசும் கொடுத்தார் சில நேர்மையான ஊடகங்கள் இதை புறக்கணித்தாலும் இந்தப் போர்ச்சூழல் அதிக வருவாயை ஈட்டித் தரும் தந்திரம் மிக்கதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த பத்திரிகையாளர்களோ இலங்கை அரசின் அனுகூலங்களை அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை. சிலர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குளிப்பாட்டப்பட்டார்கள். சிலர் சென்னையிலேயே குளிப்பாட்டப்பட்டார்கள். ரகசியாமான விருந்துகள் அம்சா இங்கிருந்து செல்லும் வரை நடந்தது. புதிய தூதர் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றதும் அதற்கும் விருந்து நடைபெற்றது இன்றும் ஊடகவியளார்கள், இலங்கைத் தூதர் கூட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் யாரிடமும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அம்சா வீசி எரிந்த வெள்ளிக்காசுகளை வாங்க மறுத்து இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் தமிழகத்திலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகியது. நக்கீரன் மீது அம்சா வழக்குத் தொடர அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்.மக்கள் தொலைக்காட்சி போர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக இலங்கையின் வடக்கில் அதன் ஒளிபரப்பு தடுக்கப்பட்டது. ஏன் தமிழக ஊடகவியளார்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் ஊடக முதலாளிகளும் தொழில் அரசியல் கூட்டுக்கு ஏற்பவே இவ்விஷயத்தை அணுகினார்கள். ஊடக முதலாளிகளின் இந்த தொழில்சார் ஊடக தர்மத்தை ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக எழுதி. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் இலங்கையில் படுகொலையானார்கள். கடைசியாய் நாம் லசந்தா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதையும், திசநாயகத்திற்கு இருபாதாண்டுகால கடும் சிறைத் தண்டனை கிடைத்ததையும் நாம் கண்டோம்.
இருபது உயிர்கள் பலியாகி சிறைக் கொட்டடிகளில் கிடந்து இனப் படுகொலைக்கு எதிராக இன்றளவும் தலைமறைவாக பல நாடுகளிலும் மறைந்திருந்து தொடர்ந்து எழுதுகிறார்கள் சிங்கள இனத்தைச் சார்ந்த ஊடகவியளார்கள். ஆனால் தமிழ், தமிழர் பெருமை பேசும் தமிழ் ஊடகவியளார்கள்?
திசநாயகத்தோடு கைது செய்யப்பட்ட ஜசீகரனும் அவரது மனைவி வளர்மதியும் இன்றும் விசாரணைக் கைதிகளாக கொழும்பு மகசீன் சிறையில் கிடக்கிறார்கள். ஆனால் அஞ்சாமால் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக சித்திரவதைகளையும் கடந்து போராடுகிற அவர்கள் ஏதோ ஒரு வகையில் இனப்படுகொலை ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்திய ஆங்கில ஊடகங்களோ இலங்கை அரசிற்கு எதிராக உருவாகும் ஆவணங்களை அழிக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார்கள்.
டி.அருள் எழிலன்

Source: http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_3020.html

Tuesday, October 20, 2009

எம்.ஏ (கலைஞர் @(கருணா(ய்)நிதி) சிந்தனைகள்) பாடத் திட்டம்






செய்தி



சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம். திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கும் பாடத்திட்டங்கள் வகுத்துத் தரப்படுகிறது.



முதல் ஆண்டு பாடத்திட்டத்தில் மொத்தம் 8 பேப்பர்கள்:



1. திருக்குவளையிலிருந்து ஒரு தகரப்பெட்டி



2. “முரசொலி” எனும் மஞ்சள் பத்திரிக்கை3. சினிமா மூலம் சீரழிவு - ”ராஜக்குமாரி” முதல் திரைப்படம்



4. பத்மாவதியோடு சில காலம்



5. நீதிக் கட்சியின் உள்ளே நுழைந்த கிருமி



6. குளித்தலையில் 1957ல் பிடித்த சனியன்



7. 1967ல் தமிழகத்தை பீடித்த கொடிய நோய்



8. எம்.ஜி.ஆர் என்ற வில்லன்



இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்திலும் 8 பேப்பர்களுடன், ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்ப்பிக்க வேண்டும்



1. தயாளு மற்றும் ராசாத்தி



2. இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட புரட்டுப் போராட்டங்களின் வரலாறு



3. கருணாநிதியும் இலக்கியமும்



4. தமிழைச் சொல்லி ஊரை ஏய்த்தது



5. பகுத்தறிவு என்னும் பம்மாத்து (மஞ்சள் துண்டின் மகிமை



6. கழகத்தை குடும்பமாக்கிய விந்தை



7. எந்தக் கொள்கையும் இல்லாமல், கொள்கை பேசும் சூட்சுமம்



8. கடைசி வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் பின்னணி



கீழ்க்கண்ட சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரையை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்



1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு



2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்



3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு



4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)



5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்



6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்



7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்



8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்



9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு



10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி



11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்



12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)



13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)



14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)



15. தயாநிதி மாறன் வீடு



16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை



17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு



18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்



19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை



20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்



21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை



22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்



23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்



25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி



26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக



27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது



28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை



29. அந்தமான் தீவின் நிலங்கள்



30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்



31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு



32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை



33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்



34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது



35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு



36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்



37. செல்வம் வீடு



38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்



39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.



40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்



41. செல்வம் வீடு-பெங்களுர்



42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்



43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை



44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.



45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்



46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.



47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்



48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.



இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.



குறிப்பு: இது போகவும், இப்பாடத்திட்டம் தயாரிப்பதற்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வலர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தங்கள் ஆலோசனைகளை வழங்கவும்.
Source: http://savukku.blogspot.com/2009/10/blog-post_19.html