Friday, May 29, 2009
சாயம் வெளுக்கும் இலங்கை அரசின் பொய்
Wednesday, May 27, 2009
கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது
கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.
சமீபத்தில் செல்வராஜா பத்மநாதன் என சொல்லப்படும் வீடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் தேசிய தலமை பீடம் வீரமரணம் அடைந்துவிட்டதாக ஒரு அறிவிப்பை செய்திருந்தார்.
ஆனால், இது பற்றிய தகவல் இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கே இலங்கை புலனாய்வு துறையால் பல பத்திரிகை களுக்கு தெரிவிக்க இருந்தது. இங்கு ஏற்படும் சர்ச்சை என்னவென்றால், பத்மநாதன் என சொல்லப்படும் நபர் இரவு 9 மணிக்கு தான் BBC தமிழ் ஓசையுடன் பேசியுள்ளார். ஆனால் அவர் பேச போகும் தகவல் காலையிலே எப்படி இலங்கை அரசுக்கு தெரியவந்தது?மேலும், பேசிய நபர் அவர்தான் என அவதானிக்க முடியவில்லை, ஏனென்றால் KP யோ அல்லது எஸ் பீ யோ எங்கு உள்ளார்கள் என யாருக்குமே தெரியாது. எனவே இலங்கை புள்ளுறுவிகளின் வேலை என தெளிவாக அறிய முடிகிறது
Friday, May 8, 2009
ஆங்கில ஊடகங்களால் மறைக்கப்படும் வன்னி காடு
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்துக்கும்
நடை பெரும் சமர் கடைசி கட்டத்தை அடைந்து
விட்டதாகவும் தமிழர்கள் இரண்டு மைல் இடத்தில்
அடைக்கப்பட்டு உள்ளதாக பல செய்தி ஊடகங்கள் அதிலும்
குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை அவ்வப்போது
வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எல்லோரும் குறிப்பாக
வன்னி காட்டு பகுதிகளை வேணுமென்றே இலங்கை ராணுவம்
கையில் இருப்பதாக பொய் செய்திகளை பரப்பி
வருகின்றனர். உண்மை என்னவென்றால் அந்த காட்டு
பகுதியில் யார் உள்ளார்கள் என்ற விடயம் இலங்கை
அரசுக்கே தெரியாது. மேலும் வன்னி காடுகளில்
நுழைவது என்பது இலங்கை ராணுவத்தால் முடியாத
ஒன்று.
ஆனால் ஆங்கில மற்றும் சிங்கள
ஊடகங்கள் இந்த புதிர் காடுகளை பற்றி மூச்சுவிடவே
மறுக்கின்றனர். ஒரு பொய்யை பலமுறை சொன்னால்
அது உண்மையாக மாறிவிடும் என்பதர்க்கு இணங்க
வன்னி காடுகள் பற்றிய உண்மை நிலையை அந்த
ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளன.
மேலும் தான் பெற்று வந்த பல வெற்றிகளை
செய்திகளாக வெளியிட்டு வரும் ராணுவம் வன்னி
காடுகள் பற்றி இதுவரை தெளிவாக எந்த தகவலையும்
வெளியிட தயக்கம் காட்டி வருவது இங்கே
குறிப்பிடத்தக்கது.
வன்னி காடுகள் பற்றி வெளி
உலகில் உள்ள பலருக்கும் ஏதும் தெரிந்து
இருக்க வாய்ப்புகள் குறைவு. அங்கு சென்று
வந்த இந்திய படை முக்கியாஸ்தர்கள் சொன்னதாக சிலர்
கூறியதை பல நாட்களுக்கு முன் நான்
கேட்க நேர்ந்தது. அவர்கள் கூற்று படி
வன்னி காடுகள் இந்தியாவில் உள்ள அதற் காடுகளையும்
விட மிகவும் அடர்ந்து உள்ளதாம்.
ஆகவே
இனி வரும் நாட்களில் சண்டை வன்னி
காடுகளில் நடை பெற்றால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை
.
ஆனால் ஆங்கில ஊடகங்கள் அதை எவ்வாறு
நோக்குக்கின்றன என்பது தான் முக்கியம்.
Thursday, May 7, 2009
முக்கிய செய்தி: மு கருணாநிதி சார்பில் ராஜபாக்சே ஒட்டு சேகரிப்பு.
குறிப்பு : இது ரூம் போட்டு யோசிச்சு அடித்த செய்தி
முழுவதுமாக நம்பிய அன்னை சோனியா சென்னை விஜயத்தை ரத்து செய்ததால் தமிழர்களின் தலைவர் மு கருணாநிதி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபாக்சேவின் உதவியை நாடி உள்ளார். ஆகவே வரும் 11 ஆம் தேதி அன்று சென்னை தீவுத் திடலில் கட்சியினர் புடை சூழ தமிழர்களின் ஒரே தலைவர் வரலாற்று நாயகன் முத்து வேல் கருணாநிதி முன்னிலையில் ராஜபாக்சே சகோதரர்கள் (குறிப்பாக கொதபாயா) டி ம் கே உக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கூட்டத்தில் இலங்கை நாட்டில் உள்ள பல புத்த துறவிகளும் பங்கு கொள்ள இசைவு தெரிவித்து உள்ளதாக அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்வு நிலை பற்றி பேச போவதாக தகவல்.
இனி இந்தியாவை நம்பி தன் கட்சியை வளர்க்க போவதில்லை என கருணாநிதி தெரிவித்து உள்ளதாக அந்த கட்சியின் அதிகார ஊடகம் கொலைஞர் டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை வரும் ராஜபாக்சே சகோதரர்கள் கலைஞர் அவர்களின் துணைவியார் வீட்டில் தங்கி வேறு சில நகரங்களுக்கும் சென்று கட்சிக்காக தீவிர ஒட்டு சேகரிக்க உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்து உள்ளது
இந்த சென்னை விஜயம் குறித்து ராஜபாக்சே கருத்து சொல்லும் போது இந்தியா இலங்கைக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு பிரதிபலனாக அவர்கள் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறி உள்ளனர்.