Friday, May 8, 2009

ஆங்கில ஊடகங்களால் மறைக்கப்படும் வன்னி காடு


இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்துக்கும்
நடை பெரும் சமர் கடைசி கட்டத்தை அடைந்து
விட்டதாகவும் தமிழர்கள் இரண்டு மைல் இடத்தில்
அடைக்கப்பட்டு உள்ளதாக பல செய்தி ஊடகங்கள் அதிலும்
குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை அவ்வப்போது
வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எல்லோரும் குறிப்பாக
வன்னி காட்டு பகுதிகளை வேணுமென்றே இலங்கை ராணுவம்
கையில் இருப்பதாக பொய் செய்திகளை பரப்பி
வருகின்றனர். உண்மை என்னவென்றால் அந்த காட்டு
பகுதியில் யார் உள்ளார்கள் என்ற விடயம் இலங்கை
அரசுக்கே தெரியாது. மேலும் வன்னி காடுகளில்
நுழைவது என்பது இலங்கை ராணுவத்தால் முடியாத
ஒன்று.
ஆனால் ஆங்கில மற்றும் சிங்கள
ஊடகங்கள் இந்த புதிர் காடுகளை பற்றி மூச்சுவிடவே
மறுக்கின்றனர். ஒரு பொய்யை பலமுறை சொன்னால்
அது உண்மையாக மாறிவிடும் என்பதர்க்கு இணங்க
வன்னி காடுகள் பற்றிய உண்மை நிலையை அந்த
ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளன.
மேலும் தான் பெற்று வந்த பல வெற்றிகளை
செய்திகளாக வெளியிட்டு வரும் ராணுவம் வன்னி
காடுகள் பற்றி இதுவரை தெளிவாக எந்த தகவலையும்
வெளியிட தயக்கம் காட்டி வருவது இங்கே
குறிப்பிடத்தக்கது.
வன்னி காடுகள் பற்றி வெளி
உலகில் உள்ள பலருக்கும் ஏதும் தெரிந்து
இருக்க வாய்ப்புகள் குறைவு. அங்கு சென்று
வந்த இந்திய படை முக்கியாஸ்தர்கள் சொன்னதாக சிலர்
கூறியதை பல நாட்களுக்கு முன் நான்
கேட்க நேர்ந்தது. அவர்கள் கூற்று படி
வன்னி காடுகள் இந்தியாவில் உள்ள அதற் காடுகளையும்
விட மிகவும் அடர்ந்து உள்ளதாம்.
ஆகவே
இனி வரும் நாட்களில் சண்டை வன்னி
காடுகளில் நடை பெற்றால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை
.
ஆனால் ஆங்கில ஊடகங்கள் அதை எவ்வாறு
நோக்குக்கின்றன என்பது தான் முக்கியம்.

No comments:

Post a Comment