Friday, May 29, 2009
சாயம் வெளுக்கும் இலங்கை அரசின் பொய்
தமிழ் ஈழ தேசிய தலைவர் சிங்கள படையால் கொல்லப்பட்டு விட்டதாக உலகுக்கு அந்த அரசு தெரிவித்த பொய் இப்போது சாயம் வெளுக்க துவங்கியுள்ளது.முதலில் பல பொய்களை சொல்லிவந்த சிங்கள அரசு, பின்னர் மக்கள் அதை நம்பாததால் பிரபாகரன் உடல் என சொல்லப்படும் ஒரு பூத உடலை ராணுவ ஊடகம் மூலம் மற்றும் எச்ச பொறுக்கி இந்திய ஆங்கில ஊடகம் வழியாக அகில உலகுக்கு காண்பித்தனர். இவ்வளவு செய்த பிறகும் அதை நம்பாததால், தமிழ் இன துரோகி கருணா மூலம் இறந்தவர் தேசிய தலைமைப்பீடம் என கூற வைத்தனர்.எல்லா சிங்களவர்களும் பிரபா கொல்லப்பட்டு விட்டார் என நம்பி கொண்டு இருக்கும் போது, வெகு சிலர் மட்டும் அப்படி நடந்து இருக்க வாய்ப்பு மிக குறைவு என ஆணித்திருத்தமாக கதைத்து கொண்டு இருந்தனர்.அவர்களின் கூற்று உண்மை தான் என இலங்கை அரசே கண கச்சிதமாக தற்போது உணர்த்தி உள்ளது. நேற்று ஒரு தகவலை இலங்கை அரசு வெளியிட்டு இருந்தது. அதில் தேசிய தலைவரின் பெற்றோர்கள் வவுனியா (வதை) முகாமில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், மேலும் அவர்கள் போர் உக்கிரம் அடையும் முன்னரே இந்த பகுதிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.இங்கு தான் அவர்களின் முட்டாள் தனத்தை உலகுக்கு வெளிப்படையாக காண்பித்து உள்ளனர்.இறந்ததாக சொல்லப்படும் தலைவரின் உடலை அடையாளம் காட்ட கருணா மற்றும் தயா இருவரையும் அழைத்து சென்று அவர்கள் இந்த உடல் சத்தியமாக பிரபா அவர்களின் பூத உடல் தான் என அன்பாக சொல்ல வைத்தனர்.ஆனால் தலமை பீடத்தை ஈன்று எடுத்த பெற்றொரே அவர்கள் முகாம்களில் இருக்கும்போது பிரபா என்று கூறப்படும் நபரின் உடலை ஏன் துரோகி கருணா கொண்டு அடையாளம் காண சொல்ல வேண்டும்? ஏனென்றால் அவர்களுக்கு தன் சிங்கமகன் பற்றி நன்றாக தெரியும். இலங்கை அரசால் புணயப்பட்ட அந்த மாய உடலை பற்றிய உண்மையை வெளியே சொல்லிவிடுவார்களோ என தயக்கம் அரசுக்கு இருந்தது.மேலும் உண்மையாகவே தேசிய தலைவரின் பெற்றோர்கள் அங்கு உள்ளனரா என்பது குறித்து சந்தேகம் வழுப்பேற்று உள்ளதுஆகவே, கடைசி கட்டத்தில் அங்கு நடந்த விடயங்கள் குறித்து உண்மை வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த சிலர் உலகின் முன் வெகு விரைவில் வருவர். உண்மையை ஓங்கி ஒலிக்க செய்து இலங்கை அரசின் முகத்தில் கரியை பூசுவர்.அதுவரை, இலங்கை புலனாய்வு சொல்லும் பல தகவல்களை மெய் என நம்பி எமாறவேண்டாம்.ஈழ தாகம் இனிதே நிறைவேறும். அந்த தருணம் மிக விரைவில் வருகின்றது. நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment