Monday, November 14, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!


ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:
அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.
அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.
என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.
மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.
முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.
இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.
ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.
இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.
அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.
இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.
தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.
விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.
புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?
மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.
வந்தே மாதரம்!
பாரத் மாதாகி ஜெய்!!
இந்து தர்மம் ஓங்குக!!!

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.
இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா 

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!
-நமது சிறப்பு நிருபர்-

Thursday, September 8, 2011

காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் -தினமலருக்கெதிராக வழக்குத் தாக்குதல்?

ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் – காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் – தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295&Print=1
இந்தப் பதிவை தினமலம் அகற்றி விட்டது
பிரித்தானியாவில் பரமேஸ்வரன் பத்திரிக்கைக்கு எதிராக தாக்கல் செய்து வெற்றி பெற்றிருந்தார்
அது போல் ஏன் தமிழ்நாட்டில் செய்வதில்லை?
பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்துதல் அத்தோடு முடிந்து விடுவது  ஆனாலும் இந்த ஊடகங்கள் நிறுத்துவதாக இல்லை
முத்துக்குமார் வயிற்று வலி , காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள்  இப்படித் தொடர்கின்றன
ஒரு ஊடகத்திற்கு எதிராகவேனும் வழக்குத் தாக்குதல் செய்ததாக இதுவரை அறியவில்லை
இத்தனை அமைப்புக்கள் இருந்தும் யாரும் இது குறித்து முன்வராதது ஏன் ?
அல்லது அப்படி ஒரு சட்டம் தமிழ்நாட்டில் இல்லையா ?

Friday, September 2, 2011

தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!

நம் உடலுக்கு வைத்துக்கொள்ளும் தீயை, இனி எதிரிகளுக்கு பரிசாய் தருவோம் 

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன் சாகடிக்கப்பட்ட நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இந்திய அரசு முடிவு செய்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவார கால இடைக்கால தடை விதித்து 30.08.11 அன்று உத்தரவிட்டுள்ளது.இம்முவரின் தூக்கு தண்டனை பிரச்சனையில்,கடந்த சில வாரங்களாக கொந்தளித்த தமிழகம், இந்த இடைக்கால தடையை வரவேற்று பட்டாசு வெடித்துள்ளது!.தூக்கு தண்டனையை நிறுத்த தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய முந்நாள் நடிகையும்,இந்நாள் முதல்வருமான ஜெயாவின் சட்டமன்றம் தூக்குதண்டனையை ரத்துசெய்துவிட்டு ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
                                                              

தூக்குமேடையில் தற்போது நிற்கும் மூவரும் ராஜுவ் கொலையில் நேரிடையாக சம்பந்தம் இல்லாதவர்கள்.கொலையாளிகளுக்கு உதவியவர்கள் என்பதுதான் அவர்களின் மீதான குற்றச்சாட்டு கொலையாளிகளுக்கு அவர்கள் தந்த பொருட்கள் எதற்காக பயன்படுத்த போகிறார்கள்,என்பது கூட தெரியாத அப்பாவிகள்.ராஜிவை கொலை செய்ததாக இவர்களே கூறும்,ஒற்றைக்கண் சிவராஜன்,தானு ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர்.ராஜீவை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறுப்படும் விடுதலை புலிகள் இயக்கமே, இன்று அதன் தலைவர் பிரபாகரன்,உளவு பிரிவு தலைவர் பொட்டுஅம்மன் உட்பட அனைவரும் ஈழ இறுதிக்கட்ட போரில் கோரமாக கொல்லப்பட்டுவிட்டனர்.இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்த்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முள்ளிவாய்க்காளில்,50 ஆயிரம் ஈழத்தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.தற்போது தூக்குமேடையில் நிற்கும் மூவரும் 21 ஆண்டுகளாக சாவோமா,பிழைப்போமா? என்றுகூட தெரியாமல் தனிமை சிறையில் வைத்து கோரமாக ரசித்த பின்னரும் கூட இந்திய அரசின், தமிழர்களை பழிவாங்கும் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை.இந்த அடங்கா பசிக்கு ராஜீவை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பது மட்டும்தானா காரணம்? இல்லை இவர்களின் அடங்காப் பசிக்கு, இதுமட்டுமே காரணமல்ல.ராஜூவ் காந்தி கொலைக்கு பழிவாங்குவதுதான், இவர்களின் நோக்கம் என்றால் இதற்கு முன்னரே இந்திய அரசு தனது சொந்தநாட்டு மக்களாகிய தமிழ்நாட்டு தமிழர்களையே, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து பழிவாங்கிய இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? தமது உரிமைகளுக்காக போராடிய ஈழத்தமிழர் மீது 1987 ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்போட்டு, ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,ஈழத்தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய அரசின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் ராஜீவ் படுகொலை மட்டுமல்ல,தமிழர்கள் மீதான இந்திய ஆளும்வர்க்கத்தின்,பார்ப்பன கும்பலின் நலன்களுக்கு எப்போதுமே அது தமிழக தமிழனாக இருந்தாலும்சரி,ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி எப்போதுமே அடிபணிந்து போனதில்லை.வரலாற்று காலம் தொட்டு பார்ப்பன எதிர்ப்பு கோட்டையின் அடையாளமாக தமிழர்கள் விளங்குகிறார்கள்.மொழி,பண்பாடு,நாகரிகம் என அனைத்திலும் தனக்கென தனி ஒரு பண்பாட்டை உடையவர்கள்.இந்த சுயமரியாதை தன்மான உணர்வை,தமது வழ்க்கை முறையாகவே கொண்டவர்கள்.எப்போதுமே பார்ப்பன பண்பாட்டின் எதிர்ப்பு கோட்டையாகவும்,இதன் காரணமாகவே, அதன் இயல்பிலேயே இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு எதிரான சிந்தாந்த நடைமுறையை தமது வாழ்வியலோடு உள்ளடக்கியவர்கள்.

சங்ககாலத்தில் சமயமற்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் சோழர்கள் பார்ப்பன சித்தாந்தத்தை அரச மதமாக ஏற்று அதை தமிழ் சமூகத்தின் மீதும் திணித்தனர்.இதனால் வெகுண்டெழுந்த தமிழர்கள் களப்பிரர்கள் தலைமையில் பார்ப்பன எதிர்ப்பு சமயங்களான சமண,பெளத்தத்தை தமது சித்தாந்தமாக தழுவிக்கொண்டனர்.300 ஆண்டுகள் களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது.ஆனாலும் பிற்கால களப்பிரர்களில் சிலர் தமது ஆளும்வர்க்க நலனுக்காக பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டனர்.இதன் பின் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் களப்பிரர்களை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றினர்.பார்ப்பனக்கும்பலின் துணையோடு சமண,பெளத்த மதங்களை கொடுரமாக கொன்றொழித்தனர்.தமிழர்கள் சாதிகளாக கூறுபோடப்பட்டனர்.ஆனாலும் பார்ப்பன எதிர்ப்பு என்பது தமது வாழ்வியலின் ஒரு அங்கமாக ஆக்கிகொண்டனர்.தென்னிந்தியாவில் ஆரியர்களாக அல்லாது பார்ப்பனர்களாகத்தான் ஊடுருவினர்,பிற்காலத்தில் சோழ மன்னர்கள் வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை அழைத்து வந்து சகல வசதிகளுடன் குடியமர்த்தினர்.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனர்களும்,அவர்களின் மொழியான சமஸ்கிருதமும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் ஊடுருவியது.தமிழகத்திலே பார்ப்பன பண்பாடு சமூகத்தின் எல்லா அங்கங்களிலும் ஊடுருவினாலும் தமிழ் மொழியின் குறைவற்ற வளம் காரணமாக தமிழ் மொழிக்குள் அதன் இலக்கண வரம்புக்குள் சமஸ்கிருத்தத்தால் ஒருபோது ஊடுருவ இயலவில்லை.
களப்பிரர் ஆட்சிக்கு பின்னர் தந்தை பெரியார் தமிழகத்தை பார்ப்பன எதிர்ப்புக் கோட்டையாக மீண்டும் உருவாக்கினார்.ஆனாலும் தந்தை பெரியாரின் கண்முன்னாலேயே அவர் எழுப்பிய பார்ப்பன எதிர்ப்புக்கோட்டையை அண்ணாதுரை தலைமையிலான பிழைப்புவாத கும்பல் இந்திய ஆளும்வர்க்கங்களுக்கு காட்டிக்கொடுத்தது.  
அன்றைய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் முதல் இன்றைய அண்ணாதுரை,கருணாநிதி,வைகோ,ராமதாசு,திருமா போன்றோரை வைத்து, எப்போதும் கனன்று கொன்டிருக்கும் இந்த நெருப்பில் தண்ணீரை ஊற்றினாலும் அதனை முழுமையாக அணைக்க முடியவில்லை.அது எப்போதும் பற்றிக்கொள்வதற்கு தயாராக தம்மை உருவாக்கிகொண்டு காத்திருக்கிறது.பற்றவைக்கத்தான் தேவை ஒரு தீக்குச்சி மட்டுமே,அந்த தீ குச்சியாக ஈழ இறுதிப்போரின் போது முத்துக்குமாராகவும்,தற்போது செங்கொடியாகவும் இருக்கிறது!


 மூவரின் தூக்குதண்டனையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு,தமிழினத்தின் தலைவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அனைவரும் ராஜீவ் கொலையை நாங்கள் ஆதரிக்கவில்லை,அது கோரமானது.இப்படிப் பட்ட நடவடிக்கைகளை நாங்கள் என்றும் ஆதரித்ததில்லை,ஆதரிக்க போவதுமில்லை என்றுதான் சத்தியம் செய்கிறார்கள்.இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு,இந்தியாவின் தெற்காசிய மேலாதிக்க நோக்கத்திற்கு தாங்கள் எப்போதுமே எதிரிகளில்லை,என்றும் இந்தியாவின் பிராந்திய துணை வல்லரசு நோக்கங்களுக்கு சிங்களவர்களை விட,தமிழர்களே உண்மையான நண்பர்கள் என்று சாமியாடினாலும் இதை நம்புவதற்கு,இந்திய ஆளும்வர்க்கங்கள் தயாரில்லை.ஏனேன்றால் தமிழனின் தன்மானத்திற்கும்,சுயமரியாதைக்கும் சோதனை வரும்போதெல்லாம்,தனது உடலில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னர் யாரென்றே தெரியாதவர்கள்,தனது சாவுக்கு பின்னர் தமிழர்களின் தலைவர்களாகிவிடுகின்றனர்.உயிரற்ற அவர்களின் உடல்கள் மொத்த தமிழினத்தையே தலைமையேற்று வழிநடத்துகிறது.


     சென்னை உயர்நீதிமன்றம் 8 வார இடைக்கால தடை விதித்திருந்தாலும் இது நிரந்தரமாகுமா? இல்லையா? என்பது இக்காலக்கட்டத்தில் தமிழர்கள் எப்படி நடந்துகொள்ளபோகிறார்கள்.என்பதை பொருத்தே அமையபோகிறது.அது இந்திய ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு எஞ்சியதையும் இழக்க போகிறதா? அதாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும் தமிழர்களின் தனித்த அடையாளங்களை விடப்போகிறதா,இல்லையா என்பதுதான். ஆகவே இந்த தூக்குதண்டனையும்,இடைக்கால தடையும் தமிழர்களுக்கு இந்திய ஆளும்வர்க்கங்கள் வைத்திருக்கும் பரிசோதனை!  


     இப்போது நம்முன்னே இரண்டு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
1.பார்ப்பன எதிர்ப்பு,சுயமரியாதை,தன்மானம்,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை தூக்கியெறிந்துவிட்டு அடங்கிவிடு………..
2.மேற்கண்டவைகளை விட மறுத்தால் மூவரின் தூக்கு நிச்சயம்!


     இதில் இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு நமக்கு நிபந்தனை விதித்துள்ளது.இதில் முதலாவதை செய்து மூவரையும் காப்பாற்றுவது என்று தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள்.
ஆனால்,இதை எங்களால் ஏற்க முடியாது என்று முத்துக்குமார்,செங்கொடி தலைமையிலான சுயமரியாதை தன்மானத் தமிழர்கள் முழக்கமிடுகிறார்கள்.

ஆம் நாம் இரண்டாவதை தேரிவு செய்ய முடியுமே தவிர,முதலாவது நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது.கெஞ்சவோ,கூத்தாடவோ முடியாதுஅப்படியானால் அம்மூன்று தமிழர்களின் சாவு நிச்சயம் தானா?அதை தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லையா?ஏன் இல்லை. வழி இருக்கிறது.அந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலும் நமக்கிருக்கிறது.தேவை தலைமை மட்டுமே.எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுபோகும்.நம் உடலில் நாம் தீ வைத்துகொள்வதற்கு பதில் இந்தியாவின் தெற்காசிய பிராந்திய துணை வல்லரசு கனவுகளுக்கு கொல்லி வைப்போம்.இதை செய்வதன் மூலம் அம்மூவரின் உயிரை மட்டுமல்ல,பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் காத்துவரும் பார்ப்பன எதிர்ப்பு,தன்மானம்,சுயமரியாதை,நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை காப்பாற்றுவோம்.
 

Thursday, April 28, 2011

தமிழினத் துரோகிகள்..!

Source: http://www.dinamani.com/

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..

Wednesday, April 6, 2011

மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்

பழ.நெடுமாறன்
Source: http://www.dinamani.com/

முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.

நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது.

இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.

அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.

எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.

அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.

மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.

அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?

திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.

தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.

2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.

ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.

தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.

மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை.

அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.

சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.

இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.

உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.

ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.

1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.

கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.

Friday, February 18, 2011

கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிரடி ரெய்டு

Source:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190524

சென்னை: ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசில் சி.பி.ஐ.,அதிகாரிகள் நுழைந்து அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவு முழுவதும் நடந்த இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பரிசீலித்து நிர்வாக உறுப்பினர்களிடம் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுத்து வருகின்றனர்.
அரசியல் தலையீடு இல்லையே : மத்திய அமைச்சராக இருந்த ராஜா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விற்றதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை வந்ததையடுத்து ராஜா மற்றும் அதிகாரிகள் ஸ்வான் நிறுவன உரிமையாளர் ஷாகித்உஸ்மான்பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களாக நடத்திய விசாரணையில் வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும், பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் சி.பி.ஐ., தனது விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருந்தது.
இந்நிலையில் ஸ்வான் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் அந்நிறுவனம் ஆயிரத்து 537 கோடிக்கு வாங்கிய சில மாதங்களிலேயே 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது. இத‌ைனை தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கும் கலைஞர் டி.வி.,க்கும் இடையில் பண பரிவர்த்தனை நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது ஸ்வான் நிறுவனத்தின் மற்றொரு கிளை அலுவலகமான ( சினியுக் ) மூலம் 200 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கலக்கம் : இது குறித்து கலைஞர் டி.வி., அளித்துள்ள விளக்கத்தில் இந்த பணம் பரிவர்த்தனை கடனாக பெறப்பட்டது.பின்னர் 31 கோடி வட்டியுடன் சட்டத்திற்குட்பட்டு வருமான வரி செலுத்தி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்களது நிறுவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடத்தலாம்.

எங்களிடம் ஆவணஙகள் முறையாக உள்ளன என்று கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை அண்ணாஅறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சி.பி.,ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். எட்டு அதிகாரிகள் முதல் 10 பேர் வரை சோதனையிட்டனர். சோதனைகள் முடிந்து அதிகாரிகள் டில்லி புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் தி.மு.க., கலக்கம் அடைந்துள்ளது.

இதுபோல காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது.


சம்மன் இல்லை : கனிமொழி : 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு விசாரணை தொடர்பாக தனக்கு சி.பி.ஐ., சம்மன் ஏதும் வரவில்லை என ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியால்டியின் கிளை நிறுவனமான ஸ்வான் நிறுவனத்தின் ஒரு அங்கமான சினியுக் வாயிலாக கலைஞர் தொலைக்காட்சிக்கு பணபரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் கனிமொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்த ரெய்டு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் , தனக்கு சி.பி.ஐ.,யிடம் இருந்து சம்மன் ஏதும் வரவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் எதையும் மூடி மறைக்கவில்லை என்றும் , பணபரிவர்த்தனை குறித்த முழு விபரங்களையும் தொலைக்காட்சியின் சி.இ.ஓ., தெளிவாக விளக்கியுள்ளதாகவும் கூறினார்.

பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்

 செ. குணசேகரன்
www.dinamani.com

 
சமீபத்தில் தோழர் ப. ஜீவானந்தத்தின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கருத்து நகைப்பை வரவழைத்தது. அவர் பேசும்போது, தனக்கும் தோழர் ப. ஜீவானந்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னைத் தோழர் ஜீவாவுக்கு நிகராக, தோழர் ஜீவாவின் தோழராக முதல்வர் கருணாநிதி நிலைநிறுத்த முயன்றிருப்பது அப்பட்டமான சரித்திரப் புரட்டு.
தொடர்பு என்றால் நெருங்கிய பழக்கமா? அல்லது அவரது வாழ்வுக்கும் இவரது வாழ்வுக்கும் ஒருமைப்பாடு உள்ளது போல் தோற்றமா? ஜீவா 1906-ம் ஆண்டு பிறந்தவர். இவரோ 1924-ம் ஆண்டு பிறந்தவர். வயது அளவில் 18 ஆண்டுகள் மூத்தவர் ஜீவா. அப்படியிருக்க பழக்கம் நெருங்கிய தொடர்பாக இருக்க வாய்ப்பில்லை. ஜீவாவுடைய வாழ்வுக்கும் கருணாநிதியின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதுபோல் பேசியிருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பொய்யை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட முயல்கிறார் முதல்வர் கருணாநிதி. 
இன்று இவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், இவர் நாவசைந்தால் அதில் வரும் அத்துணை வார்த்தைகளும், பத்திரிகைகளிலே அச்சேறுவதாலும், தனது குடும்பச் சொத்தாக இரண்டு தொலைக்காட்சிச் சேனல்களை வைத்துக் கொண்டிருப்பதாலும் இவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமோ? இவர் கூறினால் நான்கும் மூன்றும் எட்டாகி விடுமா என்ன? 
தோழர் ஜீவாவோ தியாகத்தின் இமயம். முதல்வர் கருணாநிதியோ குடும்பப்பாசம் என்கிற சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம். பொது வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இருவருடைய வாழ்க்கையும் ஒன்று சேர்த்துப் பார்க்க முடியாத இரு வேறு துருவங்கள். 
இன்று ஜீவா இல்லை என்பதாலும், இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜீவாவைப் பற்றித் தெரியாது என்பதாலும் ஜீவாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னை ஜீவாவுடன் ஒப்பிட முதல்வர் கருணாநிதி துடிப்பது, பரங்கிமலை தன்னை இமயத்துடன் ஒப்பிட்டு மகிழ்வது போலல்லவா இருக்கிறது. 
1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி, இலங்கை சுற்றுப் பயணம் செல்லும் முன், காரைக்குடி அருகே சிராவயல் என்ற கிராமத்தில் "காந்தி ஆசிரமம்' என்ற பெயரில் ஜீவா ஒரு ஆசிரமம் நடத்துவதாகக் கேள்விப்பட்டார். சுப்பிரமணிய சிவாவுடன் மகாத்மா காந்தி சிராவயலுக்கு விஜயம் செய்தார். ஆசிரமம் நடத்தி வரும் ஜீவாவிடம் ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். காந்தியாரிடம், "சபர்மதி ஆசிரமத்தில் நோயால் அவதிப்பட்ட கன்றுக் குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக ஒரு செய்தி சுதேசமித்திரனில் பார்த்தேன். தாங்கள்தான் அந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். 
அஹிம்சையே உருவான தாங்கள் அதைச் செய்யலாமா?' என மகாத்மாவிடம் ஜீவா கேள்வி கேட்டார். இப்படி ஒரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத மகாத்மா, ஜீவாவின் நேர்மையான, துணிச்சலான செயல்பாட்டால் கவரப்பட்டார். "இன்று நான் பரிசுத்தமான ஒரு மனிதரைச் சந்தித்தேன்' எனக் கூறினார் மகாத்மா. 
அதற்குப் பிறகு தேசத்தைப் பற்றியே பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த ஜீவாவைப் பற்றி, மகாத்மாவுக்கு ஒரு சந்தேகம்! முழுநேரத் தேசத்தொண்டு செய்கின்ற இவர் வசதி உள்ளவரா என்பதுதான் அந்தச் சந்தேகம்! எப்படிக் கேட்பது என ஒருவிதத் தயக்கம் மகாத்மாவுக்கு! மகாத்மா, ஜீவாவிடம் "உங்களுக்குச் சொத்து அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுவிட்டார். 
"நான் ஓர் எளியவன்' என்று சொல்ல ஜீவாவுக்கு ஏதோ ஓர் இனம்புரியாத கூச்சம். "இந்த இந்தியா தான் என் சொத்து' என்று பதிலளித்தார் ஜீவா. மறுகணமே மகாத்மா, "இல்லை இல்லை, நீங்கள் தான் இந்த இந்தியாவுக்கே சொத்து' எனக் கூறி நெகிழ்ந்தார். 
இந்தியாவின் சொத்து என மகாத்மா பாராட்டினாரே அந்த ஜீவாவும் இந்தியாவின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்று, தனது இரும்புப் பெட்டியை நிரப்பிய ஆட்சியின் தலைமகனான கருணாநிதியும் ஒன்றா? இவர் தன்னை ஜீவாவுடன் ஒப்பிடுவது எப்படிச் சரி? 
ஒருசமயம் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப் பணியில் மும்முரமாக இருந்த ஜீவாவைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஜீவா இருக்கிறாரா? என அலுவலகப் பணியாளர்களிடம் கேட்க, அவரும் ஜீவா இருக்கிறார் என்று கூறி, அந்தப் பெண்மணியை ஜீவாவின் அறைக்கே அழைத்துச் சென்றார். எழுத்தில் முழு கவனத்துடன் இருந்த ஜீவா, அந்தப்பெண் வந்திருப்பதைக்கூட கவனிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார்.
எழுதி முடித்தவுடன் ஜீவா இயல்பான பரிவுக்குரலுடன் "என்னம்மா வேண்டும்?' என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, "உங்களைத்தான் பார்க்க வந்தேன்' எனக் கூறினார். ஜீவாவோ, "நீ யாரம்மா?' எனக் கேட்டார். அந்தப் பெண் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் மல்க ஜீவாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஜீவாவோ, "நான் என்னம்மா கேட்டுவிட்டேன்? நீ யார்?' என மறுபடியும் கேட்டவுடன் கண்ணீர்விட்ட அந்தப் பெண், ஒரு பேப்பரை எடுத்து, "என் தாத்தா பெயர் குலசேகரதாஸ், என் தாயின் பெயர் கண்ணம்மா' என்று எழுதி ஜீவாவிடம் கொடுத்தார். ஜீவாவின் கண்கள் குளமாகிவிட்டன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு தன் வேஷ்டியின் ஒரு முனையை கையில் எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே அதே பேப்பரின் பின் பக்கத்தைத் திருப்பி "நீ தான் என் மகள் குமுதா' என்று எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாராம். 
நெடுநாள்கள் சிறையில் இருந்து, கட்சிக்காகப் பல மாநிலங்களுக்குச் சென்று, பல காலம் கழித்து சென்னை வந்த ஜீவாவுக்கு குழந்தையாக இருந்த தன் மகள் பெரிய பெண்ணாக ஆனது கூடத் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை. இப்படி நாட்டுக்காக உழைத்துத் தனது குடும்பத்தையே மறந்த ஜீவாவும், தனது குடும்பம் செல்வச் செழிப்புடன் எல்லா துறைகளையும் ஆக்கிரமித்துக் கொடிகட்டிப்பறக்கவும், நாட்டின் சொத்தை விற்றுத் தனது குடும்பச் சொத்தை அதிகரிக்கவும் பொதுவாழ்க்கையைப் பயன்படுத்தும் கருணாநிதியும் ஒன்றா? 
1957-ல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. தி.மு.க. முதன்முதலில் பங்கேற்ற தேர்தல் அது. அப்போதெல்லாம் 234 தொகுதிகளிலும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும். தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸýக்கு எதிரான சுயேச்சைகளை ஆதரிக்கும். அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருள்படுத்தாமல், ஜீவரத்தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. 
இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகுதி இருக்கிறது? மொழி வழி மாகாணம் பிரிக்கும்போது, விடுபட்ட தமிழ்பேசும் சில பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு இருந்தன. அதைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் தோழர் ஜீவாவும் முக்கியமானவர். பின் அந்தப் பகுதிகள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது. 
அதற்குப் பாராட்டுக் கூட்டம் காமராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது காமராஜ் நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டிக்குச் சென்று நிகழ்ச்சிக்குக் கூடவே அழைத்துச் செல்ல விரும்பி ஜீவாவின் வீட்டுக்குச் சென்றார். ஜீவா காமராஜை வரவேற்றார். தான் வந்த நோக்கத்தை காமராஜ் ஜீவாவிடம் கூறினார். ஜீவாவோ, ""இப்போது நான் உங்களுடன் வர இயலாது. சுமார் அரை மணி நேரமாவது ஆகும். நீங்கள் செல்லுங்கள். நான் பின்னாலே வந்து விடுவேன்'' என்று கூறினார். காமராஜ் விடுவதாக இல்லை. ஜீவா வராமல் இருந்துவிடக்கூடாது என்பதால், ""நான் அரைமணி நேரம் காத்திருக்கிறேன். இரண்டு பேரும் ஒன்றாகச் செல்வோம்'' எனக் கூறினார். ""இல்லை... இல்லை, அரை மணி நேரத்துக்கும் மேலே ஆகும். நீங்கள் போங்கள்'' என ஜீவா மறுக்கிறார். ""என்ன காரணம்?'' என காமராஜ் கேட்க, அதற்கு ஜீவா, ""என்னிடம் இருப்பது இரண்டே இரண்டு உடைதான். ஒன்றை அணிந்து இருக்கிறேன். இன்னொன்றைத் துவைத்துக் காயப்போட்டு இருக்கிறேன். இன்றைக்குப் பார்த்து வெயில்கூட சரியாக அடிக்கவில்லை'' என வருத்தத்தோடு கூறினாராம். 
முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜின் விழிகளில் கண்ணீர் ததும்பியது என்று நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஒப்பற்ற தியாகி ஜீவாவும் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் தனது குடும்பத்தினரை உயர்த்தி மகிழ்ந்திருக்கும் கருணாநிதியும் ஒன்றா? சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜீவாவுடன் தன்னை முதல்வர் கருணாநிதி ஒப்பிட்டுக் கொள்வதன் மூலம் சரித்திரப் புரட்டை அவிழ்த்துவிட முயல்கிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் கதையாக அல்லவா இருக்கிறது இது.

Monday, January 3, 2011

2010 ல் குடும்பச் சொத்தாகிய தமிழ் சினிமா..

சினிமாவால் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தம்பிகளை சினிமாவே ஆட்சியை விட்டு அகற்றப் போகிறது என்ற எண்ணத்தைத் உருவாக்கிய ஆண்டு.
தமிழ்ச் சினிமா 2010 ல் அடைந்த முன்னேற்றமென்ன என்ற கேள்விக்கு மூன்று சிறப்பான பதில்கள் உள்ளன.
01. தமிழக முதல்வர் மு. கருணாநிதி குடும்பத்தவர் தயாரிக்கும் படங்களே தமிழகத்தில் பாதுகாப்பாக காண்பிக்கப்பட முடியும்…
02. சூப்பர்ஸ்டார், உலகநாயகன், இளையதளபதி, அல்டிமேட்ஸ்டார், சுப்பிரீம்ஸ்டார் போன்ற ஸ்டார்களே கருணாநிதி குடும்பத்தின் படியேறி படமோட்ட வேண்டிய நிலை.. சன்னின் ஒளியில்தான் ஸ்டார்கள் ஒளிர்கின்றன என்ற அவலமான உண்மையை மௌனமாக ஏற்றுக்கொண்ட ஆண்டு..
03. இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வர் அதிகமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆண்டு. அவரின் பேரப்பிள்ளைகளே கதாநாயகர்களாகவும், அவர்களின் தொலைக்காட்சி நிறுவனங்களே திரைப்பட கொள்வனவாளராகவும் ஏறத்தாழ தனியுரிமை பெற வழி சமைத்த ஆண்டு..
<
மேற்கண்ட மூன்று விடயங்களையும் மனதில் நிறுத்தி கீழே தரப்படும் மூன்று திரைப்படங்களுக்கு நடைபெற்ற நிகழ்வைப் பார்த்தால் 2010 ன் தமிழக சினிமாவிற்கான மதிப்பீட்டை செம்மையாக விளங்கக்கூடியதாக இருக்கும்..
எந்திரன் திரைப்படம்
சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யாராய், ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், வைரமுத்து என்று சினிமா பிரபலங்கள் எல்லாமே ஒன்றிணைந்தாலும் கூட, சன் டி.வி கலாநிதிமாறனை விட்டால் இப்படிப்பட்ட திரைப்படத்தையே வர்த்தகத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்ற நிலையை உணர்த்திய ஆண்டு. எந்திரன் திரைப்படம் ஆகா ஓகோ என்று பேசப்படும் திரைப்படம் இல்லை என்றாலும் அதிக பணத்திற்கு விற்று சன் நிறுவனம் இலாபம் உழைத்தது. இலாபத்தின் பெருந்தொகை மு.கருணாநிதி குடும்பத்திற்கு போவதைத் தடுத்தால் சூப்பர் ஸ்டாராலேயே தலை நிமிர முடியாது என்ற உண்மையை உரைத்துப் போயுள்ள ஆண்டு.
மன்மதன் அம்பு
உலக நாயகனும் கலைஞர் குடும்பத்தை அண்டினால்தான் திரையரங்கு கிடைக்கும் என்று முடிவு செய்து பவ்வியமாக நடந்த ஆண்டு. கலைஞர் தன்னைப் பாராட்டினார் என்று விஜய் டிவியில் அவர் வடித்துக் காட்டிய கண்ணீர் ஒன்றே போதும் உண்மையை விளங்க. மன்மதன் அம்பு திரைப்படத்தை தயாரித்து வர்த்தக உரிமைகளை விற்பனை செய்து பெரிய இலாபமெடுத்தது கலைஞானி கமலோ கே.எஸ்.ரவிகுமாரோ அல்ல என்ற உண்மையை எடுத்துரைத்த ஆண்டு.
<
இளையதளபதி விஜய்
இளையதளபதி விஜய் படம் வருகிறதென்றால் மற்றய திரைப்படங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்று தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சொன்ன காலமொன்று இருந்தது. ஆனால் கலைஞர் குடும்பத்து சினிமாக்காரரரையும் வர்த்தகரையும் பகைத்தால் விஜய் நடித்த காவலனையே காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உரைத்த ஆண்டு. விஜய் படமொன்று திரையிட இடமில்லாமல் அடுத்த ஆண்டுக்கு தூக்கியெறியப்பட்ட ஆண்டு. ஆக ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற நிலை விஜய் படத்திற்கு..
இந்த மூன்று விடயங்களையும் உதாரணங்களாக வைத்துக் கொண்டு மற்றய படங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதற்கு வெளியால் வந்த சசிகுமாரின் ஈசன் படம் நல்ல படம் இல்லை என்ற செய்திகள் படம் வரமுன்னரே கச்சிதமாக பரப்பப்பட்டுவிட்டன..
இது தவிர மைனா போன்ற படங்கள் ஓடியுள்ளன, அங்கும் கலைஞர் குடும்பமே இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இராம நாராயணனும், நடிகர் சங்கத்தில் சரத்குமாரும், வி.சி. குகநாதனும் இதே குடும்பத்தினர்க்கான ஊதுகுழல்களாக இருந்து வருகின்றனர் என்ற முணுமுணுப்பு பலரிடையே இருக்கிறது.
தமிழக திரைப்பட ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாகிப் போக மு.கருணாநிதி குடும்பத்து ஜீரோக்கள் எல்லாம் ஹீரோக்கள் ஆன காலம் என்று ஜெயலலிதா கருத்துரைத்திருந்தார். தமிழ் சினிமா செத்துவிட்டது என்று ராதாரவி கூறியிருந்தார். இவைகள் தமிழ் சினிமாவின் 2010 ம் ஆண்டுக்கான எதிரணி மதிப்பீடாக உள்ளது.
ஆனால் 2010 ல் தமிழ் சினிமாவில் சில மாற்றங்களும் ஏற்பட்டதை மறுக்க முடியாது. களவாணி, மைனா, ஈசன், மதறாசபட்டணம், அங்காடித்தெரு, பசங்க போன்ற சிறிய படங்கள் கவனத்தைத் தொட்ட ஆண்டாக உள்ளது. பெரிய கதாநாயகர்கள் கலைஞர் குடும்பத்தின் காலடியில் அஸ்தமனமாகிவிட புதிய நட்சத்திரங்கள் முளைக்கப் போவதையும் காட்டி நிற்கிறது.
இயக்குனர் பாலாவும், அவர் வழி வந்த இளைஞர்களும் பாரதிராஜா, பாக்கியராஜா காலம் போல ஒரு மாற்றத்தை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இயக்குநர் சீமான் சிறையில் இருந்து வந்தபோது அவரை இயக்குனர் பாலா நேரடியாக சந்தித்துவிட்டு மௌனமாக வந்தது, கலைஞருக்கு புதியவர்கள் தெரிவித்த ஒரு சிக்னல் என்றே கூற வேண்டும்.
அதேவேளை..
காவலன் படம் புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் காண்பிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. அசின் செய்த தவறு அந்தப்படத்தை பாதித்துவிட்டது என்று கூறுவதைவிட, புதுமாத்தளனுக்கு பின்னர் புலம் பெயர் தமிழரிடையே தெளிவான பார்வை ஒன்று மின்னல் கீற்றாக தெரிவதையும் அது காட்டுகிறது. புலம் பெயர் தமிழர் படமெடுக்கப் போனால் சென்னை விமான நிலையத்தில் புலிப்பட்டம் கட்டி திருப்பி அனுப்பப்படுவதை இப்போது புலம் பெயர் தமிழர் உணர்கிறார்கள். இலங்கை தமிழ் சினிமா வளராமைக்கு இலங்கைக் கலைஞர்கள் அல்ல இந்தியாவின் இத்தைகைய செயற்பாடுகளே என்பதும் பேசு பொருளாக்கப்படக் கூடிய திறவுகோலை உருவாக்கிய ஆண்டாகவும் இது அமைந்தது. இலங்கைக் கடலில் மீன் பிடிக்க ஆசை கொண்ட இந்தியா தனது கடலில் மற்றவன் மீன் பிடிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது போலவே சினிமாவிலும் இருக்கிறதை தெளிவாக உணர்த்திய ஆண்டாக உள்ளது.
வேலைக்காரி, பராசக்தி திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவை ஆயுதமாக்கி ஆட்சிக்கு வந்த திமுக இப்போது கலைஞருக்குப் பின் அவருடைய மகனே துணை முதல்வர் என்ற இடத்திற்கு போய் குடும்ப ராகம் பாடியுள்ளது. இப்போது தம்மை உயர்த்திய தமிழ் சினிமா ஏணியையும் கலைஞர் குடும்பம் தாம் மட்டுமே ஏறும் ஏணிஎன்றே கருதத் தலைப்பட்டுவிட்டது என்ற கவலை தமிழக சினிமா வட்டாரங்களில் வாய்திறக்க முடியாத குமுறலாகக் கேட்கிறது.
மூன்று தீபாவளி கண்ட எம்.கே.தியாகராஜபாகவதர் காலத்து மனோநிலை கொண்டவர்களாகவே தமிழ் சினிமா திரையரங்க முதலாளிகள் இருப்பதையும், அவர்கள் தமது திரையரங்கங்களை குத்தகைக்கு உழைக்கும் இடமாக்கி குப்பை கொட்டிய ஆண்டாகவும் இது இருக்கிறது.
புலம் பெயர் நாடுகளில் திரையரங்கங்களை மறித்து ஐங்கரன் செய்த வேலை இப்போது தமிழகத்திலம் தொற்றி தமிழ் சினிமாவையே சீரழித்திருப்பதையும் இந்த ஆண்டு உணர்த்துகிறது.
இப்படி தமிழ் சினிமா அடைந்துள்ள மோசமான தேக்கம் ஒரு கட்டத்தில் கட்டுடைத்து புதிய பாதையில் திரும்பும் என்பது கவனிக்கத்தக்கது. மற்றக் கலைஞனும் வாழவேண்டும் என்று சிறிய வழியை விடாமல் எல்லாவற்றையும் ஏப்பம் விட்டால் என்ன நடக்கும் ? பதில் 2010 ல் சன், கலைஞர் குடும்பம் இழைத்த தவறுகள் 2 ஜி ஒளிக்கற்றை விவகாரமாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் சினிமாவால் ஆட்சிக்கு வரலாம் என்று உணர்த்திய அண்ணாவின் அன்புத் தம்பிகள் சினிமாவால் ஆட்சியை விட்டே போக வேண்டிய நிலை வரும் என்று மதிப்பிட வேண்டிய நிலைக்கு 2010 தமிழ் சினிமா இருந்துள்ளது. கலைஞரின் இளைஞன் படத்திற்குக் கொடுக்கப்படும் தாங்க முடியாத விளம்பரத்தைவிட 2010 தமிழ் சினிமாவிற்கு வேறென்ன மதிப்பீடு வேண்டும்.
அலைகள் 2010 பார்வை