Thursday, April 15, 2010

பெண்ணெழுத்துப் பாதையில் முட் கற்கள் பதிக்கும் லீனா மணிமேகலை

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5740:2010-04-13-19-16-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

லீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.

பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.

ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.

அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்ப‌டி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?

குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.

பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?

சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?

‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?

இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.

நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.

உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.

பெண்ணியப் படைப்பு என்னவென்பதை முன்னோடிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. நல்ல படைப்புகளைத் தாருங்கள்! வாழ்த்துக்கள்!!
- மினர்வா ( minerva@keetru.com )

Tuesday, April 13, 2010

பழைய நடிகை லீனாவும் புது ப்ரொட்யூசர் அ.மார்க்சும்

Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5739:2010-04-13-10-52-39&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

தமிழ்த் திரைப்படங்களின் அசத்தலான ஃபார்முலாக்களில் ஒன்று ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து ஊறுகாய் கம்பெனி தொடங்கி, வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெரும் பணக்காரனாகிவிடுவது. இந்த ஃபார்முலா விளம்பரங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. "நான் வளர்கிறேனே ம்ம்மி" காம்ப்ளான் விளம்பரம், "குடிக்க வேணாம், அப்படியே சாப்பிடுவேன்" ஹார்லிக்ஸ் விளம்பரம் இரண்டும் வெற்றிகரமான உதாரணங்கள்.

தமிழ் இலக்கிய உலகத்திலும் இந்த ஃபார்முலா வெற்றி பெற்றிருப்பதைக் கவனிக்கும்போது, தமிழ் நாட்டிற்கே உரிய இந்த ஸ்பெஷாலிட்டியை பாராட்டியே ஆகவேண்டும் என்ற பரவசம் ஏற்படுகிறது. இன்று பெரிய இலக்கியவாதிகளாக பெயர் பெற்றிருக்கும் பலர் சினிமாப் பாட்டைப் போட்டு அந்த கேப்பில் இலக்கியத்தில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும்.

"பறை" பட சர்ச்சை, லயோலா கல்லூரி துப்பட்டா தகராறு, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த யாரோ ஏற்பாடு செய்திருந்த இரண்டு ரயில் பெட்டிகளை கடத்திச் சென்ற The Great Train Robbery துணிகரக் கொள்ளை, யோனியில் மசிர் கவிதை, கூலி கேட்ட தொழிலாளியை கடல் கடந்து வந்த எழுத்தாளரை அடியாளாக ஏவி விட்டு அடித்த "செங்கடல்" படம் என்று அடுத்து அடுத்து வெற்றிகரமான சுயவிளம்பரப் படங்களைத் தந்த லீனா மணிமேகலையின் அடுத்த விளம்பரப் படமான இந்துத்துவா எதிர்ப்புப் படமும் ஒரு வாரம் வெற்றிகரமாக "ஏ" சென்டர்களில் ஓடும் என்று நம்பலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வெற்றிகரமான விளம்பரப் பட நடிகை லீனாவின் சளைக்காத இந்த படைப்பு முயற்சிகளில் ஏப்ரல் – 15 அன்று ரிலீசாக இருக்கும் இந்துத்துவா எதிர்ப்பு, கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான கருத்துச் சுதந்திர போர்ப் பிரகடனப் படம் இரண்டு வகையில் முக்கியமான மைல் கல்.

வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டின் கேந்திர மையங்கள் எங்கும் "கலை இலக்கிய இரவு" விழாக்கள் நடத்தி தமிழ் கலாச்சாரப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் – மின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்ற மூத்த ஃபிகர்களையும், தமிழ் அறிவுப் பரப்பின் சீனியர் அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்களையும் வைத்து 5 மணி நேரத்தில் எடுத்து அன்றே ரிலீசாகப் போகும் படம் என்பது ஒரு சாதனை.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவாளியாகவும், மனித உரிமைப் போராளியாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த அ. மார்க்ஸ் அவர்களை, இந்த மெகா விளம்பரப் படத்தின் மூலம் ப்ரொட்யூசர் அந்தஸ்திற்கு உயர்த்தியிருப்பது அதைவிட பெரிய சாதனை. ஒரே படத்தில் இரண்டு மைல் கல்கள்.

லீனா மணிமேகலையின் இந்த விளம்பரப் படத்தின் கதைக் கருவும் திரைக்கதை அம்சங்களும் மணிரத்தினத்தின் பாணியில் மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதும் கடந்த இரண்டு வாரங்களாக இலக்கிய வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடாவதி ஜர்னலிசத்திற்கு வாழ்க்கைப்பட்டுவிட்டால் எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பது விதி. மணிரத்தினத்தின் வாரிசு லீனா மணிமேகலை வாயில் இருந்து ஒரு தகவலும் கசியப் போவதில்லை. மணிரத்தினம் மேதை, அதனால் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள். லீனா மேதையா மக்கா என்ற கேள்வியும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வந்தது. மக்கு என்கிறார்கள் பலர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யோசனைக்கு நடுவே எடிட்டரின் ஏகவசனங்கள் பத்தி பத்தியாக மூளைக்குள் ஓட, மேசை முன்னே மல்லுக்கட்டி உட்கார்ந்ததும் பேனா வழியாக சிந்தனைகள் தானாக வழிய ஆரம்பித்துவிட்டது.

ஃபோக்கஸ் லீனா இல்லை. புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ். இரண்டு விமர்சனக் கணைகள்.

விமர்சனக் கணை ஒன்று. லீனா மணிமேகலையை வைத்து அ. மார்க்ஸ் எடுக்கும் இந்த முதல் படத்தில், சிபிஎம் – மின் மூத்த மூன்று ஃபிகர்கள் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஒற்றைக் காலில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கும் சிபிஎம் – க்கும் ஏழாம் பொருத்தம். இந்த சிபிஎம் கட்சிதானே அவர்களுடைய சொந்த கட்சித் தலைவர் W. R. வரதராஜன் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு வைத்து, கட்சியில் இருந்து ஒதுக்கி, தற்கொலை செய்து கொள்ள வைத்தது? W. R. வரதராஜன் தற்கொலைச் செய்தி தினசரிகளில் ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டு, சிபிஎம் – மின் மானம் கப்பலேறிய பிறகு, எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தோழர். வரதராஜனுக்கு செவ்வணக்கம் செலுத்தி பிரச்சினையை குழிதோண்டிப் புதைத்ததும் இதே சிபிஎம் தானே? W. R. வரதராஜன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்ட பாமக அலுவலகத்தை சூறையாடிய சிபிஎம் காம்ரேடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதே சிபிஎம் – மின் லீடிங் ஃபிகர்கள் கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த முகத்தோடு கலந்து கொள்கிறார்கள்? அவர்களை புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதன் மர்மம் என்ன?

கணை இரண்டு. கேரளாவின் மூத்த எழுத்தாளர் பால் சக்காரியா கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கேரளாவின் காஸர்கோடு என்ற மாவட்டம் பையனூரில் சிபிஎம் – மின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். காரணம்? அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உன்னிதன், மல்லாபுரம் மாவட்டம் மஞ்சேரியில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது, DYFI உறுப்பினர்கள் அவருடைய வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி வீடியோ எடுத்ததை பால் சக்காரியா கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை விட்டதற்கு பால் சக்காரியாவுக்கு கிடைத்தது உதை. இது சிபிஎம் கருத்து சுதந்திரத்திற்குத் தரும் ஜனநாயகம். விளம்பர நடிகை லீனோவோ புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்சோ கேரள சிபிஎம் – மின் இந்த ரவுடித்தனைத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டார்களா? கண்டனக் கூட்டம் நடத்தினார்களா? இல்லை இனிமேலாவது நடத்துவார்களா? அப்படி நடத்தினால் அதில் சிபிஎம்-மின் மூத்த மூன்று பிகர்களும் கலந்து கொள்வார்களா?

அப்படி எல்லாம் முடியாது என்றால், பிறகு என்ன எழவுக்கு இப்போது இந்த ஒப்பாரி விளம்பரப் படத்தை அ.மார்க்ஸ் அவசர அவசரமாக தயாரித்து வெளியிடுகிறார்?

விளம்பரப் பட நடிகை லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி ஒரு போலீஸ் புகார் கொடுத்துவிட்டதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்சுக்கு இந்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. பெருஞ்சித்திரனார் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பலபேருடைய கோவணங்களை உருவி சேர்த்து வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இப்போதான் தெரிகிறது, அடுத்து யார் கோவணத்தை உருவலாம் என்ற அவரசத்தில் இருந்த அ. மார்க்சின் கோவணத்தை யாரோ உருவி விட்டிருக்காங்க என்று.
- அ.அமுதன் ( amuthan70@yahoo.com )

Monday, April 12, 2010

லீனா மணிமேகலை: என் வேலை தொடைகளை எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது


நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை (endra Bull dog) எழுதிய இரண்டு (Kuppai)கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் (Leena) வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும் கலைக்க முயன்றும்
என் சூலகத்தில் தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:
If Communists have any respect on their leaders, they should explain what it means to this prostitute.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-(pottai)லீனா மணிமேகலை
கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள் கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில பன்னாடைகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும் ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு” தீனி போடுவதுதான் லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது. செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு. ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கோலோச்சும் இந்தத் துறையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள் லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன் இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம். ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம். சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும் அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது. போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா, அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான தொடர்பு தரும் திமிரா என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா. இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன், தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின் மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார். மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட லீனா “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது. ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத் தெரிந்த பலருக்கும்….. கடைசியாக இராஜபக்சேவுக்கும் ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம். இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில் இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–


பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!
ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.

Thursday, April 1, 2010

கலைஞர் அவர்களே, மௌன ராகம்தான் பாடலாமா?: டி.இராஜேந்தர்

இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அறிக்கை:

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். சிங்கள அரசால் சிதைக்கப்பட்டிருக்கிறது அந்த மாவீரனின் நினைவாலயம்.. இதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை கலைஞர் இருக்கும் அண்ணா அறிவாலயம்..

வன்னியின் தொன்மையையும் பண்டார வன்னியனின் சிறப்பையும் பறைசாற்றும் நினைவுக்கல் சிங்கள அரசால் நொறுக்கப்பட்டது. பாயும்புலி பண்டார வன்னியன் என்று சரித்திர நாவல்; எழுதி சரித்திர நாயகர் என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அவர்களே..! சிங்கள அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும். மாறாக சராசரி தமிழனாகக் கூட குரல் கொடுக்க மறுக்கிறீர்களே ஏன்?

இப்படி மௌன ராகம்தான் பாடலாமா? தமிழினத்தின் மானம்தான் இப்படி போகலாமா? நீங்கள் காப்பாற்ற நினைப்பது உங்கள் அரசு எங்கே போனது உங்கள் போர் முரசு? இலங்கையிலே மாவீரர்களின் கல்லறைகள் தகர்க்கப்படுகிறது. நினைவுத் தூண்கள் நொறுக்கப்படுகிறது. சிங்களவன் நிலத்தைக் கீறி எடுக்கிறான்.. எலும்புகளை வாரி இறைக்கிறான்.. குப்பையிலே கொட்டிக் களிக்கிறான்.. இங்கிருக்கும் தமிழன் ஏன் கைகட்டிக் கிடக்கிறான்?

அன்று 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி யாழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப்பட்டது.. அதுபோல் தமிழீழத்தின் கடைசி மன்னன் சங்கிலியின் சிலையும் நொறுக்கப்படலாம்.. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களும் சிதைக்கப்படலாம்… இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இங்கிருக்கும் தமிழக அரசுதான் தூங்கலாமா? இலங்கைத் தமிழர்கள்தான் இத்துணை துயரங்களைத் தாங்கலாமா?

ஈழத்திலே சிங்கள இராணுவம் புலிகளுடன் நடத்திய யுத்தம் முடிந்து விட்டது. இருந்தும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மறுப்பது ஏன்? தமிழர்களின் சொந்த நிலங்களில் சிங்களர்களை குடியமர்த்தி வருவது ஏன்? சிங்களவர் தமிழீழத்தின் கல்வெட்டுகளை மட்டுமா உடைக்கிறார்கள்? தமிழ் மக்களின் இதயத்தையே உடைக்கிறார்கள்… பெயர்ப் பலகைகளில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மட்டுமா அழிக்கிறார்கள்? தமிழ் இனத்தையே அல்லவா அழிக்கிறார்கள்.. இங்கிருக்கும் தமிழனே நீ ஒற்றுமை இல்லாதவன் என்று சொல்லாமல் சொல்லி அல்லவா பழிக்கிறார்கள்..

மத்திய அரசே! நீங்கள் போட்ட நிதிநிலை அறிக்கை! அதில் பெட்ரோல் டீசல் விலையேற்றம்.. மக்கள் வாழ்வில் இல்லையே ஏற்றம்.. மாறாக அவர்கள் வாழ்விலோ ஏமாற்றம்.. மாநில அரசே! அரிசி மட்டும் குடும்ப அட்டைக்கு கிடைத்தால் போதுமா? காய்கறி பருப்பு வகைகள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? கல்லையும் மண்ணையும்தான் காய்ச்சிக் குடிக்க முடியுமா?

கடும் துயரத்தைத் தரும் உங்கள் ஆட்சியில்தான் வாழ்க்கை நடத்த முடியுமா? லாரி வைத்திருப்பவர்களே..! பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை எதிர்த்து நடத்த நினைக்கிறார்கள் வேலை நிறுத்தம்..! அவர்கள் தங்கள் லாரியிலே சுமையைத்தான் ஏற்றுகிறார்கள்… ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் தலையில் சுமையை அல்லவா ஏற்றுகிறீர்கள்.. மனச் சுமையை அல்லவா கூட்டுகிறீர்கள்.. இதற்கு என்னதான் முடிவு? என்றுதான் கிடைக்குமோ விடிவு..?

தமிழக அரசே..! நீ கட்டிக் கொண்டேயிருந்தால் போதாது மேம்பாலம்.. நீங்கள் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்.. உங்கள் ஆட்சியில் மக்கள் வாழ்க்கைக்கோ கெட்ட காலம்.. இந்த நிலை தொடர்ந்தால் மத்திய – மாநில அரசே! உங்கள் ஆட்சிக்கே இருக்காது எதிர்காலம்..!
Source: http://www.puthinamnews.com/?p=8019#more-8019

Monday, February 8, 2010

கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்!


கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்!

மானமுள்ள தமிழர்கள் அனைவரும் வணக்கம்,

தமிழின தலைவர்,செம்மொழி வித்தகர்,அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என் உயிர் தலைவன் கருணாநிதிக்கு உங்கள் இயக்கத்தின் அடிமாட்டு தொண்டன் மற்றும் உடன் பிறப்பான பகலவன் எழுதும் சிறு விண்ணப்பம்.

ஜெயராம் பிரச்சனையில் நீங்கள் மன்னிப்போம் என்று கூறி உள்ளீர்கள்.நீங்கள் அல்லவா தமிழின தலைவர்! ஆனால் இதுவா உங்கள் வழி ?

ஜெயராம் செய்த தவறுக்கு நீதி கேட்பவர்களுக்கு நீங்கள் பின்வருமாறு சொல்லலாமே

1.ஒருநாள் மனித சங்கலி போராட்டம் நடத்துவது.
2.மலையாள திரையுலகத்துக்கு (மலையாள மனோரமா) கண்டன தந்தி அனுப்புவது (ஏனென்றால் இந்த பிரச்சனை இன்னொரு மாநில கலையுலக பிரச்சனை )
3.உடன்பிறப்புகளோடு 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது (பிற்பாதியில் பிரியாணி பொட்டலம் இலவசம் ).

இப்படி எதையாவது சொல்ல வேண்டியதுதானே.

அதை விடுத்து அண்ணா வழியில் மன்னிப்போம் என்றால் நம்முடைய உடன் பிறப்புகளின் உணர்வை எப்படி காட்டுவது?

வீட்டில் புகுந்து பெண்களை பயமுறுத்தியும், வீட்டுக்கு தீயிட்டும் நடைபெற்ற செயல்களை காவல் துறை வேடிக்கை பார்க்க முடியாது’’ என்று கூறி உள்ளீர்கள்.

சட்ட கல்லூரியில் சாதி கலவரம் ஏற்பட்டாலும் பட்ட பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டாலும் கடமை உணர்வோடு வேடிக்கை பார்க்கும் காவல் துறை அல்லவா நமது காவல்துறை என இந்த பாழாய் போன மக்களுக்கு தெரியாது தலைவா .

மறப்போம் மன்னிப்போம் என்றால் எதை மறக்க வேண்டும்,எதை மன்னிக்க வேண்டும் என்று சரியாக சொல்ல வேண்டியதுதானே .

மன்னிப்பு ..... தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை என்று விஜயகாந்த் ஒரு அறிக்கை விடுவார்.சீக்கிரம் பதில் அறிக்கை தயாராக வைத்து கொள்ளுங்கள்.

தமிழரின் மன்னிக்கும் உயரிய பண்பால் தான் தமிழனுக்கு இந்த இழி நிலை. தமிழனுக்கு வந்தாரைத்தான் வாழ வைக்க மட்டும்தான் தெரியும்.தன் நிலை தெரியாதவன்,தமிழனுக்கு மானமே இல்ல என அடுக்கடுக்காக இந்த இன மானத்தை அடகு வைத்திருக்கும் என் தங்க தலைவனே உனக்கு ஒரு பாராட்டு விழா நடத்த உடன் பிறப்புகளுக்கு அனுமதி உடனே வேண்டும்..
ஜெயராம் இழிவு படுத்தியது தமிழ் இனத்து பெண்களைத்தான். என் வீட்டு பெண்களையோ அல்லது என் தெலுங்கு இனத்து பெண்களையோ இழிவு படுத்தவில்லை. எனவே அவரை மன்னிப்போம் மறப்போம் என கூறி இருப்பது எவ்வளுவு பெரிய உயரிய எண்ணம.இதற்கே உங்களுக்கு பாரத ரத்னா தரப்பட வேண்டும்.

என் சகோதரி தமிழச்சியை ஒருவன் தவறாக பேசுவான்.அதை சம்மந்தமே இல்லாமல் நீங்கள மறப்பிர்களா? என சீமான் போன்றோர்கள் கேட்பார்கள்.என் சகோதரி அமிர்தத்தை கூறி இருந்தாலும் மன்னிப்பேன் என உங்கள் உயரிய மான உணர்வை ஊரறிய காட்ட வேண்டும்.
வந்தேறு களுக்கு வக்காலத்து வேண்டாம் , நாம்தமிழர் வருக எங்கள் மக்களே ! எழுக எங்கள் மக்களே .... துப்பாக்கிகளைத் தூக்கத்தான் முடியாது என்றால் செருப்புக்களையாவது கழற்றி வீசுவோம் துடப்பக்கட்டை கொண்டு தாக்குவோம் . நாதியற்று வாழ்வது இழிவாகும் என பல இளைஞர்கள் இன உணர்வோடு தயராகி போராட கிளம்புவார்கள்.அவர்களை நீங்கள் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு இட வேண்டும்.இல்லை என்றால் கழக உடன் பிறப்புகளே அவர்களை கொலை செய்வார்கள்.

ஜெயராம் வீட்ல விருதுகள் எல்லாம் உடைஞ்சிருச்சாம்.அதனால அவருக்கு அடுத்த கலைமமாமணி பட்டம் தர நீங்கள் உத்தரவு இட வேண்டும்.

தம்பி ஜெயராமா ! தமிழ் காக்க வா ! கழகம் நோக்கி வா ! கை கொடுக்க வா ! விழா எடு ! நிதி கொடு ! என் நீங்கள் உங்கள் பாணியில் இன்னும் 100 வருஷம் அரசியல் நடத்த வேண்டும் .

தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.அதையெல்லாம் இலவசமாக கேட்டு சொரணை இல்லாமல் இன்னொரு காதில் விட்டுவிடுங்கள்.
நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!


பகலவன்
www.pagalavantamil.blogspot.com

Read more: http://pagalavantamil.blogspot.com/p/blog-page_8766.html#ixzz0evzstR13

Tuesday, January 5, 2010

“நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பாரின் ஒப்புதல் வாக்குமூலம்!


திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.

கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.

அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!


Tuesday, December 15, 2009

வெந்ததைத் தின்று வாழ்பவரும், தானைத் தலைவரும்...










தானைத் தலைவருக்கு,
[Karunanidhi and Rajapakse]

இந்த தறுதலை தமிழனின் தலைவணங்கிய வணக்கங்கள். ‘என்னடா, இவன் தன்னைத் தானே தறுதலைன்னு சொல்லுறானேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க தலைவரே புள்ளைகளுக்கெல்லாம் அப்பன் வெக்கறது தானுங்க பேரு. வேலை வெட்டி எதுக்கும் போகாம நீங்க குடுத்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டில நீங்களும் உங்க வாரிசுகளும் வகைவகையா நடத்துற சேனல்கள்ல படம் பாட்டுத்துட்டு ஊர் மேஞ்சுட்டு இருந்ததனால ஊர அழைக்காமலேயே எங்கப்பன் எனக்கு வெச்ச ரெண்டாவது பேரு தானுங்க இந்த தறுதலைங்கற பேரு. பேரு நல்லா இருக்குங்களா தலைவரே?

என்ன பண்ணித் தொலைக்கிறது தலைவரே எங்கப்பன் அம்பானி மாதிரி சொத்து சேத்து இருந்தா எனக்கு அதகொடுத்துருப்பாரு. இல்ல உங்கள மாதிரி அரசியல் செல்வாக்கு சேத்து வெச்சிருந்தா வெளங்காத என்ன மாதிரி புள்ளைக்கு ஒரு பதவியவாவது தூக்கி கொடுத்திருப்பாரு. அந்தாளே ஊர்ஊராப் போயி வேலைதேடி கல்லு மண்னு சொமந்து எனக்கு சோறுபோட்டு “வெந்ததத் தின்னுட்டு விதிவந்தா சாகலாம்னு” இன்னைக்கு செல்லாக்காசா உக்காந்துட்டு இருக்காரு. அந்தாளுகிட்ட தறுதலை தண்ட சோறுங்கற பேர தவிர எனக்கு தூக்கிக் கொடுக்க ஒன்னுமில்ல. அதனால போனா போகுதுன்னு அதையே நானும் வாங்கிகிட்டேன்.

பேரு கிடக்குது தலைவரே பேரு. நமக்கெல்லாம் சோறு தானே முக்கியம். அதனால பேசாம கிடக்கிறேன். நீங்க குடுக்குற ஒரு ரூவா அரிசியில பொங்கிப்போடறதுக்கே எங்கப்பனுக்கு இத்தனை ஓப்பாளம். கேட்டா பருப்பு 98 ரூவா, பாலு 48 ரூவான்னு பாட்டு பாடறான் அந்த மனுசன். எதுத்தும் பேச முடியல. பேசுனா குடும்பம் ரெண்டாபோயிடும். நமக்கென்ன தலைவரே நாலஞ்சு டி.வி. சேனலா இருக்கு. குடும்பம் ரெண்டானா சேனல் 16 ஆகும்னு கணக்குப்போட்டு காய் நகத்தறதுக்கு? வீட்ட விட்டு வெளிய வந்தா சோத்துக்கே சிங்கியடிக்கனும். மானம் ரோசம் பாத்தா வயித்த யாரு பார்க்கறதுங்கறதாலதான் அடங்கிப் போயிட்டிருக்கேன் தலைவரே.

எல்லா அப்பனும் உங்கள மாதிரி இல்லாட்டியும் அட்லீஸ்ட் அம்பானி மாதியாவது சொத்து சேத்து வெக்கணும்னு ஒரு ஆடர் போடுங்க தலைவரே. ‘என்ன எழவு ? அப்பவும் “சப்பான்ல சாக்கிசான் கூப்பிட்டாக.. அமொpக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாக ங்கற மாதிரி” இலவசமா டி.வி. கொடுத்தீக.. கேஸ் கொடுத்தீக.. நெலம் கொடுத்தீக.. இதையும் நீங்களே குடுங்கன்னு, அதுக்கும் இந்த பிச்சக்காரக் கூட்டம் உங்ககிட்டதான் கையேந்தி நிக்கும். அதையும் குடுத்திட்டீங்கன்னா நீங்க யார்கிட்டயும் ஓட்டுக்காகக் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. வரிசைல வந்து நின்னு ஓட்ட மாறிமாறி உங்களுக்கே குத்திட்டு போயிட்டே இருப்பாங்க. ஐடியா நல்லா இருக்குங்களா தலைவரே? மனசுல வெச்சுக்குங்க 2011 ல கூட்டணி சம்பந்தமா காங்கிரஸ் கூட ஏதாவது பிரச்சனை வரலாம் அப்படி வந்தா தேர்தல் அதுகள கழட்டிவிட்டுட்டு தேர்தல் அறிக்கைல இத சேர்த்திடுங்க. கண்டிப்பா ஒர்க்அவுட் ஆகும்.

எனக்கென்னமோ 2011ல இந்த காங்கிரஸ்காரன் கட்டாயம் தகராறு பண்ணுவான்னுதான் தோணுது. இப்பவே பாருங்க இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோன்னு ஒன்னு ஏட்டிக்குப் போட்டியாவே பேசிட்டுத் திரியுது. என்னடா தைரியமா பேரச் சொல்றானேன்னு பாக்கறீங்களா. அட அதனால என்னங்க அதென்ன மானநஷ்ட வழக்கா போடப்போகுது. அதெல்லாம் இருக்கிறவன் போட்டாதான் செல்லும் தலைவரே.

கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு போறதுக்கே பக்கத்து நாட்டுக்கு படையெடுத்து போறது கணக்கா பத்து பதினஞ்சு செட் வேட்டி சட்டை எடுத்துட்டு போய் கடைசீல திரும்பி வரும் போது எல்லாங் கிழிஞ்சி அண்டர் டிராயரோடு வர்ற கூட்டம்தானுங்க தலைவரே இவங்க. அவங்களுக்குத் தெரியும் அவங்களோட வெக்கம் மானத்தப்பத்தி, அதனால அப்படியெல்லாம் எதுவும் செய்ய துணியமாட்டாங்கத் தலைவரே. புதுசா எந்த வழக்குலயும் ஜாயின்ட் பண்ணமுடியலங்கற வருத்தத்துல இந்த சுப்பரமணிசாமி எதாவது முயற்சி பண்ணினா காங்கிரஸ்காரங்களும் அதப்பத்தி யோசிக்க ஒரு வாய்ப்பிருக்கு. ஏன்னா எதுவோ கெட்டா குட்டிச் சுவருதான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சிருக்குங்க தலைவரே.

அது செரிங்க தலைவரே இந்த தமிழ், தமிழ்னு பேசிட்டுத் திரியற பத்துப் பதினஞ்சு பசங்க சேந்து மாவீரர் தினம் கொண்டாடினாங்களே உங்களுக்கு ஏதாச்சும் நியூஸ் வந்துச்சுங்களா? மன்னிச்சுக்கங்க தலைவரே உகாண்டால ஏதாச்சும் நடந்தாவே உங்களுக்கு நியூஸ் வந்துரும். உள்ளூர்ல நடந்தது தெரியாமயா இருக்கும். அதுல அவங்க பிரபாகரன் படத்த வெச்சாலோ இல்ல பிரிஜ;பாஸி அட்லாஸ வச்சாலோ இந்த இளங்கோவனுக்கு என்ன போச்சு? உலகத் தமிழினத் தலைவர் நீங்களே பேசாம இருக்கும் போது கதர் சட்டக்காரனுக்கென்ன அடிவயித்துல தீய வெச்சமாதிரி அப்படி எரியுது?

தமிழ்நாட்டுல யார் படத்த வெக்கலாம் வெக்ககூடாதுனு சட்டம் எதாவது இருக்குதுங்களா தலைவரே? அட அப்பிடியே இருந்தாலும் அத நீங்கதானே சொல்லனும், இதுகெல்லாம் எப்படி அதபத்தி பேசலாம் நீங்களே சொல்லுங்க தலைவரே. இதனால உங்களுக்குத்தானே கெட்ட பேரு. ஊர்ல எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா?

அதான் தலைவரே பரமசிவன் கழுத்துல இருந்து பாம்பு கருடனைப் பார்த்து கேட்டுச்சாம ‘கருடா சௌக்கியமான்னு’ கருடனோட நிழல பாத்தாலே ஓடி ஒழியற பாம்பு பரமசிவனோட கழுத்திலே இருந்த ஒரே தைரியத்துல கருடனைப் பாத்து “கருடா சௌக்கியமான்னு” கேட்ட கதையா உங்களோட கூட்டணியில இருக்கிற ஒரே ஒரு தைரியத்துலதான் தமிழ்ங்கற பேரக்கேட்டாலோ இந்தியாவோட தேசிய விலங்கு என்னானு கேட்டா புலின்னு சொல்ல கூட பயப்படற அந்தகதர் கூட்டம் பிரபாகரனோட பேனரையே கிழிச்சுப் பாத்துச்சாம். இளங்கோவன் பாம்பாம் நீங்க பரமசிவனாம். இதெல்லாம் தேவைங்களா தலைவரே உங்களுக்கு. ஒரு பழுத்த பகுத்தறிவுவாதிய எதுக்கெல்லாம் ஒப்பிடறாங்க பாருங்க.

உங்களுக்கு மறந்திருக்காது இருந்தாலும், திருச்சி செல்வேந்திரன் ஐயா முன்னாடி ஒரு கூட்டத்துல பேசுனத மறுபடியும் இங்க ஒரு தடவ சொல்ல வேண்டியது என் கடமை.

“ஒரு காங்கிரஸ் அமைச்சருக்கு அவசரமா ஒன்னுக்கு வந்துச்சாமா. சரி பக்கத்து ஊருக்குப் போய் போய்க்கலாம்னு அடி பொடிகளோட பஸ் புடிக்க போனாராமா. அந்த காலத்துல பஸ்சுல ஓவர் லோடு ஏத்தக் கூடாது. அதனால கண்டக்டர் , ஐயா ஏற்கனவே, பஸ் புல் ஆயிருச்சு; இத்தன பேர ஏத்த முடியாது. அதனால அடுத்த பஸ்சுல வாங்கன்னு சொன்னாராம். ஊடனே காங்கிரஸ் அமைச்சருக்கு வந்துச்சே கோவம். யோவ் நான் மினிஸ்டரு. என்னையே ஏத்த மாட்டீங்கறீயான்னு கண்டக்டரை நாலு ஏத்து ஏத்த, போனா போய்தொலையட்டும்னு அத வண்டியில ஏத்திட்டுப் போனாராம்.

அடுத்த நாள் கண்டக்டருக்கு அவங்க ஆபீஸ்ல இருந்து அழைப்பு வந்துச்சாம். போய் பார்த்தா… அங்க அவரோட மேலதிகாரி முன்னாடி காங்கிரசு அமைச்சர் உட்காந்திட்டு இருந்தாராம். மேலதிகாரி ஐயா, இந்த ஆளா பாருங்கன்னு கண்டக்டரை கைகாட்ட, மினிஸ்டரும் ஆமா அவன்தான்னு அடையாளம் காட்டுனாராம்.

உடனே மேலதிகாரி யோவ் நேத்து இந்த ரூட்ல போன நீ உன்னோட பஸ்சுல ஓவர் லோடு ஏத்தினியாமான்னு கேட்க, கண்டக்டர் இல்லன்னு பதில் சொன்னாராம். உடனே மினிஸ்டர் அவன் ஏத்தினது உண்மைன்னு சொன்னாராம். மேலதிகாரி, ஐயா அது உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டாராம். உடனே மினிஸ்டர் அவரு ஏத்திட்டு போனதே என்னத்தான்னு சொன்னாராம்.

கண்டக்டர் அப்பவும், இல்லவே இல்லைன்னு சொல்ல, சட்டுன்னு மினிஸ்டர் என்கிட்ட ஆதாரம் இருக்குன்னு சொன்னாராம். என்ன ஆதாரம்னு மேலதிகாரி கேட்க நேத்து நான் போன டிக்கெட்டு இதோ இருக்கு இந்தாங்கன்னு மேலதிகாரிக்கிட்ட கொடுத்தாராம்.

மேலதிகாரி டிக்கெட்ட வாங்கிப் பாத்துட்டு, ஐயா இதுக்கெல்லாம் அவர்மேல நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு சொல்லி கண்டக்டர அனுப்பிச்சிட்டாராம்.

ஏன் தெரியுமா? ஏன்னா அந்த டிக்கெட்டுல லக்கேஜ்ன்னு எழுதி இருந்துச்சாம். ஆக காங்கிரஸ்காரன லக்கேஜ்ன்னு முதல்முதலா கண்டுபிடிச்சது ஒரு கண்டக்டர் தான்யா”

தலைவரே, இத நான் சொல்லல. வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் சொன்னது. ஒரு கண்டக்டருக்கு தெரிஞ்ச விஷயம், பத்து பதினஞ்சு வாரம் டாப் 10ல முதலிடத்தப் பிடிச்ச உளியின் ஓசை மாதிரி உன்னதமான படம் கொடுத்த உங்களுக்குத் தெரியாம இருக்குமா? அப்புறம் ஏன் இன்னும் இதுகள தூக்கி சுமக்கறீங்க.

அதுக்கு இந்த வீரமணி மாதிரி ஆளுகள கூட வெச்சுக்கறது எவ்வளவோ மேல் தலைவரே. ஏன்னா தேவைப்படும்போது Law Point எல்லாம் புடிச்சு கொடுப்பாரு. கூடவே வெச்சிருக்கிற நன்றிக்காக அவரு சந்தோசமா அண்ணா விருதெல்லாம் உங்களுக்குக் கொடுப்பாரு. நீங்களும் அதுக்குப் பதிலா அவருக்கு பெரியார் விருது குடுத்து கௌரவிக்கலாம். குடுத்து வாங்கற உங்களுக்கும் சந்தோஷம் பாத்துட்டிருக்குற ஜனங்களுக்கும் ஒரு சந்தோஷம். ஆனா இந்த லக்கேஜுகளால யாருக்கு சந்தோஷம் சொல்லுங்க பாக்கலாம்.
அப்புறம் தலைவரே இந்த அம்பது அறுபது பவுன்ல உங்களுக்கு வர்ற செயின் மோதிரமெல்லாம் கலைஞர் கருவூலத்துக்கே குடுத்துடறீங்களே தலைவரே. நீங்க உங்களுக்குன்னு ஒன்னாச்சு வெச்சுக்கக் கூடாதா? ஆமா அந்த கருவூலத்தோட வேலை என்னங்க தலைவரே.



நீங்க அதுக்கு குடுக்குற நகையெல்லாத்தையும் இரண்டு இரண்டு பவுணா பிரிச்சு நாட்ல நகை போட வக்கில்லாதவ‌ன் பெத்த புள்ளங்களுக்கெல்லாம் நகைபோட்டு கல்யாணம் பண்ணி கொடுக்குறதுங்களா? என்னமோ போங்க தலைவரே உங்களுக்குன்னு நீங்க எதையாவது சேர்த்து வெச்சிக்குங்க தலைவரே! ஏன்னா எங்கப்பன மாதிரி கடைசி காலத்துல எதுவுமே இல்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற நெலமைக்கு வந்துடக் கூடாதில்லங்களா? ஆனாலும் நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க தலைவரே.

சரி அத விடுங்க நம்ம லக்கேஜ் பிரச்சனைக்கு வருவோம். ஆக 67ல் ஆட்சிய பறிகொடுத்துட்டு அட்ரஸ் இல்லாம தொலஞ்சு போன இந்த லக்கேஜூகள ஒவ்வொரு தடவையும் நீங்க ஏன் தூக்கிட்டு அலையனும் அப்பறம் ஏன் முடியாம போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகனும். யோசிச்சுபாருங்க.

ஏற்கனவே இந்த தமிழ் தேசிய கோஷ்டிகள் எல்லாம் உங்கள கரிச்சு கொட்றாங்க. இலங்கைல ஒன்றரை லட்சம் தமிழர்கள் சாகறதுக்கு உங்க பதவி பயம்தான் காரணம், நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா, அவங்கள பாதுகாத்திருக்கலாம். இராஜபக்சேவோட சிங்கள பேரினவாதத்துக்கு நீங்களும் மன்மோகன் சிங் அரசும் துணை போறதா குற்றம் சாட்றாங்க.

நீங்க அனுப்பின குழு பண்ண கூத்துல திருமாவளவனுக்கு கதாநாயக வேஷம் கெடைக்கும்னு பாத்தா கடைசீல ராஜபக்சேக்கு அந்த வேஷத்தைக் கொடுத்துட்டு திருமாவ காமெடி பீஸ்ஸாக்கிட்டீங்கன்னு ஒரு பேச்சு பரவலா இருக்கு. “திரும்பி வரும்போது தம்பி திருமாவளவா, மீசையை மழித்துவிட்டு வாடா என் கண்ணேன்னு” ஒரு தந்தியாவது அடிச்சிருக்கலாம் நீங்க. திரும்பி வந்ததுக்கப்புறம் அவர அடையாளமாவது தெரியாம இருந்திருக்கும். அதே நேரத்துல நீங்களும் “நெஞ்சில் தமிழர்தம் நல்வாழ்வெனும் முத்துச் சுமையேற்றி கத்து கடல் சீறிச் செல்கையில் குத்து விளக்கிங்கொன்றை செத்து மடிய விட்டுச் செல்கின்றோம் என நினைப்பாயா தம்பி திருமா எனக் கேட்டேன். அதற்கு அவரும் மாட்டேன் தலைவா உம்மை மறந்தாலன்றோ நினைப்பதற்கு” என கூறிச் சென்றான். ஆனால் அவர் மட்டும் திரும்பவில்லைனு தேனமுதுல எழுதுன மாதிரி எழுதிட்டு நந்தி கடல் முழுக்க தேடியாவது, இல்லை வங்க கடல் முழுக்க சல்லடையிட்டு சலித்தாவது பிரபாகரனின் சடலத்தை பார்த்து கை குலுக்கிவிட்டுதான் திரும்புவான் என் தம்பின்னு கேப்புல கெடா வெட்டி இருக்கலாம். ஆனா அதுக்கெல்லாம் வழியில்லாம அவரு மீசையோட திரும்பிட்டாரு, என்ன பண்ண தலைவரே! அங்க அவரு பேசுன பேச்சு பத்தாதுன்னு இங்கவந்து வேற எழுதறாரு அத வேற நாங்க படிச்சி தொலைக்கணுமான்னு தமிழ் கோஷ்டி கேக்குது என்ன பண்றது தலைவரே.

அவருக்குப் பதிலா நீங்க இந்த சத்தியராஜை அனுப்பி இருக்கலாம். ஏன்னா அவரு இன்னும் மனோகரா வசனத்தையெல்லாம் மனப்பாடமா சொல்லறாரு அட கொஞ்சம் வீராவேசமா பேசியாவது காட்டியிருப்பாரில்லைங்களா தலைவரே. என்ன அவரு நெஜமாலுமே பேசிட்டா சிக்கல்தான் அதுனால அவரு செரிப்பட மாட்டாருன்னு நீங்க நெனச்சிருக்கலாம். எப்படிப் பாத்தாலும் யார்யாரோ பண்ற தப்புக்கெல்லாம் உங்களுக்குதான் கெட்டபேரு வருது, மனசுக்கே கஷ்டமா இருக்குதுங்க தலைவரே. “ஆண்டவரே, இவர்கள் தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்தருளும்” ன்னு சொன்ன ஏசுநாதருடைய இன்னொரு வடிவமா அன்பின் உறைவிடமா இருக்கிற தலைவரப் பத்தி இப்படி எல்லாம் பேசலாமான்னு கேட்டா “ராஜபக்ஷே தாம் செய்வது என்னவென்று அறியாமல் செய்துவிட்டார். அவரை மன்னித்தருளும் ஆண்டவரேன்னு” கூட உங்க தலைவர் வேண்டுவாருன்னு சொல்றாங்க. உங்கள எல்லாரும் இப்படி பேசுறத கேக்கும்போது என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குங்க தலைவரே. ஊங்களுக்கு கஷ்டமா இல்லீங்களா தலைவரே.

இதுல இந்த எல்லா விஷயத்தையும் மறைக்கத்தான் நீங்க செம்மொழி மாநாடு நடத்துறீங்க. அதுவும் கோயமுத்தூர் பக்கம் சரிஞ்சு கிடக்கிற கழக மார்க்கெட்டை தூக்கி நிறுத்தத்தான் அதை கோயமுத்தூர்ல நடத்துறீங்கன்னு கூட உங்க மேல பழி சொல்றாங்க தலைவரே. தமிழ் வளர்ச்சியில, தமிழனோட நலத்துல உங்களுக்கு இருக்கிற அக்கறைய யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க. விட்டா எல்.கே.ஜி. பையன் பக்கத்துல இருக்கிற பையன கிச்சுகிச்சு மூட்டுனாலோ இல்ல கிள்ளி வெச்சாலோ கூட இதற்கு காரணம் இந்த கருணாநிதி தான்னு கண்டன பொதுக்கூட்டம் போட்டாலும் போடுவாங்க தலைவரே கொஞ்சம் கவனமா இருங்க.

மாநாட்டு வேலய உட்டு போட்டு மணிகணக்கா உங்களுக்கே எழுதீட்டு இருக்கறேன் மன்னிச்சுருங்க தலைவரே. அப்பறம்… இந்த மாநாட்டுல flex வெக்கறதுக்காக சில வாசகங்கள் எழுதியிருக்கேன் சரியா இருக்கானு நீங்க படிச்சுட்டு பதில் எழுதுங்க தலைவரே

“ தென்னாடுடைய தலைவா போற்றி

என்னாட்டு தமிழனுக்கும் இறைவா போற்றி

இந்திய தமிழனின் முதல்வா போற்றி

ஈழத் தமிழனின் ஈசனே போற்றி

இதுமாதிரி மகத்தான வேலய பார்த்திட்டு இருக்கும்போது கூட உருடியா ஒரு வேலயாச்சும் பண்றியா நீ தண்டசோறு தண்டசோறுன்னு எங்கப்பா திட்டீட்டேதான் இருக்காரு தலைவரே. அணணா பிறந்த நாளுக்கு கைதிகளுக்கு விடுதலை கொடுக்கிற மாதிரி உளியின் ஓசை படத்துக்காக உங்களுக்கு நீங்களே விருது குடுக்கிற இந்த நல்ல நாள்ல் எங்கப்பனையும் மன்னிச்சுருங்க தலைவரே ஏன்னா பாவிகள மன்னிக்கிற பக்குவம் உங்களுக்கு மட்டும்தான் இருக்கு.
இப்படிக்கு
பெற்ற தகப்பனால் தறுதலை என்றழைக்கப்படும்
இரா.செந்தில்குமார்
Source: http://tamilthesiyam.blogspot.com/2009/12/blog-post_14.html