Wednesday, September 29, 2010

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!










“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.
இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது.



ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.
நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.
இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள்
என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி.



தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.
ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர்.



அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.
வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன.



கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர்.



2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது.



இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.
ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்?






தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?
போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.
இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.
தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.
முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை.



ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?
எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம்
.



மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?



நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!
எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!

Sunday, September 26, 2010

இது ‘பகுத்தறிவு சிங்கம்’ கருணாநிதியின் மூட நம்பிக்கை!


கண்ணெதிரில் கட்சிக்கார் யாராவது குங்குமம் வைத்தபடி எதிரில் தென்பட்டால் உடனே அதை அழிக்கச் சொல்வார்…
ராகு காலம் நல்ல நேரம் பற்றிப் பேசுபவர்களை எள்ளி நகையாடுவார்… கடவுள் இல்லை அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் என நேரத்துக்குத் தக்கபடி கமெண்ட் அடிப்பார்…
ஆனால் இந்த உபதேசமெல்லாம் ஊருக்குதான். தனக்கென்று வரும்போது நல்ல நேரம் பார்த்தால் தப்பில்லை… சங்கராச்சாரியின் பிரசாதம் பரவாயில்லை… சாய்பாபா வீட்டுக்கு வந்து மாஜிக்கில் மோதிரம் வரவழைத்துத் தந்தாலும் ஓகேதான்… வீட்டுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலில் தினசரி அவர் பெயருக்கு பூஜை கூட நடக்கலாம்…
-அவர் வேறு யாருமில்லை, பெரியாரின் தொண்டர், அண்ணாவின் அரசியல் வாரிசு, பகுத்தறிவு சிங்கம் தமிழக முதல்வர் கருணாநிதிதான்.
மேடைதோறும் பகுத்தறிவு பேசும் இந்த ‘முத்தமிழ் அறிஞர்’, தஞ்சையில் ராஜ ராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்கு செல்ல பெரும் தயக்கம் காட்டி வந்தார். காரணம் பெரிய கோயிலுக்கு முதன்மை வாயில் வழியாகச் சென்றால் ஆட்சி போய்விடும் அல்லது ஆயுள் போய்விடும் என்ற மூட நம்பிக்கையால் வந்த பயம்தான்.
பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவுறுவதைக் கொண்டாட நடக்கும் விழாவுக்கு வரும் முதல்வர் கருணாநிதி கோவிலின் முதன்மை வாயில் வழியாக செல்வாரா அல்லது வேறு பாதை வழியாக செல்வாரா என்று பெரும் விவாதமே நடந்தது.


அதற்கு விடை தரும் வகையில் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக பெரிய கோவிலுக்குள் சென்றார் கருணாநிதி.
ஏன் இப்படி?
எல்லாம் பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கைதான்!
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது, எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு பின்னர் மரணமடைந்தது போன்றவற்றை இந்த மூட நம்பிக்கைக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் சில அரசியல்வியாதிகள்.
ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவார் என்றே பலரும் நம்பினர். ஆனால் தீவிர நாத்திகம் என்பதெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம்தான் என்பதை முதல்வர் மீண்டும் மெய்ப்பித்துவிட்டார்.
உபதேசம் செய்பவர்கள் முதலில் தங்களால் அதைக் கடைப்பிடிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்
. இல்லாவிட்டால் தாங்களும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதை ஒப்புக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். எதற்கு போலி பகுத்தறிவுவாதி வேடம்?
-என்வழி

Friday, August 27, 2010

தினமணி கார்ட்டூன்: கருணாநீடிமோனியா

கருணாநீடிமோனியா எப்போதும் குடும்பமாகவே வாழும். அதிவிரைவில் பல்கிபெருகும்.சாதகம் என்றால் மற்ற தேசிய கிரிமிகளுடன் ஒட்டி வாழும்.பாதகம் என்றால் பிரிந்துவிடும் தன்மைகொண்டது.எங்கும் எதிலும் எப்போதும் இருக்கும்.
http://www.dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=Cartoon&artid=293563&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%u0b9a%u0bc2%u0baa%u0bcd%u0baa%u0bb0%u0bcd+%u0baa%u0bb5%u0bb0%u0bcd+%u0baa%u0b95%u0bcd%u0bb8%u0bcd!

Wednesday, August 4, 2010

தலையங்கம்: பொய் முகங்கள்!



Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=282290&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது. முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது. ""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? ""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான். ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன? முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது? ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல. பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை. "கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸம், விஜயகாந்தும். ""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம். விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை. விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது. கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்? பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!

ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை


போலி சாதி சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. சி. உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க. அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.
அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. இந்திய ஆட்சிப் பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்துச் சான்றிதடிநகளை சரிபார்ப்பதும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சூழ்நிலையில் போலி சாதிச் சான்றிதழை காட்டி இந்திய ஆட்சிப் பணியில் திரு. உமாசங்கர் சேர்ந்திருக்கிறார் என்று கருணாநிதியின் அரசு திடீரென்று கூறுவதில் உள்நோக்கம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் பேரன்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராக கருணாநிதியின் மகன் அழகிரி சண்டையிட ஆரம்பித்தார்.
9.5.2007 அன்று மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மதுரையிலுள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் அழகிரிக்கு நெருக்கமான ரவுடி கும்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், பத்திரிகை அலுவலகக் கட்டிடம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் விளைவாக மூன்று அப்பாவி ஊழியர்கள்
கொல்லப்பட்டனர்.
கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தத் தாக்குதல் கருணாநிதியின் ஆசியோடு தான் நடைபெற்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், மாறன் சகோதரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில், ‘மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு’ என்ற பெயரில், அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி.
இதன் உண்மையான நோக்கம் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கு பிரச்சினை கொடுக்க வேண்டும், போட்டியாகத் திகழ வேண்டும் என்பதுதான். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் குறிப்பான கட்டளையோடு தான் அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திரு. உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும் வாங்குவதற்காக, அரசு கேபிள் நிறுவனத்தில் 400 கோடி ரூபா மேல் முதலீடு செய்யப்பட்டது. காவல் துறையிடம் கொடுக்கப்பட்ட புகார்களின்படி, பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுத்திடும் வகையில், அதன் கேபிள்களை சுமங்கலி கேபிள் நிறுவனத்தார் சிதைத்தனர்.

அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்ற தகுதியின் அடிப்படையில், அரசின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாறன் சகோதரர்கள் உட்பட இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பரிந்துரை செய்து இருக்கிறார் திரு. உமாசங்கர். ஆனால், இதற்குப் பிறகு, சண்டையிட்டுக் கொண்ட கருணாநிதி உறவுகளுக்குள் திடீரென்று ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து, மாறன் சகோதரர்களின் அராஜகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கருணாநிதியால் நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. உமாசங்கர் பலிக்கடா ஆக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுவிட்டது. கருணாநிதி குடும்பம் பிரிந்து மறுபடியும் சேர்ந்ததன் விளைவாக இவ்வளவு பெரிய நிதி இழப்பை தாங்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
மாறன் சகோதரர்களின் விரோதத்தை மட்டும் திரு. உமாசங்கர் சம்பாதிக்கவில்லை.
இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு, தமிழநாடு மின்னணுக் கழகத்தின் (ELCOT) மேலாண்மை இயக்குநராக இவர் நியமனம் செயப்பட்டார். New Era Technologies Ltd என்ற நிறுவனத்துடன் இணைந்து ELNET என்ற கூட்டு நிறுவனத்தை ELCOT துவக்கியது.
இதற்கிடையில், ELNET நிறுவனம் ETL Infrastructures Limited என்ற துணை நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்திற்கு 700 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது.
இந்த நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவினை கட்டியுள்ளது. தமிழக அரசு நிறுவனமான ELCOT நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி, இந்திய அரசிடமிருந்து தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம் பெற்றுவிட்டது. பின்னர், திரு. தியாகராஜ செட்டியாரை தலைவராகவும், அவரது மனைவி திருமதி உண்ணாமலை தியாகராஜன் அவர்களை மேலாண்மை இயக்குநராகவும் கொண்ட தனியார் நிறுவனமாக ETL நிறுவனம் ஆகிவிட்டது.
ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்துக்கள் இந்த தனி நபர்களிடம் தான் உள்ளது. ELCOT நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ETL நிறுவனமும், அதன் 700 கோடி ரூபா சொத்தும் காணாமல் போய்விட்டது குறித்து திரு. உமாசங்கர் கேள்வி எழுப்பியதாலும், இதனுடைய பயனாளிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெருக்கமானவர்கள் என்பதை
சூசகமாக தெரிவித்ததாலும், திரு. உமாசங்கர் ELCOT நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
ETL நிறுவனம் என்னவாயிற்று? ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்து என்னவாயிற்று? தியாகராஜ செட்டியார் என்பவர் யார்? அவருக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் என்னத் தொடர்பு? அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செயப்பட்ட 400 கோடி ரூபா என்னவாயிற்று?
அரசு கேபிள் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்னவாயிற்று? இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதி குடும்பமா அல்லது அப்பாவி தமிழக மக்களா? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழிவாங்கப்படுகிறார்? இந்த ஜனநாயகப் படுகொலையை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கெல்லாம் கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Monday, July 26, 2010

'புலிகள்' இல்லாத வன்னியில்...

http://www.eelanation.com/arasiyal/35-ceylon/633-vanni-current-report.html

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.
ஊழல், களவு, சமூகச்சீர்கேடு என்பன அறவே இல்லை என்னும் அளவிற்குத்தான் அங்கு நிலைமை இருந்தது. புலிகளமைப்பின் பல்வேறுபட்ட மக்களாட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் வினைத்திறன் கொண்டதாகவும் யாரும் குறைகாண முடியாத தனித்துவத்தினைக் கொண்டதாகவுமே விளங்கின.

நீதித்துறையாக இருக்கலாம், காவல்துறையாக இருக்கலாம், நிருவாகத்துறையாக இருக்கலாம் அனைத்துமே மக்களுக்கு அதியுச்ச சேவையினை வழங்கியதை உலகறியும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் 'புலிகள்' தண்டிப்பார்கள் என்ற அச்சமே குற்றச்செயல்கள் மிகவும் குறைவாக இருந்தமைக்குப் பிரதான காரணம்.

சிறு குற்றத்திற்கும் 'புலிகள்' பெரும் தண்டனை கொடுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிறு குற்றம் புரிந்தாலும் கடும் தண்டனை விதித்ததாலே அக்குற்றம் மீண்டும் இடம்பெறாது என்ற எண்ணத்தின் காரணமாகவே புலிகளமைப்பு அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

சுவீடனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டின் தலைநகருக்கு அண்மையில் பாரஊர்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட வீதியின் ஓடுதளத்தில் வெறும் 200 மீற்றர் தூரம் வரை இவர் காரினைச் செலுத்தியமைக்காக 18,000 குரோண் பணத்தினை எனது நண்பர் குற்றப்பணமாகக் கட்டியிருந்தார்.

குறித்த நபர் அதே குற்றத்தினை மீண்டும் புரியாமல் இருக்கவே சுவீடன் காவல்துறையினர் பெருந்தொகைப் பணத்தினைக் குற்றப் பணமாக வசூலித்திருந்தார்கள். இதே உபாயத்தினையே கைக்கொண்ட புலிகள் சிறு குற்றத்திற்கும் பெரும் தண்டனை வழங்கினர்.

இதன் விளைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கோதுமை மா அளக்கும் விற்பனையாளர்(சேல்ஸ்மன்) தொடக்கம் உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரி வரை எவருமே ஊழலில் ஈடுபடுவதற்குத் துணிவதில்லை. எடுத்துக்காட்டாக, கல்வித்துறையினை எடுத்துக்கொண்டால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் திருகோணமலையின் வரோதயநகரில் இருக்கிவரும் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினது அதிகாரிகள் கூட தவறிழைப்பதற்குத் துணிவதில்லை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் கல்விக்கழகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாகிவிட்டன. அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினைக் கூற விரும்புகிறேன். வன்னியில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கவேண்டியது அவசியம். இல்லையேல் அடையாள அட்டை இல்லாதமைக்கான காரணத்தினைக் கேட்டு ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் படையினர் துழைத்தெடுத்துவிடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற தங்களது ஆவணங்கள் அனைத்தையும் இடப்பெயர்வின் போது தொலைத்துவிட்டார்கள். அடையாள அட்டை தொலைத்தவர்கள் மணிக்கணக்கான சிறிலங்கா காவல்நிலையத்தில் காத்திருந்து பொலிஸ் றிப்போட் எடுக்கவேண்டும். அதனைப் பின்னர் கிராம சேவகரிடம் கொடுத்து அடையாள அட்டையினை மீளவும் பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

இவ்வாறு தனது அடையாள அட்டையைத் தொலைத்த எனது உறவினர் ஒருவர் அண்மையில் முள்ளியவளைப் பகுதியிலுள்ள தனது கிராம சேவையாளரிடம் சென்றிருக்கிறார். நீண்ட நாட்கள் அலைக்களித்த பின்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்த குறிப்பிட்ட கிராம அதிகாரி அடிக்கட்டைத் துண்டை எனது உறவினரிடம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

காரணம் தெரியுமா? ஒரு 'போத்தல்' வாங்கித் தந்தால் மாத்திரமே அடிக்கட்டையைத் தருவேன் என்றிருக்கிறார். இங்கு போத்தல் என அந்தக் கிராம அதிகாரி குறிப்பிட்டது வேறு எதுவுமல்ல, சாராயப் போத்தலைத்தான். அடையாள அட்டைக்கு மாற்றீடாக அந்த அடிக்கட்டைத் துண்டை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு புதிய வீட்டுத் திட்டங்களுக்கான நிதியினை சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பன வழங்கி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் குடும்பம் ஒன்றுக்கு வீடமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்திற்காக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட கிராமத்தின் கிராம அலுவலருடையதே. இங்கும் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது. வன்னியிலுள்ள அனைத்து கிராம சேவகர்களும் இவ்வாறு குற்றமிழைக்கிறார்கள் என நான் கூற விரவில்லை. மக்களுக்குத் தகுந்த சேவையினை வழங்கவேண்டும் என அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயற்படும் கிராம அலுவலர்கள் பலர் உளர்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமமொன்றிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் உண்மையில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுப்பதை அந்தக் கிராம அலுவலர் வேண்டுமென்றே இழுத்தடிக்க, இவருக்கு அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்மணி ' 'ஐயாக்கு' கையில் ஏதும் பார்த்து வைத்தால்தானே ஐயாவும் மனம் திறப்பார்' எனக் கூறியிருக்கிறார்.

தம்மிடமிருந்த நகைகளை அடைவு வைத்து 10,000 ரூயாவினை அந்தக் கிராம அலுவலருக்குக் இலஞ்சமாகக் கொடுத்த பின்னரே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கூடிய 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினை இந்த வறிய குடும்பத்திற்குக் கிராம அலுவலர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோலுள்ளது வன்னியில் பலரது வாழ்க்கை.

மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் 'காசுக்கு வேலை' என்ற திட்டம் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவரவர் கிராமங்களில் வீதியினை அகலமாக்கி வாய்க்கால்களை வெட்டுதல், பாடசாலைகள் கோவில்களை துப்பரவு செய்தல் போன்ற பணிகளில் கிராமத்தவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவில் இந்தத் திட்டத்தின் கீழ் வீதியினை அகலாமாக்கியபோது தறித்து விழுத்தப்பட்ட 25 வரையிலான பாலை மரக்குற்றிகளை அதே கிராம அலுவலர் சட்ட விரோதமாக அறுத்துத் தீராந்திகளாக்கி விற்றிருக்கிறார். இதன் பெறுமதி சுமார் 450,000 ரூபாய்களாகும்.

இதுபோல வன்னியின் பல பாகங்களிலுமுள்ள வர்த்தகர்கள் மற்றும் பணக்காரர்கள் தேக்கு, முதிரை, பாலை, வேம்பு உள்ளிட்ட மரங்களைச் சட்டவிரோதமாக அறுத்துத் தள்ளுகிறார்கள். முள்ளியவளைப் பகுதியில் வசித்துவரும் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு இரவில் இரண்டு அல்லது மூன்று ரைக்ரர் லோட் முதிரை மரங்கள் தினமும் வந்திறங்குகிறது. இவர்கள் சிங்களக் காவல்துறையினருக்கும் படையினருக்கும் பணத்தினை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டே மரக்கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் சாதாரணமாக தமது வீடுகளுக்கான கதவு, யன்னல் தேவைகளுக்காக தமது நிலங்களில் நிற்கும் மரங்களைத் தறிக்கும் மக்களை காவல்துறையினர் பலவகைப்பட்ட ஆவணங்களையும் அத்தாட்சிகளையும் கோரி படாதபாடு படுத்துகிறார்கள்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் வனவளப் பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவேயுள்ள வனங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முனைப்புக்களையும் மேற்கொண்ட அதேநேரம் மீள் வனமாக்கல் திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்திருந்தது. மக்களின் மரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், குறித்த மரத்தின் பரம்பல் மற்றும் மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மரங்கள் தறிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக யார் மரம் வெட்டினாலும் வன வளப்பாதுகாப்புப் பிரிவினர் கடுமையான நடவடிக்கையினை எடுத்தார்கள். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அது போராளியாக இருந்தாலும் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் சட்டவிரோதமாக மரத்தினை வெட்டினால் மூன்று மாதங்கள் ஊதியம் எதுவுமின்றி மீள் வனமாக்கால் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதுதான் வழமையாக இருந்தது. வன்னியின் சொத்தாகக் கருதப்படும் காடுகளைப் பாதுகாப்பதற்கு வனக்காவல் படையையே வனவளப் பிரிவு கொண்டிருந்தது.

வன்னியில் பரவலாக இடம்பெறும் இன்னொரு பிரச்சினையினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். களவு - இது இப்போது மலிந்து கிடக்கிறது. வன்னியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் தங்களது சொந்துக்கள் அனைத்தையுமே அங்கு விட்டுவிட்டே வந்தார்கள். இந்தச் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் படையினர் ஒருபுறமும் மக்கள் ஒருபுறமுமாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

25,000 ரூபா பெறுமதியான நீர்ப்பம்பிகள் 6,000 ரூபாய்க்கும், 40,000 பெறுமதியான முதிரம் கதவுகள் சோடி 12,000 ஆயிரத்திற்கும் விற்பனையாகின்றன. விசுவமடுப் பகுதியிலுள்ள கறுப்புச் சந்தையில் இதுபோன்ற பொருட்களைத் தேவையான அளவு கொள்வனவு செய்யலாம். மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத பகுதிகளுக்கு கள்ளத்தனமாகச் செல்லும் இவர்கள் இந்தப் பொருட்களை அங்கிருந்து கொண்டுவருகிறார்கள்.

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் தங்களது சொத்துக்களுடன் இடம்பெயர்ந்திருந்த போதும் மோதல்கள் தீவிரம் பெற, தங்களது சொத்துக்களை அந்தத்த இடத்திலேயே போட்டுவிட்டு வெறும் உடுப்புக்களுடன் மாத்திரம் இடம்பெயர்ந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் இல்லாத வன்னியில் இள வயதினர் மத்தியில் குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகச் சீர்கேடுகள்பற்றிச் சொல்லவே தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தேநீர்சாலை ஒன்றில் தேநீர் அருந்துவதற்காகச் சென்றிருந்தேன். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகரெட் பக்கெற்றை வாங்கி கடையருகில் நின்றவாறே புகைப்பிடிக்கிறான்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் தனது கல்வியினை இடைநிறுத்திய இந்தச் சிறுவன் தற்போது கூலி வேலை செய்கிறானாம். இந்த உணவகத்தில் '21 வயதிற்கும் குறைந்தவருக்கு சிகரெட் விற்காதே' என்ற அரசாங்க அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததையும் நான் கண்டேன். எங்களது இளம் சந்ததியினர் பயணிக்கும் திசையினை எண்ணும்போது என்மனம் அழுகிறது.

ஏனையவர்களின் சொத்துக்களை மக்கள் அபகரிப்பதும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் இதுபோன்ற அபகரிப்புச் சம்பவங்களை நான் கூறத்தான் வேண்டும்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சியை மையப்படுத்தியதாகவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் திருமணம் செய்த போராளிகள் பலரும் கிளிநொச்சி நகரினை அண்டிய பகுதிகளில் காணிகளை வாங்கி வீடுகளைக் கட்டியிருந்தார்கள். வெளிநாடுகளிலுள்ள தங்களது உறவினர்களின் உதவியுடனும் பெற்றோர்களது உதவிகளுடனும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே சிறு துண்டு நிலத்தினை வாங்கி இவர்கள் வீடுகளைக் கட்டியிருந்தார்கள்.

இப்போது இந்தப் போராளிகள் ஒன்றில் இறுதிப்போரின் போது வித்தாகிவிட்டார்கள் அல்லது சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் வாடுகிறார்கள். கணவன் தடுப்பில் இருக்கும் நிலையில் குடும்பத்தினைக் கொண்டு நடத்துவதற்கே தினமும் போராடும் இவர்களது மனைவிமார் தங்களது வீடுகளையும் காணிகளையும் பார்த்து வருவதற்குக் கிளிநொச்சி சென்றபோது பெரும்பாலும் ஏமாற்றமே காத்திருந்தது.

காரணம் தெரியுமா? போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இதுபோன்ற சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தையும் இவர்கள் இழந்துவிட்டார்கள். உயிருடன் மிஞ்சுவோமா எனத் தெரியாத நிலையில் இந்த ஆவணங்கள் முக்கியமானவையாக அப்போது இவர்களுக்குத் தெரியவில்லை.

இன்று இந்தக் காணிகளை இவர்களுக்கு விற்றவர்களே - போராளிகள் கஸ்ரப்பட்டுக் கட்டிய வீடுகளில் குந்தியிருந்துகொண்டு - எழும்ப மறுக்கிறார்கள், இராணுவத்திடம் போய் முறையிட்டுவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள். எங்கள் காணிகளை அடாத்தாகத்தானே பறித்தீர்கள் என வீண் வம்பு பேசுகிறார்கள்.

கிளிநொச்சியின் செல்வாநகர் பகுதியில், ஒரு போராளி நானறிய நாலரை இலட்சம் பணம்கொடுத்து காணியொன்றை வாங்கி, 13 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். லண்டனிலுள்ள தனது சகோதரன் அனுப்பிய பணத்திலேயே அவர் அந்தக் காணியை வாங்கியிருந்தது எனக்குத் தெரியும். இறுதிப்போரின் போது அந்தப் போராளி இறந்துவிட, இரண்டு பிள்ளைகளுடன் உறவினரின் தயவுடன் வாழும் இந்த யுத்த விதவை அண்மையில் தனது காணிக்குச் சென்றபோது அங்கு காணியை இந்தப் போராளிக்கு விற்றவர்கள் குடியிருப்பதைக் கண்டாள்.

'காணியைத் தராவிட்டால் பிள்ளையைப் பிடிப்பேன் என நீங்கள் அச்சுறுத்தியதனாலேயே காணியைத் தந்தோம்' எனப் படுபொய் கூறியிருக்கிறார்கள். இனியும் இங்கு வந்தால் உன்னையும் இராணுவத்திடம் பிடித்துக்கொடுத்துவிடுவோம் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மோசமானது யாதெனில், உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் போராளிக் குடும்பங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு இப்போது வன்னியில் எவருமில்லை. இதே வன்னி மக்களுக்காக தங்களது உயிரையே விலையாகக் கொடுத்துப் போராடியவர்களுக்கு மக்கள் கொடுக்கும் சன்மானம் இதுதான்.

புலிகள் இல்லாத வன்னியின் நிலை இதுதான். நாம் இன்னொரு உண்மையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வன்னி மக்கள் அனைவரும் இவ்வாறு மோசமான நடந்துகொள்கிறார்கள் என நான் கூற வரவில்லை.

என்ன நடக்கிறதோ அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எவராலும் எதுவும் செய்துவிட முடியாத நிலையில், பலர் இவற்றைப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்றதொரு சமூகம் வன்னியில் உருவாகுவதற்குப் படையினர்தான் தூபமிடுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மீள்குடியேற்றப்பட்ட வன்னியில் தோன்றும் பிரச்சினைகள் இவை.

வன்னி தனது தனித்துவத்தினை இழக்காத வகையில் எவ்வாறுதான் மீளப்போகிறதோ என்ற அச்சம்தான் அனைவரது மனங்களிலும் தங்போது குடிகொண்டிருக்கிறது.

- யாழினி

Thursday, July 22, 2010

ரூ 1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் நள்ளிரவில் திடீர் கைது மேலும் இருவரும் கைதாகி சிறையில் அடைப்பு பொய்ப் பு

Source:http://www.thinaboomi.com/2010/july/22/index1.php

1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழின் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய முத்தையா என்பவரும் பொய்ப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் கைதானதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் பறிபோய் விட்டதாக அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்களைப் பற்றி தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த கிரானைட் தொழிலில் பல பண முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட மிகுந்த துணிச்சலோடு அந்த தொழிலில் நடக்கும் ஊழல்களை தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் கீழவளவு, கீழையூர், ரெங்கசாமிபுரம், அடஞ்சாண்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கத் தொழில் பற்றி தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் சட்டவிரோதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் தோண்டப்படுவதால் அதனால் பொதுமக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தினஞீமி நாளிதழ் அவ்வப்போது அம்பலப்படுத்தியது. வெடிகுண்டு வைத்து கிரானைட் குவாரிகள் உடைக்கப்படுவதால் பல வீடுகளில் கற்கள் விழுந்து அந்த வீடுகள் நாசமாயின. மேலும் இந்த தொழில் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுப்புற கிராமங்களில் சிலிக்கான் தூசி பரவி பொதுமக்கள் பலவித நோய்க்கு ஆளானதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் மதுரை மாவட்டம் ரெங்கசாமிபுரத்தில் பவள மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் கிரானைட் குவாரி தோண்டப்பட்டதால் அந்த கோயில் தொங்கிக் கொண்டிருப்பதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது. கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில்தான் கிரானைட் குவாரி தோண்டப்பட வேண்டும். ஆனால் 10 அடி தூரத்திலேயே கிரானைட் குவாரி தோண்டப்பட்டதை தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.

மேலும் கிரானைட் குவாரிகளின் ஞிளம், அகலம், ஆழம் இவற்றை கணக்குப் பார்த்து அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்யாததால் பலகோடி முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அவை சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் குவித்து வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதையும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதையும் தினஞீமி நாளிதழ் மிக துணிச்சலோடு சுட்டிக் காட்டியது.

இதன் ஒரு கட்டமாக மாவட்ட கலெக்டர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட போது, எங்கெல்லாம் குவாரிகள் இல்லையோ அந்த கலெக்டர்கள் மட்டும் பதிலளித்தார்கள். குவாரி உள்ள மாவட்டக் கலெக்டர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் தினஞீமி நாளிதழ் மாநில தகவல் ஆணையத்தையும் அணுகியது. அங்கிருந்தும் சரியான பதில் கிடைக்காததால், முடங்கிப் போன தகவல் ஆணையம் என்று கூட செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்த ஊழல் தொடர்பாக சென்னை உயர்ஞிதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த எம். ரமேஷ்குமார் என்பவர் வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

பின்னர் அடுத்த கட்டமாக தமிழக கவர்னரிடம் கூட ஒரு முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்படியாக தினஞீமி நாளிதழ் பல்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் நடைபெறும் கோடிக்கணக்கான மதிப்பிலான கிரானைட் ஊழல் பற்றி செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சமீபத்தில் கூட சில சாட்டிலைட் படங்களை வெளியிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத கிரானைட் குவாரி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. ரூ 1,500 கோடி கிரானைட் ஊழல் நடந்திருப்பதாகவும், விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்படுவதாகவும் தினஞீமி நாளிதழ் பரபரப்பு செய்திகளை படத்துடன் வெளியிட்டது. இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எரிச்சலையூட்டியிருக்கக் கூடும்.

இதன் காரணமாகவோ என்னவோ, தினஞீமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இருந்தாலும், தினஞீமி நாளிதழ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து ஊழல் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று துணிச்சலாக சில தினங்களுக்கு முன்பு கூட தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதற்கு மறுநாளும் கிரானைட் சுரங்க ஊழல் பற்றி மிகப் பெரிய படத்துடன் தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும் ஒவ்வொரு முறையும் கிரானைட் செய்திகளை வெளியிடும் போதும் தினஞீமி நாளிதழில் ஒரு பாக்ஸ் செய்தி இடம்பெற்றிருக்கும். அதாவது, கிரானைட் குவாரிகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் சம்பந்தமாக தங்களுக்கு தகவல் எதுவும் தெரிந்திருந்தாலோ மேலும் புகைப்பட ஆதாரங்கள் இருந்தாலோ அவற்றை அனுப்புமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வகையில் அந்த பாக்ஸ் செய்தி இடம் பெற்றது. அதன் பேரில் பொதுமக்கள் தந்த பல தகவல்களின் அடிப்படையில் பல செய்திகள் அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் தினஞீமி நாளிதழுக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டது தினஞீமி நாளிதழ்.

இதற்கிடையில் சிலர் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில் தினஞீமி நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் மற்றும் அந்த நாளிதழின் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் கீழையூரை சேர்ந்த( இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய) முத்தையா ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.பி.கோ. 341, 384, 387,392 மற்றும் 511, 394 _ பி ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கின் அடிப்படையில் தினஞீமி ஆசிரியர் மணிமாறன் உட்பட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நள்ளிரவில் ஒரு சமூக விரோதியை கைது செய்வது போல ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்துள்ள செயல் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாகும். பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். திருப்ஞீர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கங்கள் இந்த கைது நடவடிக்கைக்கு தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

பத்திரிக்கைகளின் குரல் வளையை நெறிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடுகளை பற்றி செய்திகளை வெளியிட்டால் அதை சட்டப்ஞீர்வமாகத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது போலாகும். இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கெடுப்பான் இலானும் கெடும்.

என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எனவே தவறுகளை சுட்டிக் காட்டினால் அது தவறா? என்று பொதுமக்களும் கேட்கிறார்கள். மன்னன் தவறு செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கலாம். இல்லாவிட்டால், கெடுப்பவர் இல்லாவிட்டாலும் அவன் தானாக கெட்டு விடுவான் என்கிறார் திருவள்ளுவர்.

அந்த அடிப்படையில்தான் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அதற்கு தமிழக காவல் துறை கொடுத்திருக்கும் பரிசுதான் கைது நடவடிக்கை. ஜனநாயகத்தை நெறிக்கும் இதுபோன்ற செயல்களை தினஞீமி நாளிதழ் வன்மையாக கண்டிக்கிறது.