Monday, October 19, 2009

ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி




நேற்றைய தினம் தமிழகத்தின் முன்னனி இணையத்தளமான குமுதத்திற்கு பேட்டி ஒன்றை அருட்தந்தை ஜெகத் காஸ்பர் அவர்கள் வழங்கியிருந்தார். அதில் பழ நெடுமாறன் ஐயா உட்பட பலரை கீள்தரமாக விமர்சித்திருக்கும் அவர், பழ நெடுமாறன் ஐயா, மற்றும் வைகோ போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், தமிழ் நாட்டு ஈழஆதர்வாளர்கள், தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா போர் நிறுத்தத்தைக் கொன்டுவந்திருக்கும் என கற்பனையின் உச்சக்கட்டத்திற்கே சென்று புதுக் கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து உணர்வாளர் சீமான் கட்சி ஆரம்பித்துவிட்டு பின்னர் தனக்குச் சொல்லாமலே தன்னை விலக்கிவிட்டதாகவும் சாடியுள்ளார்."விபச்சாரம்", "நான்" "நீ" என்ற ஏக வசனங்களைக் கொண்டு தமிழீழ உணர்வாளர்களை வயது தராதரம் பார்க்காமல் வசைபாடியுள்ளார் திரு.ஜெகத் காஸ்பர் அவர்கள். ஆண்மை பற்றிப் பேசி, ஒருவரை ஆண்மை இல்லாதவர் என வசைபாடும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர் காஸ்பர் அவர்கள். ஒரு அருட் தந்தை என்ற தனது ஸ்தானத்தில் இருந்து விலகி மிகவும் கீழ் தரமாக ஈழ உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறார். இப்படி இவர் விமர்சிக்க அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது. தனது பிறந்த நாளுக்கு தேசிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதுவே தனக்கு கிடைத்த அங்கிகாரம் எனக்கூறுகிறார். இதற்கு மேல் யாரும் என்னுடன் பேச முடியாது என்கிறார் காஸ்பர். துரோகி கருணாவிற்கும் கூடத்தான் தேசிய தலைவர் ஒரு காலத்தில் பிறந்த நாழ் வாழ்த்து தெரிவித்தார், என்பதை காஸ்பர் மறந்துவிட்டாரா?


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தவறுகள் இருப்பதை தாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் காஸ்பர். அப்படி ஒத்துக்கொள்ள இவர் யார்?விடுதலைப் புலிகளின் உறுப்பினரா?சுபவீர பாண்டியன் மற்றும் காஸ்பர் அடிகளார் முன் நிலையிலேயே, இந்தியாவால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, ப.நடேசன் அவர்களும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தனர், இதில் இவர்கள் பங்கும் சிதம்பரத்தின் பங்கும் இருப்பதை யாரும் மறந்துவிடவில்லை. இருப்பினும் அப் பழியை அப்படியே விஜய் நம்பியார் மீது திருப்பிப் போட்டு அவரை ஒட்டுமொத்த குற்றவாளியாக்கி தான் தப்பிக்கப் பார்க்கிறார் காஸ்பர்.வெள்ளைக் கொடிகளை காட்டியவாறு செல்லுங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நாம் தருகிறோம் எனக் கூறிய இந்தியா, நயவஞ்சகமாக எமது தலைவர்களைக் கொல்லக் காரணமாகியது. அப்படியே அதை இலங்கை அரசு செய்திருந்தால் கூட அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அற்ற இந்தியாவிடம், இனியும் நாம் சென்று பிச்சை கேட்கவேண்டும் என்கிறார் காஸ்பர் அடிகளார். அதாவது இந்திரா காங்கிரசுடன் பேசினால் நல்லது நடக்கும் என்றால் பேசலாம் என்பது அவர் கொள்கை. அடிப்படையில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படும் சோனியாவிடம் நக்கிப் பிழைக்கலாம் என்கிறார் காஸ்ப்பர் அடிகளார்.எல்லாம் போகட்டும்,
விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக ஐயா பழ நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ பல வருடங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், சீமான் உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்,ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் காஸ்பர் அவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, குறைந்த பட்சம் கியூ பிரிவினரால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. மத்திய அரசில் இவருக்கு இருக்கும் தொடர்புகளும், இந்திய உளவுப் பிரிவின் நெருங்கிய தொடர்பும் இருப்பதன் காரணமாகவே இவர் இது நாள்வரை கைதுசெய்யப்படவில்லை.குமுதம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, பதிலைக் கூறாமல் உலக பயங்கரவாதம் குறித்து பேசி சில கேள்விகளை திசை திருப்பி அதனை ஒரு விவாதமாக மாற்றி, நேர்காணலை திசை திருப்ப காஸ்பர் மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.அத்துடன் 2002ம் ஆண்டு இந்தோ- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், அதனால் ஏவப்பட்ட செயற்கைக்கோள், அதில் உள்ள புற ஊதாக்கதிர் உள்வாங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதனை முன்னமே விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருக்கலாமே, தற்போது அதைப் பற்றி பேசி என்ன பயன்.?தமிழ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களையும் வசைபாடி, தான் மட்டும் செய்வதே சரி எனக் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் காஸ்பர் அவர்கள். சிதம்பரம், தொடக்கம் சிதம்பரத்தின் மகனுடனும் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகக் கூறும் காஸ்ப்பர், கவிஞர் கனிமொழியுடனான தொடர்புகளைப் பற்றி கடைசிவரை வாய் திறக்கவில்லை.புலம்பெயர் தமிழ் மக்கள், தற்போது ஈழ விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளையோர் அமைப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கால கசப்பான அனுபவங்களை இரை மீட்டி, தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ண முனையும் விசக் கிருமிகளை முதலில் களைந்தால் தான் எமது போராட்டம் வலுப்பெறும். தேசிய தலைவர் எனது நண்பர், விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கிறேன் எனச் சிலர் கூறி கடைசியில் கவிழ்த்த விடையங்களை நாம் அறிவோம்.தமிழர்கள் தற்போது பிரிந்து கிடப்பதாக முழத்திற்கு, முழம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஸ்பர் அவர்கள். தமிழராகிய நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் உணர்வாளர்களாக இருக்கிறோம் அப்படியே இனியும் இருப்போம் என அதிர்வு இணையம் நம்புகிறது. அதுவே உண்மை. இதில் காஸ்பர் போன்ற புல்லுருவிகள் அகற்றப்படவேன்டும். சுதந்திர ஈழம் மலரவேண்டும். தமிழர்களின் போராட்டமே விடுதலையை வென்றெடுக்குமேயன்றி, நாம் நக்கிப் பிழைக்கத் தேவையில்லை. காங்கிரசிடம் மண்டியிடவோ அல்லது இந்திய அரசிடம் பிச்சையாக நாம் தமிழீழத்தைப் பெறவேண்டியது இல்லை.அதனை தமிழீழ தேசிய தலைவரும் விரும்பமாட்டார். போராடாமல் ஒரு இனம் வெற்றிபெற்றதாகச் சரித்திரமில்லை என்றான் எமது தங்கத் தலைவன்! எனவே அவர் வழியில் நாம்செல்வோம். அது ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம்.


http://www.athirvu.com/


Friday, October 16, 2009

தமிழக எம்.பிக்களின் இலங்கை விஜயம் மஹிந்த - கருணாநிதி கூட்டுத்திட்ட நாடகம்






இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்களைத்
தொடர்ந்தே தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு வந்திருந்தது என்று தமிழகத்தில் நேற்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.



தமிழகத்திலிருந்து வெளிவரும் "மாலைச் சுடர்" நாளிதழ் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்தி விவரும் வருமாறு:



சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்தபோதும், முகாம்களில் உள்ள தமிழர்களைச் சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய தாம் அனுமதி அளிப்பதாக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தப் பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம்பெறக்கூடாது என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் எனத் தெரிகிறது. இந்தக் கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு, இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.அதன்படி தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் குழுவில் இடம் பெறுவதற்கு டில்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்.பிக்கள் குழுவில் திருமாவளவனும் இடம்பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பிக்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியது. அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் இக்குழுவினர் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாகச் சந்தித்துப் பேசவோ, விவரங்களைச் சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்துப் பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பினார் எனக் கூறப்படுகிறது.குறிப்பாக திருமாவளவனை எம்.பிக்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பினார் என பரபரப்பாக பேசப்படுகிறது.



5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பிக்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்துக்கொண்டு அறிவாலயம் வந்ததார் எனவும் கூறப்படுகிறது.அந்தக் குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி தாமே செய்தியாளர்களைச் சந்தித்து பேசியமையிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.



5 நாள்கள் பயண விவரங்களை எம்.பிக்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படித் தனது அறிக்கையாகத் தயாரித்துத் தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.



இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் அந்நாட்டு அரசுக்குச் சார்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.



Source:http://www.uthayan.com/Welcome/full.php?id=1116&Uthayan1255697542



நாடகமாடியே கல்லறைக்கு அனுப்பினாயே கருணா(ய்)நிதி தமிழினத்தை




ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சைகாரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய்.
நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் .
தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய்.
நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய்
மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே.
பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே.
தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ?
அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ?
எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜபக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது?

நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா?

Source:http://www.sureshkumar.info/2009/10/blog-post_16.html

Wednesday, October 14, 2009

பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..






"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.


ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.


முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது. இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்". இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார். "ரைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.)என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார்.


அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது. அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த ரி.ஆர்.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!
எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு ....."இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார். அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை! நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள். "ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?" "வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?""எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது. கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது. "இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *
- ஒளண்யன் -




Monday, October 12, 2009

கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு 'இந்தியத் துரோகம்': பாரிஸ் ஈழநாடு




[ திங்கட்கிழமை, 12 ஒக்ரோபர் 2009, 02:10.34 PM GMT +05:30 ]




சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இன்றைய பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள்.
ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்து கொண்டார். கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.
நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.
இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறிய போது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர்.
வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டு வந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.
மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய இலங்கை தொடர்பான கொள்கை மாற்றம், ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும், மேனனும் இலங்கை சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.
சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.
இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.




Saturday, October 10, 2009

இலண்டனிலும் அம்சாவின் கைவரிசை?







நாய் சென்னையில் இருந்தாலும் இலண்டனில் இருந்தலும் ஒரே மாதிரித்தான் குரைக்கும். ஒரே மாதிரித்தான் காலைத் தூக்கும்.இலங்கை ராச தந்திரிகளும் அப்படியே.விபச்சார ஊடகங்கள் சென்னையிலும் உண்டு. இலண்டனிலும் உண்டு. ஜே. ஆர் ஜெயவர்த்தனேயை ஒரு துறவி என்று தமிழ் நாட்டு ஊடகம் ஒன்று சித்தரித்ததும் உண்டு. மஹிந்த ராஜபக்சேயை தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் எழுதுபவர்களும் உண்டு.மேல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஊடகத் துறையை விட்டு வைக்குமா. அவர்களுக்கும் பொருளாதார நெருக்கடி.அண்மைக்காலமாக இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பற்றிக் காரசாரமாக விபரித்து வந்த The Economist சஞ்சிகை இந்தவாரம் ஒரு தனிப்பட்ட ஒருவருக்கு நடந்ததை வைத்து இலங்கை சிங்கள இராணுவத்தை நல்லவராகக் காட்ட மறைமுக முயற்ச்சியை மேற் கொள்கிறது.இலண்டனில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று பாராளமன்றத்தின் முன் உண்ணாவிரதமிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் McDonald's இனது BigMac சாப்பிட்டார் என்பது போலத் தலையங்கமிட்டுச் செய்தி வெளியிட்டது. இதற்கு ஆதாரமாக இலண்டன் காவற்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரை "ஆதாரம்" காட்டி சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணவிரதமிருந்த கொட்டகைக்கு BigMac எடுத்துச் செல்லப் பட்டதை இலண்டன் காவற்துறையில் கண்காணிப்பு ஒளிப் பதிவுக் கருவியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.உண்ணாவிரதக் கொட்டகைக்குள் பலரும் சென்று வந்த படியே இருந்தனர். அவர்கள் கையில் உணவுப் பொதிகளுடன் சென்று வருவதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு எடுத்துச் செல்லப் பட்டவை அல்ல. அவர் சாப்பிட்டதை எவரும் காணவில்லை. அவரை தமிழ் அமைப்புக்களின் மருத்துவர்களும் பிரித்தானியக் காவற்துறையின் மருத்துவர்களும் அடிக்கடி பரிசோதித்து வந்தனர். ஒரு கட்டத்தில் காவற்துறை அதிகாரி சுப்பிரமணியம் பரமேஸ்வரனிடம் உன்னைப்போன்ற இளைஞர்கள் எமது நாட்டுக்குத் தேவை நீ இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடு என்று வேண்டிக் கொண்டார். ஒருமுறை அவரைப் பரிசோதித்த காவற்துறை மருத்துவர் அவர் சிறுநீரகம் பாதிப் படைந்திருப்பதாகக் கூறினார்.இலண்டன் நகராட்சிக்கு பெரும் தலையிடியையும் பலத்த செலவையும் ஏற்படுத்திய இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை பிர்த்தானியப் பாராளமன்றத்தின் முன் நடை பெற்ற தமிழர் ஆர்ப்பாட்டதின் ஒரு பகுதியாகவே சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, முகாம் நிலை தொடர்பாக சுதந்திரமாக தகவல்களை அறிய அனுமதிக்கப்படுமா?

போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் இன்று சனிக்கிழமை கொழும்பு செல்கின்றனர்.
இருந்தபோதிலும், இவர்கள் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு அரசின் முக்கிய அமைச்சர்களுடனேயே அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் சுதந்திரமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கின்றது.
வடபகுதியில் இந்தக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் அனைத்தும் அரசினால் 'வழிகாட்டப்படும்' பயணங்களாகவே இருக்கும்.
வவுனியா முகாம்களுக்கு இவர்கள் செல்லும்போது புனர்வாழ்வுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவர்களுடன் செல்வார்
. மெனிக் பாமில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு காட்டுவதற்கு எனத் தயாரிக்கப்பட்டுள்ள முகாமுக்கு மட்டுமே இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஏனைய முகாம்களை பார்வையிடுவதற்கு இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகின்றது
.
வழமையாக முகாம்களை பார்வையிட வரும் வெளிநாட்டுப் பிரிதிநிதிகளை கையாள்வதைப் போலத்தான் இவர்களையும் கையாள்வதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
இதேவேளையில் நாளை இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி. துணைப் படைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்ளவிருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்படுவதைத் தடுக்கமுடியும் என அரசு கருதுகின்றது.
சிறிலங்காவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர்.
இந்த காலத்தில் மூன்று விடயங்கள் தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்று - முகாம்களின் நிலைமை மற்றும் அங்குள்ள மனிதார்ந்த பிரச்சினை. இரண்டு - மீள்குடியேற்ற நடவடிக்கைகள், மூன்று - கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
இதனைவிட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தீர்மானித்திருந்தார்.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.
இன்று கொழும்பு செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக இந்த குழுவின் தலைவரான தங்கபாலு கருத்து வெளியிடுகையில், முதல்வர் சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரை அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துக்களை மத்திய அரசிடம் அளிப்போம் எனத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
இதேவேளையில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணத்தின் மூலமாக சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படும் எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களை இதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சிறிலங்காவில் இருந்தும் அனைத்துக் கட்சிகளின் குழு ஒன்று விரைவில் தமிழ்நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
சிறிலங்கா அரசை பொறுத்தவரையில் இன்று செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்துவிட முடியும் எனக் கருதுவதுடன், தமது பிரச்சாரத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு செயற்படுகின்றது என்பதை அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன்று கொழும்பு செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 'இந்து' ஆசிரியர் என்.ராம் போல சிறிலங்காவின் பிரச்சாரங்களுக்கு துணை போகப் போகின்றார்களா அல்லது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முயற்சிப்பார்களா என்பதுதான் இன்று ஈழத் தமிழர்கள் அனைவரிடமும் எழும் கேள்வி.
பல வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் வடபகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் முகாம் நிலைமைகளை ஏற்கனவே பார்வையிட்டுள்ளன.
குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. உயர் அதிகாரிகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.
முகாம்களின் மோசமான நிலைமை தொடர்பாக தமது இந்தப் பயணங்களின் பின்னர் கவலையுடன் குறிப்பிடும் அவர்கள், முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திச் சென்றிருந்தார்கள்.
இவை அனைத்தும் வெறும் அறிக்கைகளாக மட்டுமே உள்ள நிலையில், தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து போயுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று செல்கின்றது என்பது பெரும் விரக்திகளுக்கு மத்தியிலும் அவர்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிப்பதாக அமைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தொப்புள் கொடி உறவைக்கொண்டுள்ள தமிழ்நாட்டின் தலைவர்கள் தம்மைப் பாதுகப்பார்கள் என்ற காலாதி காலமான அவர்களின் நம்பிக்கைக்கான இறுதிப் பரிசோதனையாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஐ.நா. போலவோ மேற்குலக நாடுகளைப் போலவோ வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன் தமது பணியை அவர்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். தமிழ்நாட்டில் இவர்களின் வருகை அசைவை ஏற்படுத்தும் என்றே அவர்கள் நம்புகின்றார்கள்.
தமிழ்நாட்டு தலைவர்களின் பயணம் - அவர்கள் சிறிலங்காவின் வழிநடத்தலில்தான் நடந்துகொள்ளப் போகின்றார்களா என்பதும், நாடு திரும்பிய பின்னர் அவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும்தான் முகாம் மக்களின் விடிவுக்கான வழியைத் திறப்பதாக அமையும். அவர்களும் அறிக்கைகளுடன் தமது பணியை முடித்துக்கொண்டால் முகாம் மக்களுக்கு விடிவு இல்லை என்பதுதான் அர்த்தமாக இருக்கும்.

Source: http://www.puthinam.com/full.php?2edfD6eMe0adc4mSOe2ed44YcO22cc46oMV534d42tVo03cb30mAOYAcd40KAA4Aca00b6e1DVbe