Saturday, October 10, 2009

இலண்டனிலும் அம்சாவின் கைவரிசை?







நாய் சென்னையில் இருந்தாலும் இலண்டனில் இருந்தலும் ஒரே மாதிரித்தான் குரைக்கும். ஒரே மாதிரித்தான் காலைத் தூக்கும்.இலங்கை ராச தந்திரிகளும் அப்படியே.விபச்சார ஊடகங்கள் சென்னையிலும் உண்டு. இலண்டனிலும் உண்டு. ஜே. ஆர் ஜெயவர்த்தனேயை ஒரு துறவி என்று தமிழ் நாட்டு ஊடகம் ஒன்று சித்தரித்ததும் உண்டு. மஹிந்த ராஜபக்சேயை தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் எழுதுபவர்களும் உண்டு.மேல் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஊடகத் துறையை விட்டு வைக்குமா. அவர்களுக்கும் பொருளாதார நெருக்கடி.அண்மைக்காலமாக இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பற்றிக் காரசாரமாக விபரித்து வந்த The Economist சஞ்சிகை இந்தவாரம் ஒரு தனிப்பட்ட ஒருவருக்கு நடந்ததை வைத்து இலங்கை சிங்கள இராணுவத்தை நல்லவராகக் காட்ட மறைமுக முயற்ச்சியை மேற் கொள்கிறது.இலண்டனில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று பாராளமன்றத்தின் முன் உண்ணாவிரதமிருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் McDonald's இனது BigMac சாப்பிட்டார் என்பது போலத் தலையங்கமிட்டுச் செய்தி வெளியிட்டது. இதற்கு ஆதாரமாக இலண்டன் காவற்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரை "ஆதாரம்" காட்டி சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணவிரதமிருந்த கொட்டகைக்கு BigMac எடுத்துச் செல்லப் பட்டதை இலண்டன் காவற்துறையில் கண்காணிப்பு ஒளிப் பதிவுக் கருவியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.உண்ணாவிரதக் கொட்டகைக்குள் பலரும் சென்று வந்த படியே இருந்தனர். அவர்கள் கையில் உணவுப் பொதிகளுடன் சென்று வருவதை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு எடுத்துச் செல்லப் பட்டவை அல்ல. அவர் சாப்பிட்டதை எவரும் காணவில்லை. அவரை தமிழ் அமைப்புக்களின் மருத்துவர்களும் பிரித்தானியக் காவற்துறையின் மருத்துவர்களும் அடிக்கடி பரிசோதித்து வந்தனர். ஒரு கட்டத்தில் காவற்துறை அதிகாரி சுப்பிரமணியம் பரமேஸ்வரனிடம் உன்னைப்போன்ற இளைஞர்கள் எமது நாட்டுக்குத் தேவை நீ இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடு என்று வேண்டிக் கொண்டார். ஒருமுறை அவரைப் பரிசோதித்த காவற்துறை மருத்துவர் அவர் சிறுநீரகம் பாதிப் படைந்திருப்பதாகக் கூறினார்.இலண்டன் நகராட்சிக்கு பெரும் தலையிடியையும் பலத்த செலவையும் ஏற்படுத்திய இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை பிர்த்தானியப் பாராளமன்றத்தின் முன் நடை பெற்ற தமிழர் ஆர்ப்பாட்டதின் ஒரு பகுதியாகவே சுப்பிரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.

No comments:

Post a Comment