Monday, October 19, 2009

ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி




நேற்றைய தினம் தமிழகத்தின் முன்னனி இணையத்தளமான குமுதத்திற்கு பேட்டி ஒன்றை அருட்தந்தை ஜெகத் காஸ்பர் அவர்கள் வழங்கியிருந்தார். அதில் பழ நெடுமாறன் ஐயா உட்பட பலரை கீள்தரமாக விமர்சித்திருக்கும் அவர், பழ நெடுமாறன் ஐயா, மற்றும் வைகோ போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், தமிழ் நாட்டு ஈழஆதர்வாளர்கள், தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா போர் நிறுத்தத்தைக் கொன்டுவந்திருக்கும் என கற்பனையின் உச்சக்கட்டத்திற்கே சென்று புதுக் கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து உணர்வாளர் சீமான் கட்சி ஆரம்பித்துவிட்டு பின்னர் தனக்குச் சொல்லாமலே தன்னை விலக்கிவிட்டதாகவும் சாடியுள்ளார்."விபச்சாரம்", "நான்" "நீ" என்ற ஏக வசனங்களைக் கொண்டு தமிழீழ உணர்வாளர்களை வயது தராதரம் பார்க்காமல் வசைபாடியுள்ளார் திரு.ஜெகத் காஸ்பர் அவர்கள். ஆண்மை பற்றிப் பேசி, ஒருவரை ஆண்மை இல்லாதவர் என வசைபாடும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர் காஸ்பர் அவர்கள். ஒரு அருட் தந்தை என்ற தனது ஸ்தானத்தில் இருந்து விலகி மிகவும் கீழ் தரமாக ஈழ உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறார். இப்படி இவர் விமர்சிக்க அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது. தனது பிறந்த நாளுக்கு தேசிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதுவே தனக்கு கிடைத்த அங்கிகாரம் எனக்கூறுகிறார். இதற்கு மேல் யாரும் என்னுடன் பேச முடியாது என்கிறார் காஸ்பர். துரோகி கருணாவிற்கும் கூடத்தான் தேசிய தலைவர் ஒரு காலத்தில் பிறந்த நாழ் வாழ்த்து தெரிவித்தார், என்பதை காஸ்பர் மறந்துவிட்டாரா?


விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தவறுகள் இருப்பதை தாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் காஸ்பர். அப்படி ஒத்துக்கொள்ள இவர் யார்?விடுதலைப் புலிகளின் உறுப்பினரா?சுபவீர பாண்டியன் மற்றும் காஸ்பர் அடிகளார் முன் நிலையிலேயே, இந்தியாவால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, ப.நடேசன் அவர்களும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தனர், இதில் இவர்கள் பங்கும் சிதம்பரத்தின் பங்கும் இருப்பதை யாரும் மறந்துவிடவில்லை. இருப்பினும் அப் பழியை அப்படியே விஜய் நம்பியார் மீது திருப்பிப் போட்டு அவரை ஒட்டுமொத்த குற்றவாளியாக்கி தான் தப்பிக்கப் பார்க்கிறார் காஸ்பர்.வெள்ளைக் கொடிகளை காட்டியவாறு செல்லுங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நாம் தருகிறோம் எனக் கூறிய இந்தியா, நயவஞ்சகமாக எமது தலைவர்களைக் கொல்லக் காரணமாகியது. அப்படியே அதை இலங்கை அரசு செய்திருந்தால் கூட அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அற்ற இந்தியாவிடம், இனியும் நாம் சென்று பிச்சை கேட்கவேண்டும் என்கிறார் காஸ்பர் அடிகளார். அதாவது இந்திரா காங்கிரசுடன் பேசினால் நல்லது நடக்கும் என்றால் பேசலாம் என்பது அவர் கொள்கை. அடிப்படையில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படும் சோனியாவிடம் நக்கிப் பிழைக்கலாம் என்கிறார் காஸ்ப்பர் அடிகளார்.எல்லாம் போகட்டும்,
விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக ஐயா பழ நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ பல வருடங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், சீமான் உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்,ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் காஸ்பர் அவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, குறைந்த பட்சம் கியூ பிரிவினரால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. மத்திய அரசில் இவருக்கு இருக்கும் தொடர்புகளும், இந்திய உளவுப் பிரிவின் நெருங்கிய தொடர்பும் இருப்பதன் காரணமாகவே இவர் இது நாள்வரை கைதுசெய்யப்படவில்லை.குமுதம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, பதிலைக் கூறாமல் உலக பயங்கரவாதம் குறித்து பேசி சில கேள்விகளை திசை திருப்பி அதனை ஒரு விவாதமாக மாற்றி, நேர்காணலை திசை திருப்ப காஸ்பர் மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.அத்துடன் 2002ம் ஆண்டு இந்தோ- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், அதனால் ஏவப்பட்ட செயற்கைக்கோள், அதில் உள்ள புற ஊதாக்கதிர் உள்வாங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதனை முன்னமே விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருக்கலாமே, தற்போது அதைப் பற்றி பேசி என்ன பயன்.?தமிழ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களையும் வசைபாடி, தான் மட்டும் செய்வதே சரி எனக் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் காஸ்பர் அவர்கள். சிதம்பரம், தொடக்கம் சிதம்பரத்தின் மகனுடனும் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகக் கூறும் காஸ்ப்பர், கவிஞர் கனிமொழியுடனான தொடர்புகளைப் பற்றி கடைசிவரை வாய் திறக்கவில்லை.புலம்பெயர் தமிழ் மக்கள், தற்போது ஈழ விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளையோர் அமைப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கால கசப்பான அனுபவங்களை இரை மீட்டி, தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ண முனையும் விசக் கிருமிகளை முதலில் களைந்தால் தான் எமது போராட்டம் வலுப்பெறும். தேசிய தலைவர் எனது நண்பர், விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கிறேன் எனச் சிலர் கூறி கடைசியில் கவிழ்த்த விடையங்களை நாம் அறிவோம்.தமிழர்கள் தற்போது பிரிந்து கிடப்பதாக முழத்திற்கு, முழம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஸ்பர் அவர்கள். தமிழராகிய நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் உணர்வாளர்களாக இருக்கிறோம் அப்படியே இனியும் இருப்போம் என அதிர்வு இணையம் நம்புகிறது. அதுவே உண்மை. இதில் காஸ்பர் போன்ற புல்லுருவிகள் அகற்றப்படவேன்டும். சுதந்திர ஈழம் மலரவேண்டும். தமிழர்களின் போராட்டமே விடுதலையை வென்றெடுக்குமேயன்றி, நாம் நக்கிப் பிழைக்கத் தேவையில்லை. காங்கிரசிடம் மண்டியிடவோ அல்லது இந்திய அரசிடம் பிச்சையாக நாம் தமிழீழத்தைப் பெறவேண்டியது இல்லை.அதனை தமிழீழ தேசிய தலைவரும் விரும்பமாட்டார். போராடாமல் ஒரு இனம் வெற்றிபெற்றதாகச் சரித்திரமில்லை என்றான் எமது தங்கத் தலைவன்! எனவே அவர் வழியில் நாம்செல்வோம். அது ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம்.


http://www.athirvu.com/


No comments:

Post a Comment