Saturday, October 31, 2009
“உலகத்தமிழ் மாநாடு” கருனாநிதியின் குடும்ப சொத்தா ?
சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி டில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல், யார் விபீஷணன் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் முதல்வர் கருணாநிதியை விபீஷணன், எட்டப்பன், காக்கைவன்னியன் ஆகியோரது மொத்த உருவம் எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
முதலில் எட்டாவது உலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறும் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே வெறுமனே “உலகத்தமிழ் மாநாடு” என அறிவித்தார். இப்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 24 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இது சாவீட்டில் கொட்டு மேளம் தட்டித் தாலி கட்டின கதையாக இருக்கிறது!
ஐந்து தடவை முதலமைச்சராக இருந்த போது வராத தமிழ்ப் பற்று இப்போது முதல்வர் கருணாநிதிக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. தண்ணீரில் மூழ்கினவன் ; துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைப்பது போல துருப்பிடித்துப்போன தனது படிமத்தைத் துலக்கவும் – தமிழினத் தலைவர் அல்லர் தமிழினக் கொலைஞர் – என்ற வரலாற்றுப் பழியைப் போக்கவும் இந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு உதவும் என முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ், தமிழர் என்ற உணர்வு முதல்வர் கருணாநிதியால் அமைச்சர் பதவிகளாக, கோபாலபுரங்களாக மாற்றப்பட்டு விட்டன. பதவி ஆசை காரணமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ மக்களையும் சிங்கள பேரினவாதத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டார்.
தமிழ்மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, மனிதச்சங்கிலி, பதவி விலகல், உண்ணாநோன்பு, பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என நீண்ட நாடகத்தை அரங்கேற்றி சிங்கள – பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்குத் துணைபோனார்!
எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!
அண்மையில் ஒரு திமுக – காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அதில் அரசியல் குளிர் காய நினைத்தார். ஆனால் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரோன் ‘இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை’ என இனவெறி பிடித்த ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் ‘நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் அனைத்துலக தரத்தில் சிறப்பாகவே உள்ளது’ என்று திருவாய்மலர்ந்து வதை முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களது வெந்த நெஞசங்களில் வேலைப் பாய்ச்சினார்!
யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவிற்கு வலம்புரி இதழ் ‘சனீஸ்வரன்’ என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் செய்தியாளர்களிடம் “இலங்கையும் – தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார்.
ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்ற குழுவினர், திருமாவளவன் நீங்கலாக, நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சவின் குருதி நனைந்த கைகளைக் குலுக்கிப், பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பரிசுகள் பெற்று ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பினார்கள்.
ஆனால் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் அவரைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ‘இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!’ என்ற மலிவான அரசியல் பரப்புரை செய்து மகிழ்ந்தார்கள்.
இந்த இடத்தில் ஒரு பழம்பாடல் நினைவுக்கு வருகிறது. அது முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாவோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?
ஆலமரத்தைப் பலாமரமாகச் செய்தல் முடியுமோ? நேராக்குவதற்கு இயலாத நாயினது வளைந்த வாலை தேராக நிமிர்த்த முடியுமோ? கருமை நிறமுடைய காகத்தை கிளியைப் போலும் பேசும்படியாகச் செய்வித்தல் ஆமோ? கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயலுமோ? ஆகாது என்பதாம்.
இப்போது நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனவரி 2011 ல் நடத்தலாம் என உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களின் வேண்டுகோளை முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டிப் புறந்தள்ளி விட்டார்.
இதனை அடுத்து உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி மாநாட்டை நடத்த மெத்தப் பாடுபடுகிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு வெளியே வலை வீசி இருக்கிறார். இதில் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
“தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.
இலங்கையில் தமிழர் அரசியல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்துப் பலத்த விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், நான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது வில்லங்கமான காரியம். எனது நிலைப்பாடு குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.
உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும்.செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும் அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்று சிவத்தம்பி கூறியிருந்தார்.
ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதைத் தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சிவத்தம்பி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தனது குத்துக் கரணத்தை நியாயப்படுத்தத் தான் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னது கிடையாது அப்படியாக யாரும் பொருள் கொண்டிருந்தால் தனது சொற்பதத்தில் உள்ள குறைபாடு காரணம் எனத் தமிழறிஞர் சிவத்தம்பி சமாளிக்கிறார்.
எமது முந்திய அறிக்கையில் கூறியிருந்ததை மீண்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!
இந்த மாநாடு தமிழ்மொழிக்குச் சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார்.
தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை.
ஏன் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு தந்தி கூட அடிக்க முடியாது. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.
“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
எனவே தமிழீழ மக்கள் விடுதலை பெற்றுப் பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!
முதல்வர் கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி வளைந்து கொடுத்துத் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
Source:http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_29.html
Thursday, October 22, 2009
ஈழப் படுகொலைகளும், இந்திய ஊடகங்களின் வன்மமும்
-ஊடகவியலாளர்களை கொலை செய்தும் ஒடுக்கியும் அச்சுறுத்தியும் துரத்தியும் விடும் நாடாக மாறியிருக்கிறது இலங்கை.
-போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை
மக்களை மூளைச் சலவை செய்யவும் அச்சுறுத்தவும் தாங்கள் சேவை செய்யும் அதிகார பீடங்களின் ஊது குழலாகவும், தாங்கள் நம்பும் சாதி, மதம் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் கார்ப்பரேட் சக்திகளாகவும் மாறியிருக்கின்றன இந்திய ஊடகங்களும் பெரும்பாலான ஊடகவியளார்களும்.
உலகெங்கிலும் உண்மைக்காவும் படுகொலை செய்யப்படும் மக்களுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் கவலைப்படும் ஊடகவியளார்களின் கதி அச்சப்படும் வகையில் அதிகரித்துச் செல்கிறது.இடது திவீரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம். என்றெல்லாம் கட்டி எழுப்பப்படும் அமெரிக்க நலன்களும், அதையொட்டி இராணுவ அனர்த்தனங்களுக்கு இடையில் சிக்கி அழியும் மக்கள் குறித்து பேசுவதற்கும் எந்த ஊடகங்களும் தயாரில்லை. ஆப்கானில் எண்ணெய் லாறியில் இருந்து வழிந்தோடும் எண்ணையை பிடிக்க காலிக் குடங்களோடு திரளுகிற மக்களை குண்டு வீசிக் கொல்கிறது அமெரிக்கப் படைகள்.அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது மேற்குலக ஊடகங்கள். பி.பி.சி, சி.என்.என். போன்ற ஏகாதிபத்திய உடகங்களுக்கு மாற்றாக அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் உருவாகி வளர்ந்தாலும் அதன் தேவைகள் ஒப்பீட்டளவில் போதுமானதாக இல்லை.பாக்தாத்தில் வைத்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்று இப்போது விடுதலையாகியிருக்கும் சையத்தும் சரி, இந்திய உள்துறை அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் மீது செருப்பு வீசி சஸ்பெண் செய்யப்பட்டிருக்கும் ஜர்னைல் சிங் போன்றவர்களின் செயல் குறித்து விவாதிக்கக் கூட எந்த ஊடகங்களும் தயாரில்லை.பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலும் அன்றாடம் வீசப்படும் குண்டுகள் குறித்து பிராந்திய மொழி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. காஷ்மீரிலும் இந்தியாவின் வடகிழக்கிலும், சட்டீஸ்கர்,மேற்குவங்கம் போன்ற மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் மாநிலங்களில் இந்திய இராணுவம் செய்கிற மனித உரிமைப் படுகொலைகள் குறித்தும் தடுத்து தனிமைப்படுத்தி ரகசிய வதை முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. இன்றைக்கு உலகமே இராணுவக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறது. இந்தக் கண்காணிப்புகள் மாநில போலிஸ், மத்தியப் படைகள் என விரிவடைந்து சென்றாலும் இவர்களின் சீருடை தரித்த கண்காணிப்பின் கீழ் சிறுபான்மை மக்கள் அவர்களின் மத அடையாளங்களை பேணி சுதந்திரமாக வாழ முடியாத சூழல். இந்தியாவில் ஊடகங்களில் மக்களின் முற்போக்கு இயக்கங்களுக்கு எதிரான, இடஒதுக்கீடு உரிமைக்கு எதிரான போக்குகள் ஊடகங்களில் காணப்படுகிறது.பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும் போருக்குப் பின்னரும் இந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுதத்தோன்றுகிறது. வன்னிப் போரும் ஆங்கில ஊடகங்களும்வன்னி மக்கள் மீதான போர் 2007 – ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகாலம் நடந்த அந்தப் போரின் தெரிப்புகள் இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லாமல் இருந்தது. அவ்வப்போது தமிழக ஊடகங்களில் புலிகள் தொடர்பான கட்டுரைகள், அதுவும் வீரசாகசக் கதைகளைக் கொண்ட கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன.2007ல் மாவிலாறு பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது நான் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சுப.தமிழ்செல்வனையும், இராணுவப் பேச்சாளர் இளந்திரையனையும் நேர்காணல் கண்டிருந்தேன்.போரின் கொடூரமான ஒரு பக்கத்தை பேசவோ, இந்தப் போர் ஈழ மக்களின் சிவில் சமூக வாழ்வின் மீதும், அவர்களின் உயிர்வாழ்வின் மீதும் எவளவு மோசமான பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்றோ அறியாதவர்களாகவோதான் இருந்தார்கள்.தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களும் போரின் கோடூர முகம் குறித்து போர் துவங்கிய காலத்தில் பேசவில்லை, 2008 – ஆம் செப்டம்பருக்குப் பிறகு போர் தீவீரமாகி 2009 ஜனவரியில் கிளிநொச்சி விழுந்த போதே தமிழகத்தில் போராட்டங்கள் தீவீரமாகின அதுவும் சிறு சிறு அமைப்புகள் ஆங்காங்கு போருக்கு எதிராக போராடி வந்தார்கள். வெகுமக்களை மையமிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகள் அதன் பின்னே களத்தில் குதித்து அதை மாபெரும் சூதாட்டமாக மாற்றின.
தியாகி முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்குப் பின்னர் எழுந்த நெருப்பை அணைப்பதில் எல்லா தேர்தல் கட்சிகளுமே தீவீரமாக இருந்தது. ஆனால் பெருந்தொகையான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது தமிழக மக்களிடையே கடுமையான அனுதாப அலையை தோற்று வித்தபோது அது ஆளும் கட்சிகளுக்கு அரசியல் நெருக்கடியாகவும், எதிர்கட்சிகளுக்கு அல்வாவாகவும் மாறிவிடும் என்கிற சூழலில் குதர்க்கமான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது சடுதியாய் தமிழகம் பற்றி எரிவதைப் போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டது.
அனைத்துக்கட்சிக் கூட்டம், ராஜிநாமா நாடகம், மனிதச் சங்கிலி நாடகம், என ஈழப் போராட்டம் சூதாட்டமாக மாற்றப்பட்டு வெகுமக்கள் மயப்படுத்தப்பட்ட போது தான் இந்திய ஆங்கில ஊடகங்களின் அகோரமான தாக்குதல் தொடங்கியது. அந்தவகையில் தமிழ் மக்கள் மீதான இனவெறிப் பிரச்சாரத்தை துவங்கி வைத்தது இந்து பத்திரிகைதான். நெருக்கடிகளை எப்படியாவது சாமாளித்தாக வேண்டிய சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது திமுக. 14,10,2008 செவ்வாய்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏற்பாடாகியிருந்தது. அன்று வெளியான இந்துப் பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி The Dangers of Tamil Chauvinism. )http://www.thehindu.com/2008/10/14/stories/2008101454490800.htm) என்ற கட்டுரையை எழுதியிருந்தார். தமிழக மக்களை நச்சு விதைகளாகவும் இனவாதிகளாகவும் சித்தரிக்கும் கட்டுரை அது. புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழகமே கிளர்ந்தெழுந்து விட்டது போன்ற தோற்றத்தையும் அதனால் இந்திய இறையாண்மையே கேள்விக்குள்ளாகும் சூழலும் எழுந்துள்ளதாகவும் அக்கட்டுரை சித்தரித்தது. அதில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களைக் கூட முட்டாள்கள் என்கிற ரேஞ்சில்தான் எழுதியிருந்தார் மாலினி பார்த்தசாரதி. அதுதான் இந்தப் போரின் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தையும் துடிப்பையும் இனவாதமாக சித்தரித்த முதல் எழுத்து. அந்த புள்ளியில் இருந்தே ஆங்கில ஊடகங்கள் ஈழம் குறித்து திட்டமிட்ட பொய்பிரச்சாரத்தை துவங்கினார்கள்.கிளிநொச்சி விழ்ந்த போது ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக ராஜபட்சேவின் நேர்காணலை வெளியிட்டார் இந்து ராம்.
முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி தமிழகம் முழுக்க எழுந்த அதிர்வலையும் கொளத்தூரில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திரண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கூட்டத்தையும் தீவீரவாத கூட்டமாகவும் பெரும் கலவரச் சூழல் எழுந்துள்ளது என்றும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.ஆனால் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் அரசியல் கட்சிகளின் மேல் கடும் வெறுப்புற்றவர்கள். முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டு அது பற்றி செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் அதை ஒரு மனநோயாக சித்தரித்து மனோவியல் நிபுணர்களின் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள் என்பதோடு, வழக்கறிஞர்களின் போராட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளின் போராட்டங்களையும் தேச நலனுக்கு எதிரானது எனச் சித்தரித்து அரசின் ஒடுக்குமுறைக்கு தூபமிட்டதும் இதே ஆங்கில ஊடகங்கள்தான்.ஏன் இப்படி? புலிகளின் தோல்வியை இவர்கள் ஈழ மக்களின் தோல்வியாக மட்டும் பார்க்கவில்லை, தமிழகத் தமிழர்களின் தோல்வியாகப் பார்த்தனர். தவிரவும் இந்துஸ்தானத்திற்கு எதிரான திராவிடக் கருத்தியல் அதன் இடஒதுக்கீடு கொள்கை, பிராந்திய தன்மை இவைகள் எல்லாமே பார்ப்பனீயத்திற்கு எதிரானவை என்பதிலிருந்து ஆங்கில ஊடகங்களின் வன்மம் துவங்கிறது. உயர் கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, மண்டல் கமிஷனுக்கு ஆதரவான நிலை, என்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக் கோர்க்கைகளில் தமிழகம் தனித்து நடப்பதிலிருந்து இந்த வன்மம் துவங்குகிறது.
அந்த வன்மத்தின் உச்சத்தைத்தான் நாம் மே மாதம் புலிகள் மீதான போர் முடிவுக்கு வந்த போது ஆங்கில ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தில் பார்த்தோம். பொதுவாக போரின் முடிவு என்பது பயங்கரவாதத்தை அழித்த அரசின் வெற்றி என்ற பார்வைதான் ஆங்கில ஊடகங்களின் பார்வை.ஆனால் இந்தப் போர் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களையும் பல்லாயிரம் போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து துயரமான ஒன்றாக முடிவுக்கு வந்தது குறித்து கவலையற்று, பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடினார்கள்.
இந்திய ஆங்கில ஊடகங்கள். மே மாதம் 19 ஆம் திகதில் தொடங்கி அடுத்த ஒருவார காலத்திற்கு ஆங்கில ஊடகங்களின் பிரச்சாரம் என்பது இராவணனை அழிக்கும் தசரா விழா போன்று கொண்டாடப்பட்டது. பிரபாகரன் எப்படி இறந்தார்? அது குறித்து பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று சோ ராமசாமியையும், சு.சாமியையும் பேட்டி எடுத்து தொடர்ந்து ஒளிபரப்பியது ஊடகங்கள்.எங்கோ சாலையில் நடந்து போகிற ஒருவரிடம். பிரபாகரன் இறந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறார் டைம்ஸ் நௌவ் செய்தியாளர் அவர் தீவீரவாதி கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி என்கிறார். உடனே செய்தியாளர் கேமிராவுக்குள் வந்து தமிழக மக்கள் பிரபாகரனின் மரணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார். என்.டி.டி.வி, சி.என்.என்.ஐ.பி.என், டைம்ஸ் நௌவ், ஹெட்லைன்ஸ் டுடே என எல்லா ஆங்கில ஊடகங்களுமே மூன்றாம் தரமான மஞ்சள் ஊடகங்களாக மாறிப்போனது அப்போதுதான்.சந்தீப் குமார் ரத்தோய், பர்கா தாத்தா, டைம்ஸ் நௌவ் செய்தியாளர் என எல்லா அதிமுகக்கிய இந்திய ஊடக முகங்களும் இனவாதிகளாக மாறி நீண்ட கால வன்மத்தை தமிழக மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தார்கள். போர்க்காலத்தில் ஈனத்தனமான பல செய்திகளை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அகதி முகாம் பற்றி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை கொண்டு வந்தது. மலையாளியான ஜெயாமேனன் எழுதிய அந்தக் கட்டுரை பாவத்தைக் கழுவுகிற பிலாத்துவின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான சிற்ந்த கட்டுரைகளை வெளியிட்டது தெஹல்கா இதழ்தான்.போர் காலத்தில் இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவில் எங்கெல்லாம் பயிர்ச்சி எடுக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறான பயிர்சிச்கள் உதவிகள் வழங்கப்பட்டது என்றும். இந்தியா இலங்கை அரசிற்கு எவ்வாறு உதவுகிறது என்றும் பல கட்டுரைகளை இந்தியாவின் கோரமுகத்தை அம்பலப்படுத்தி தெஹல்கா எழுதியது. ஆனால் இந்து ராம் போன்ற இடது சாரி முகமூடிகள் இன்று வரை தொடர்ந்து போருக்குப் பின்னரும் இலங்கை அரசின் அங்கீகரிக்கப்படாத இந்தியத் தூதர்கள் போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கை இனப்படுகொலை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள்.மக்களினங்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விசாரணைக்குட்பட்டே வருகிறது.படுகொலை நிகழ்த்தும் நாடும் அதைச் சூழ நிலவும் பிராந்திய அரைசியலும் உலகநாடுகள் எவ்விதமான துருவ அரசியலில் தங்களைப் பிணைத்துள்ளன என்பதைப் பொறுத்தும் இத்தகைய விசாரணைகளை முன்னநகர்த்துகின்றன. நாஜிப்படுகொலைகள், ருவாண்டா படுகொலைகள், உள்ளிட்ட படுகொலைகளுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு இனப்படுகொலைதான் இலங்கையிலும் நடந்தது. பொதுவாக குறிப்பிட்ட இனத்த்தை முடக்கி அழிக்கவோ, பலவீனமாக்கவோ நினைத்து இவ்விதமான இன அழிப்புகள் நடந்து சில காலம் பின்னரே இப்படுகொலைகள் உலகின் கண்களுக்குத் தெரியவரும். ஆனால் இலங்கையில் போர் தீவீரமாக நடந்த 2009 பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்காலில் பகுதிக்குள் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்குள் நடந்தவை அப்பட்டமான இனப்படுகொலை என்று உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள்.தமிழகத்தில் கடும் கொந்தளிப்பான போராட்டங்களும், அதை அச்சுறுத்தி அடக்குகிற நிலையும் காணப்பட்டது. போர் முடிந்த பிறகு மேற்குலக ஊடகங்கள் இனப்படுகொலைக்கான ஆவணச் சாட்சியங்கள் சிலதை வெளியிட்டன. அந்த வகையில் டைம்ஸ் இதழ் போர் முடிவுக்கு வந்த மே மாதம் இறுதியில் 29ஆம் திகதி முதல் கட்டுரையை வெளியிட்டது.இறுதிப்போரின் போது இருபதாயிரம் மக்கள் சிங்களப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்றது அந்த புலனாய்வு அறிக்கை. பீரங்கிகள், கனரக ஆயுதங்களை பயன்படுத்தி சர்வதேச போர் நெறிகள் எல்லாவற்றையும் மீறி கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட கொடூர யுத்தம் என்று இதை வர்ணித்த டைம்ஸ் இதழ் தனது புலனாய்வுச் செய்தியாய் இதை பதிவு செய்தது.இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் எடுக்கப்பட்ட பேரழிவைக் காட்டும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரை ” பீரங்கித் தாக்குதல் மற்றும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் பீரங்கி தாக்குதலை நிறுத்துவதாக இலங்கை அரசு அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு லட்சம் தமிழர்கள் இருப்பதாகவும், இப்பகுதியில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. ஆனால் டைம்ஸ் இதழ் நடத்திய புலனாய்வு விசாரணை மற்றும் புகைப்படங்களில், இலங்கை ராணுவம் உலக நாடுகளுக்கு அளித்த உறுதி மொழியை மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. போஸ்னியாவில் 1995-ம் ஆண்டு ஏற்பட்ட மனிதப் படுகொலை மற்றும் சூடானில் உள்ள தார்ஃபூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களைப் போல இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் அமைந்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட பகுதியில் மட்டும் இலங்கை ராணுவ நடவடிக்கையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது”சில நாள் இடைவெளிக்குப் பிறகு டைம்ஸ் இக்கொலைகளை வார இறுதிக் படுகொலைகள் என்று கடுமையாகச் சாடி செய்தி வெளியிட்டது.பிரெஞ்சு ஊடகமான லே மாண்டே போன்ற இதழ்கள் 13 சதுரகிலோ மீட்டருக்குள் ஐம்பதாயிரம் மக்கள் சிக்கி அவர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக எழுதியது . இதில் நாம் சந்திக்கும் ஒரு முரண் என்னவென்றால் போர்பகுதிக்குள் எழுபதாயிரம் மக்கள் இருப்பதாக இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி பாராளுமன்றத்தில் சொன்னார். பல ஊடகங்களும் ஐம்பதாயிரம் என்றும் எழுபதாயிரம் என்றும் சொன்னன.உண்மையில் அங்கு மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து புலிகள் சொல்லி வந்தார்கள். இந்தியாவும் இலங்கை அரசும் வேண்டுமென்றே மக்கள் எண்ணிக்கையை குறைத்துச் சொல்ல உண்மையான மக்கள் எண்ணிக்கை எவளவு என்று தெரியாத ஊடகங்களோ அனுமானமாக மக்கள் எண்ணிக்கையை வெளியிட்டாலும் அவர்களின் அக்கறையை நாம் மதிக்கத்தான் வேண்டும். போருக்குப் பின்னர் பான்கிமூன் நடந்து கொண்ட விதம், இந்திய வம்சாவளியில் வந்த விஜய்நம்பியாரை இலங்கை விவாகரங்களுக்கு பொறுப்பாளியாக நியமித்தது குறித்தும் அவரது தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசின் இரணுவத்திடம் ஊதியம் பெற்றுக் கொண்டு இராணுவ அட்வைசராக இருப்பது குறித்தும் இனனர் சிட்டி பிரஸ் நேரடியாகவே ஐநாவின் தூதுவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு விஜய் நம்பியாரின் இந்திய சார்பையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் நடந்து கொண்டதையும் கூட இன்னர் சிட்டி பிரஸ் வெளிக் கொண்டு வந்தது. அத்தோடு பெருந்தொகையான மக்கள் இனப்படுக்கொலை செய்யப்பட்ட போது அதுகுறித்து அமைதியாக இருந்து கழுத்தறுத்துவிட்டார் பான்கிமூன் என்று கடுமையாக பான்கிமூனைச் சாடியது இன்னர் சிட்டி பிரஸ்.இந்த ஊடக நிறுவனத்தின் கடுமையான சாடலுக்குப் பின்னர்தான் பான்கிமூன் மென்மையாகவேனும் இலங்கை அரசை கண்டிக்க முன்வந்தார். போருக்குப் பின் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 13,000& க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் குறித்தும் காத்திரமான கேள்விகளை அது எழுப்பியது.மௌனித்திருந்த மேற்குலக ஊடகங்கள் ஓரளவுக்கு செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ், லே மாண்டே, இன்னர் சிட்டி பிரஸ், வரிசையில் இலங்கை அரசின் இனவாதக் கொலைகளுக்கு ஆதாரமாக உறுதியான இரண்டு ஆவணங்களை வெளியிட்டது சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம்.ஏனைய ஊடகங்களைக் காட்டிலும் சேனல் 4 நிறுவனத்தின் பணி இலங்கைப் போரில் அளப்பரியது. ஐடிஎன் செய்தி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் சேனல் 4 மார்ச் மாத இறுதியிலேயே தனது படப்பிடிப்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. இரும்புத்திறை போட்டு மூடப்பட்டு பெருமளவான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இடத்திற்கு இலங்கை அனுமதித்தது சில ஊடகவியளார்களை மட்டும்தான். மேற்குலக ஊடகங்களுக்கு கண்டிப்பான முறையில் அனுமதி மறுக்கப்பட்டது. சில தமிழக ஊடகவியளார்கள் அங்கு செல்ல முயன்றோம். அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ( சில இலங்கை ஆதரவு தமிழக. ஆங்கில, ஊடகவியளார்கள் இலங்கை அரசின் மறைமுக நிதி உதவியோடு அங்கு சென்றும் வந்தார்கள். இந்து ராம் இராணுவ ஹெலிகாப்டரிலேயே வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்) என்பதை எல்லாம் தாண்டி மக்கள் சார்ந்து எழுத நினைத்த எவருக்குமே அங்கு அனுமதி இல்லை. இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்தியாளர்கள் மட்டும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.இப்படிப் போன ஒரு சிங்கள ஊடகவியளார்கள் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சில மடிக்கணனிகளை திருடிய சம்பவம் கூட நடந்தது. இந்நிலையில் சானல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் நிக் பேட்டன் வால்ஷ், தயாரிப்பாளர் பெஸ்ஸி டூ, கேமராமேன் மாட் ஜாஸ்பர் ஆகியோர் வவுனியாவுக்குள் நுழைந்து அங்குள்ள அகதி முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி முதல் செய்தித் தொகுப்பை வெளியிட்டார்கள். பெருமளவான தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதாகவும், அவர்கள் எந்த நம்பிக்கையும் அற்று கொடூரமான கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தியை பதிவு செய்தார் நிக் பேட்டன்.வவுனியா ஆரம்ப சுகாதார மையத்திற்குள் ரகசிய கேமிராவைக் கொண்டு போய் அங்கிருந்த நோயாளிகள், குவித்து வைக்கப்பட்டிருந்த பிணங்கள் குறித்த செய்திகளை எல்லாம் முதன் முதலாக கொண்டு வந்தவர்கள் இக்குழுவினரே, மிக முக்கியமாக சேனல் 4 தொலைக்காட்சி கனரக ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட வில்லை என்று இந்தியா இலங்கை அரசுக்குக் கொடுத்த நற்சான்றிதழை உடைத்தெரிந்தார்கள். அவர்கள் தொகுத்தளித்த இந்த செய்தி ஆவணம் மே 5 ஆம் நாள் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் மூன்று பேரும் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.பின்னர் ஜனநாயத்திற்கான ஊடகவியளார் அமைப்பு வெளியிட்ட கொடூரமான இனப்படுகொலை விடீயோவை வெளியிட்டதும் சேனல்4 தொலைக்காட்சிதான்.இத்தனை ஊடகங்கள் இவளவு கேள்வி எழுப்பியும், போர் தொடர்பாகவும் இனப்படுகொலை தொடர்பாகவும் இவளவு ஆவணங்கள் வெளிக் கொணரப்பட்ட பிறகும் ஏன் இலங்கையைச் சூழ அமைதி நிலவுகிறது என்றால் ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் இந்திய வர்த்தக நலனுக்காகவும் இலங்கையில் உருவாகியுள்ள புதிய சந்தையை சுவைப்பதற்காகவும்தான் இதில் அமைதிகாக்கின்றன. மேலும் இவ் ஊடகங்களும் மேற்குலகமும் இலங்கை அரசிடம் பெரிதும் வேறு படுவது தன்னார்வக்குழுக்கள் தொடர்பாகத்தான். அவர்கள் தன்னார்வக்குழுக்களை முகாம்களுக்குள் அனுமதிக்கக் கோருகிறார்கள். ஆனால் இலங்கையோ இராணுவச் சர்வாதிகார பார்மா போன்று தன்னார்வக்குழுக்கள் உள்ளிட்ட எல்லா வெளி உதவிகளையும் தான் பெற்றுக் கொள்ளமட்டுமே நினைக்கிறது. தன்னார்வக்குழுக்கள் பௌத்த இறைமையை சிதைத்து விடும் என இலங்கை அரசு நம்புகிறது.ஆனால் இலங்கைக்குள்ளேயோ முகாம்களுக்குள்ளேயோ அனுமதிக்க மறுக்கிற தன்னார்வக்குழுக்களை புலம்பெயர் நாடுகளில் ஊக்குவிக்கிறது. அதுவும் ஏற்கனவே உள்ள ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்களை அல்ல இலங்கைத் தமிழர்களைக் கொண்ட புதிய குழுக்களை உருவாக்கி அதற்கு நிதி உதவி அளித்து புலத்தில் உள்ள புலி ஆதரவைச் சிதைப்பது புலி ஆதரவாளர்களை கைது செய்வது, அரசியல் எழுச்சி ஏற்படா வண்ணம் மக்களைக் குலைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இக்குழுக்களை பயன்படுத்துகிறது இலங்கை அரசு.போருக்குப் பின்னர் இலங்கை அரசின் பெரும்பங்கு நிதி இலங்கைக்கு வெளியில் அதன் ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடப்படுகிறது ராஜதந்திர நடவடிக்கை என்பது முன்னெடுக்கப்படுவது இந்த தன்னார்வக்குழுக்கள் மூலம்தான். சென்னையில் பணியாற்றிய அம்சா பதவி உயர்வு பெற்ற பிரிட்டனுக்குச் சென்றதும் இதற்காகத்தான்.தமிழக ஊடகங்கள்ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்கள் மீது மிக மோசமான விஷத்தைக் கக்கி நச்சை விதைத்த போது கிட்டத்தட்ட அந்த நாட்களில் தமிழ் மக்கள் மிகவும் மன அயர்ச்சி அடைந்திருந்தார்கள்.ஆங்கில ஊடகங்களின் இழிவான பிரச்சாரத்திற்கு எதிர்பிராச்சாரம் செய்து தமிழக மக்களை ஓரளவுக்கேனும் மன ஆறுதல் கொள்ளச் செய்யும் வேலையை எந்த ஊடகங்களும் செய்யவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் பந்த் நடந்தால் அதை ஒரு விடுமுறை தினமாக கொண்டாடி சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பின பிரதானமான இரண்டு தொலைக்காட்சிகள். தமிழக அச்சு ஊடகங்களோ விற்பனையை பிரதானமாகக் கொண்டிருந்தாலும் ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் இதழ்கள் தொடர்ந்து போர்க்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக செய்திகளை வெளியிட்டன. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழப்போர் குறித்த செய்திகள் வெளியிடாமல் தவிர்த்தன அல்லது தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பாதிக்காத வகையில் அச்செய்தி திரித்து எழுதப்பட்டதாக இருந்தது. தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரிந்த அன்றே ஈழப் போரின் முடிவுகளும் பெரும் துயரமான செய்திகளாய் நமக்கு எட்டின. புலிகள் அழிக்கப்பட்டார்கள். பல்லாயிரம் போராளிகள் அவர்களின் குடும்பங்களோடு கொல்லப்பட்டார்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். போர் முடிந்தது ஜனநாயக சக்திகளுக்கு துயரமானதாகவும், பேரினவாதிகளுக்கு உற்சாகமளிக்கும் வகையிலும் போர் முடிவுக்கு வந்தது. நாற்பது வருட பிரச்சனையை நான்கு நாளில் முடிக்க முடியாது என்றவர்கள். போர் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ந்தார்கள்.
வன்னி மக்கள் மீதான இந்தப் போரைப் பொறுத்தவரையில் தமிழக ஊடகங்கள் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசவில்லை. எந்த நேரத்தில் எது முக்கியம் அற்றதோ அது குறித்துப் பேசினார்கள். போர் நடந்த போது இவர்கள் மக்கள் படுகொலைகள் குறித்துப் பேசாமல் வேறு விஷயங்களைப் பேசினார்கள். போர் முடிந்த பிறகு துயரமான மக்கள் படுகொலை குறித்துப் பேசாமல் பிரபாகரன் வருவார் ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும் என்கிறார்கள். பழைய புகைப்படங்களை பிரசுரித்து அது குறித்த காலத்தைப் பதிவு செய்யாமல் பொதுத் தன்மையோடு எழுதி நேற்று நடந்தது போல சித்தரிக்கிறார்கள். பிரபாகரன் இந்தியாவின் உதவியோடு தப்பியதாகவும் எழுதினார்கள். பேரினவாத படுகொலையை சிங்களப் படைகளின் முதுகெலும்பாக நின்று நடத்தியதே மத்திய காங்கிரஸ் அரசுதான்.
ஆனால் போரில் இந்தியாவின் பங்கு குறித்து தமிழகத்தின் எந்த ஊடகங்களும் நேர்மையான முறையில் எழுதவில்லை.மாறாக இவர்கள் போரின் மீதான மத்திய அரசின் பங்கு குறித்தோ கடைசி நேரத்தில் புலிகளுக்கு தமிழகம் செய்த துரோகம் குறித்தோ பேசாமல் வீரசாகசக் கதைகளை எழுதி வருகிறார்கள். அரசியல் அழுத்தங்கள், சார்ந்திருக்கிற அணிகளுக்கு ஏற்றது மாதிரி ஊடகங்கள் ஈழப் போரின் மீதான கருத்துக்களை வெளியிட்டு வந்தன. இதுதான் தமிழ் ஊடகங்களின் செயல்பாடாக இருந்தாலும் தினத்தந்தி, தினமணி, ஆனந்தவிகடன், நக்கீரன், குங்குமம் போன்ற இதழ்கள் போர்க்காலத்தில் மக்களின் துன்பம் குறித்த செய்திகளை வெளியிட்டன. ஆனால் அது அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.
மற்றபடி சென்னையில் இருந்த இலங்கை அரசின் துணைத்தூதர் அம்சாவின் செயல்பாடுகள் ஊடகவியளார்கள், அரசியல்வாதிகளை மையமிட்டு இருந்தன. ஊடக நிறுவனங்களின் பிரதான பொறுப்பாளர்கள் பலரும் அம்சாவிற்கு நெருகக்மாக இருந்தார்கள். போரின் முடிவுக்கு முன்னரும் பின்னரும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அம்சா இவர்களுக்கு விருந்து கொடுத்தார். பரிசும் கொடுத்தார் சில நேர்மையான ஊடகங்கள் இதை புறக்கணித்தாலும் இந்தப் போர்ச்சூழல் அதிக வருவாயை ஈட்டித் தரும் தந்திரம் மிக்கதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த பத்திரிகையாளர்களோ இலங்கை அரசின் அனுகூலங்களை அனுபவித்தார்கள் என்பது மறுக்க முடியாத அசிங்கமான உண்மை. சிலர் கொழும்புவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குளிப்பாட்டப்பட்டார்கள். சிலர் சென்னையிலேயே குளிப்பாட்டப்பட்டார்கள். ரகசியாமான விருந்துகள் அம்சா இங்கிருந்து செல்லும் வரை நடந்தது. புதிய தூதர் கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றதும் அதற்கும் விருந்து நடைபெற்றது இன்றும் ஊடகவியளார்கள், இலங்கைத் தூதர் கூட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் யாரிடமும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அம்சா வீசி எரிந்த வெள்ளிக்காசுகளை வாங்க மறுத்து இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் தமிழகத்திலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகியது. நக்கீரன் மீது அம்சா வழக்குத் தொடர அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்.மக்கள் தொலைக்காட்சி போர் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக இலங்கையின் வடக்கில் அதன் ஒளிபரப்பு தடுக்கப்பட்டது. ஏன் தமிழக ஊடகவியளார்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் ஊடக முதலாளிகளும் தொழில் அரசியல் கூட்டுக்கு ஏற்பவே இவ்விஷயத்தை அணுகினார்கள். ஊடக முதலாளிகளின் இந்த தொழில்சார் ஊடக தர்மத்தை ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக எழுதி. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் இலங்கையில் படுகொலையானார்கள். கடைசியாய் நாம் லசந்தா பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டதையும், திசநாயகத்திற்கு இருபாதாண்டுகால கடும் சிறைத் தண்டனை கிடைத்ததையும் நாம் கண்டோம்.
இருபது உயிர்கள் பலியாகி சிறைக் கொட்டடிகளில் கிடந்து இனப் படுகொலைக்கு எதிராக இன்றளவும் தலைமறைவாக பல நாடுகளிலும் மறைந்திருந்து தொடர்ந்து எழுதுகிறார்கள் சிங்கள இனத்தைச் சார்ந்த ஊடகவியளார்கள். ஆனால் தமிழ், தமிழர் பெருமை பேசும் தமிழ் ஊடகவியளார்கள்?
திசநாயகத்தோடு கைது செய்யப்பட்ட ஜசீகரனும் அவரது மனைவி வளர்மதியும் இன்றும் விசாரணைக் கைதிகளாக கொழும்பு மகசீன் சிறையில் கிடக்கிறார்கள். ஆனால் அஞ்சாமால் சிங்கள இனவாதிகளுக்கு எதிராக சித்திரவதைகளையும் கடந்து போராடுகிற அவர்கள் ஏதோ ஒரு வகையில் இனப்படுகொலை ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்திய ஆங்கில ஊடகங்களோ இலங்கை அரசிற்கு எதிராக உருவாகும் ஆவணங்களை அழிக்கிறார்கள். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார்கள்.
டி.அருள் எழிலன்
Source: http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_3020.html
Tuesday, October 20, 2009
எம்.ஏ (கலைஞர் @(கருணா(ய்)நிதி) சிந்தனைகள்) பாடத் திட்டம்
செய்தி
சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம். திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கும் பாடத்திட்டங்கள் வகுத்துத் தரப்படுகிறது.
முதல் ஆண்டு பாடத்திட்டத்தில் மொத்தம் 8 பேப்பர்கள்:
1. திருக்குவளையிலிருந்து ஒரு தகரப்பெட்டி
2. “முரசொலி” எனும் மஞ்சள் பத்திரிக்கை3. சினிமா மூலம் சீரழிவு - ”ராஜக்குமாரி” முதல் திரைப்படம்
4. பத்மாவதியோடு சில காலம்
5. நீதிக் கட்சியின் உள்ளே நுழைந்த கிருமி
6. குளித்தலையில் 1957ல் பிடித்த சனியன்
7. 1967ல் தமிழகத்தை பீடித்த கொடிய நோய்
8. எம்.ஜி.ஆர் என்ற வில்லன்
இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்திலும் 8 பேப்பர்களுடன், ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்ப்பிக்க வேண்டும்
1. தயாளு மற்றும் ராசாத்தி
2. இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட புரட்டுப் போராட்டங்களின் வரலாறு
3. கருணாநிதியும் இலக்கியமும்
4. தமிழைச் சொல்லி ஊரை ஏய்த்தது
5. பகுத்தறிவு என்னும் பம்மாத்து (மஞ்சள் துண்டின் மகிமை
6. கழகத்தை குடும்பமாக்கிய விந்தை
7. எந்தக் கொள்கையும் இல்லாமல், கொள்கை பேசும் சூட்சுமம்
8. கடைசி வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் பின்னணி
கீழ்க்கண்ட சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரையை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்
1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
குறிப்பு: இது போகவும், இப்பாடத்திட்டம் தயாரிப்பதற்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வலர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தங்கள் ஆலோசனைகளை வழங்கவும்.
Source: http://savukku.blogspot.com/2009/10/blog-post_19.html
Monday, October 19, 2009
ஜெகத் கஸ்பார் ஒரு போலி அருட்தந்தை, ரோவின் கூலி
நேற்றைய தினம் தமிழகத்தின் முன்னனி இணையத்தளமான குமுதத்திற்கு பேட்டி ஒன்றை அருட்தந்தை ஜெகத் காஸ்பர் அவர்கள் வழங்கியிருந்தார். அதில் பழ நெடுமாறன் ஐயா உட்பட பலரை கீள்தரமாக விமர்சித்திருக்கும் அவர், பழ நெடுமாறன் ஐயா, மற்றும் வைகோ போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், தமிழ் நாட்டு ஈழஆதர்வாளர்கள், தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியா போர் நிறுத்தத்தைக் கொன்டுவந்திருக்கும் என கற்பனையின் உச்சக்கட்டத்திற்கே சென்று புதுக் கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். தன்னுடன் சேர்ந்து உணர்வாளர் சீமான் கட்சி ஆரம்பித்துவிட்டு பின்னர் தனக்குச் சொல்லாமலே தன்னை விலக்கிவிட்டதாகவும் சாடியுள்ளார்."விபச்சாரம்", "நான்" "நீ" என்ற ஏக வசனங்களைக் கொண்டு தமிழீழ உணர்வாளர்களை வயது தராதரம் பார்க்காமல் வசைபாடியுள்ளார் திரு.ஜெகத் காஸ்பர் அவர்கள். ஆண்மை பற்றிப் பேசி, ஒருவரை ஆண்மை இல்லாதவர் என வசைபாடும் கீழ்த்தரமான நடத்தை கொண்டவர் காஸ்பர் அவர்கள். ஒரு அருட் தந்தை என்ற தனது ஸ்தானத்தில் இருந்து விலகி மிகவும் கீழ் தரமாக ஈழ உணர்வாளர்களை விமர்சித்திருக்கிறார். இப்படி இவர் விமர்சிக்க அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தது. தனது பிறந்த நாளுக்கு தேசிய தலைவர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதுவே தனக்கு கிடைத்த அங்கிகாரம் எனக்கூறுகிறார். இதற்கு மேல் யாரும் என்னுடன் பேச முடியாது என்கிறார் காஸ்பர். துரோகி கருணாவிற்கும் கூடத்தான் தேசிய தலைவர் ஒரு காலத்தில் பிறந்த நாழ் வாழ்த்து தெரிவித்தார், என்பதை காஸ்பர் மறந்துவிட்டாரா?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தவறுகள் இருப்பதை தாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் காஸ்பர். அப்படி ஒத்துக்கொள்ள இவர் யார்?விடுதலைப் புலிகளின் உறுப்பினரா?சுபவீர பாண்டியன் மற்றும் காஸ்பர் அடிகளார் முன் நிலையிலேயே, இந்தியாவால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு, ப.நடேசன் அவர்களும் புலித்தேவனும் வெள்ளைக்கொடியுடன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் நுழைந்தனர், இதில் இவர்கள் பங்கும் சிதம்பரத்தின் பங்கும் இருப்பதை யாரும் மறந்துவிடவில்லை. இருப்பினும் அப் பழியை அப்படியே விஜய் நம்பியார் மீது திருப்பிப் போட்டு அவரை ஒட்டுமொத்த குற்றவாளியாக்கி தான் தப்பிக்கப் பார்க்கிறார் காஸ்பர்.வெள்ளைக் கொடிகளை காட்டியவாறு செல்லுங்கள் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் நாம் தருகிறோம் எனக் கூறிய இந்தியா, நயவஞ்சகமாக எமது தலைவர்களைக் கொல்லக் காரணமாகியது. அப்படியே அதை இலங்கை அரசு செய்திருந்தால் கூட அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அற்ற இந்தியாவிடம், இனியும் நாம் சென்று பிச்சை கேட்கவேண்டும் என்கிறார் காஸ்பர் அடிகளார். அதாவது இந்திரா காங்கிரசுடன் பேசினால் நல்லது நடக்கும் என்றால் பேசலாம் என்பது அவர் கொள்கை. அடிப்படையில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் செயல்படும் சோனியாவிடம் நக்கிப் பிழைக்கலாம் என்கிறார் காஸ்ப்பர் அடிகளார்.எல்லாம் போகட்டும்,
விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்பதற்காக ஐயா பழ நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டார், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக வைகோ பல வருடங்கள் போடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், சீமான் உட்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்,ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் காஸ்பர் அவர்கள் ஏன் தமிழ் நாட்டில் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, குறைந்த பட்சம் கியூ பிரிவினரால் கூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. மத்திய அரசில் இவருக்கு இருக்கும் தொடர்புகளும், இந்திய உளவுப் பிரிவின் நெருங்கிய தொடர்பும் இருப்பதன் காரணமாகவே இவர் இது நாள்வரை கைதுசெய்யப்படவில்லை.குமுதம் நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, பதிலைக் கூறாமல் உலக பயங்கரவாதம் குறித்து பேசி சில கேள்விகளை திசை திருப்பி அதனை ஒரு விவாதமாக மாற்றி, நேர்காணலை திசை திருப்ப காஸ்பர் மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.அத்துடன் 2002ம் ஆண்டு இந்தோ- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், அதனால் ஏவப்பட்ட செயற்கைக்கோள், அதில் உள்ள புற ஊதாக்கதிர் உள்வாங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகக் கூறும் காஸ்பர் அவர்கள், அதனை முன்னமே விடுதலைப் புலிகளுக்கு அறிவித்திருக்கலாமே, தற்போது அதைப் பற்றி பேசி என்ன பயன்.?தமிழ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களையும் வசைபாடி, தான் மட்டும் செய்வதே சரி எனக் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் காஸ்பர் அவர்கள். சிதம்பரம், தொடக்கம் சிதம்பரத்தின் மகனுடனும் தாம் தொடர்புகளைப் பேணிவருவதாகக் கூறும் காஸ்ப்பர், கவிஞர் கனிமொழியுடனான தொடர்புகளைப் பற்றி கடைசிவரை வாய் திறக்கவில்லை.புலம்பெயர் தமிழ் மக்கள், தற்போது ஈழ விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இளையோர் அமைப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த கால கசப்பான அனுபவங்களை இரை மீட்டி, தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்ண முனையும் விசக் கிருமிகளை முதலில் களைந்தால் தான் எமது போராட்டம் வலுப்பெறும். தேசிய தலைவர் எனது நண்பர், விடுதலைப் புலிகளை நான் ஆதரிக்கிறேன் எனச் சிலர் கூறி கடைசியில் கவிழ்த்த விடையங்களை நாம் அறிவோம்.தமிழர்கள் தற்போது பிரிந்து கிடப்பதாக முழத்திற்கு, முழம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஸ்பர் அவர்கள். தமிழராகிய நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் உணர்வாளர்களாக இருக்கிறோம் அப்படியே இனியும் இருப்போம் என அதிர்வு இணையம் நம்புகிறது. அதுவே உண்மை. இதில் காஸ்பர் போன்ற புல்லுருவிகள் அகற்றப்படவேன்டும். சுதந்திர ஈழம் மலரவேண்டும். தமிழர்களின் போராட்டமே விடுதலையை வென்றெடுக்குமேயன்றி, நாம் நக்கிப் பிழைக்கத் தேவையில்லை. காங்கிரசிடம் மண்டியிடவோ அல்லது இந்திய அரசிடம் பிச்சையாக நாம் தமிழீழத்தைப் பெறவேண்டியது இல்லை.அதனை தமிழீழ தேசிய தலைவரும் விரும்பமாட்டார். போராடாமல் ஒரு இனம் வெற்றிபெற்றதாகச் சரித்திரமில்லை என்றான் எமது தங்கத் தலைவன்! எனவே அவர் வழியில் நாம்செல்வோம். அது ஆயுதப் போராட்டமாக இருக்கலாம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கலாம்.
Friday, October 16, 2009
தமிழக எம்.பிக்களின் இலங்கை விஜயம் மஹிந்த - கருணாநிதி கூட்டுத்திட்ட நாடகம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்களைத்
தொடர்ந்தே தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு வந்திருந்தது என்று தமிழகத்தில் நேற்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.
தமிழகத்திலிருந்து வெளிவரும் "மாலைச் சுடர்" நாளிதழ் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்தி விவரும் வருமாறு:
சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்தபோதும், முகாம்களில் உள்ள தமிழர்களைச் சந்திக்க இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, தமிழக எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய தாம் அனுமதி அளிப்பதாக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தப் பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம்பெறக்கூடாது என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் எனத் தெரிகிறது. இந்தக் கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு, இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம் பிரதமர் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.அதன்படி தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் குழுவில் இடம் பெறுவதற்கு டில்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக எம்.பிக்கள் குழுவில் திருமாவளவனும் இடம்பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பிக்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியது. அப்போது இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் இக்குழுவினர் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாகச் சந்தித்துப் பேசவோ, விவரங்களைச் சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும் சந்தித்துப் பேசக்கூடாது என்றும் கருணாநிதி எச்சரித்து அனுப்பினார் எனக் கூறப்படுகிறது.குறிப்பாக திருமாவளவனை எம்.பிக்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பினார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய எம்.பிக்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை அழைத்துக்கொண்டு அறிவாலயம் வந்ததார் எனவும் கூறப்படுகிறது.அந்தக் குழு வந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி தாமே செய்தியாளர்களைச் சந்தித்து பேசியமையிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
5 நாள்கள் பயண விவரங்களை எம்.பிக்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படித் தனது அறிக்கையாகத் தயாரித்துத் தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் அந்நாட்டு அரசுக்குச் சார்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Source:http://www.uthayan.com/Welcome/full.php?id=1116&Uthayan1255697542
நாடகமாடியே கல்லறைக்கு அனுப்பினாயே கருணா(ய்)நிதி தமிழினத்தை
ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சைகாரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய்.
நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் .
தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய்.
நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய்
மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே.
பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே.
தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ?
அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ?
எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜபக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது?
நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா?
Source:http://www.sureshkumar.info/2009/10/blog-post_16.html
Wednesday, October 14, 2009
பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..
இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!
எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு ....."இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார். அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை! நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள். "ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?" "வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?""எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது. கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது. "இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *
- ஒளண்யன் -
Monday, October 12, 2009
கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு 'இந்தியத் துரோகம்': பாரிஸ் ஈழநாடு
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள்.
ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்து கொண்டார். கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தமிழகம் அமைதியானது. அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.
நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.
இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறிய போது தமிழகத்தில் மாண்புமிகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர்.
வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.
நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது.
புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டு வந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.
மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய இலங்கை தொடர்பான கொள்கை மாற்றம், ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும், மேனனும் இலங்கை சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள்.
இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.
சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார்.
தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.
இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
Saturday, October 10, 2009
இலண்டனிலும் அம்சாவின் கைவரிசை?
தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, முகாம் நிலை தொடர்பாக சுதந்திரமாக தகவல்களை அறிய அனுமதிக்கப்படுமா?
போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் இன்று சனிக்கிழமை கொழும்பு செல்கின்றனர்.
இருந்தபோதிலும், இவர்கள் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு அரசின் முக்கிய அமைச்சர்களுடனேயே அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் சுதந்திரமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கின்றது.
வடபகுதியில் இந்தக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் அனைத்தும் அரசினால் 'வழிகாட்டப்படும்' பயணங்களாகவே இருக்கும்.
வவுனியா முகாம்களுக்கு இவர்கள் செல்லும்போது புனர்வாழ்வுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவர்களுடன் செல்வார். மெனிக் பாமில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு காட்டுவதற்கு எனத் தயாரிக்கப்பட்டுள்ள முகாமுக்கு மட்டுமே இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஏனைய முகாம்களை பார்வையிடுவதற்கு இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகின்றது.
வழமையாக முகாம்களை பார்வையிட வரும் வெளிநாட்டுப் பிரிதிநிதிகளை கையாள்வதைப் போலத்தான் இவர்களையும் கையாள்வதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
இதேவேளையில் நாளை இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி. துணைப் படைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்ளவிருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்படுவதைத் தடுக்கமுடியும் என அரசு கருதுகின்றது.
சிறிலங்காவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர்.
இந்த காலத்தில் மூன்று விடயங்கள் தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்று - முகாம்களின் நிலைமை மற்றும் அங்குள்ள மனிதார்ந்த பிரச்சினை. இரண்டு - மீள்குடியேற்ற நடவடிக்கைகள், மூன்று - கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
இதனைவிட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தீர்மானித்திருந்தார்.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.
இன்று கொழும்பு செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக இந்த குழுவின் தலைவரான தங்கபாலு கருத்து வெளியிடுகையில், முதல்வர் சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரை அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துக்களை மத்திய அரசிடம் அளிப்போம் எனத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
இதேவேளையில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணத்தின் மூலமாக சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படும் எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களை இதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சிறிலங்காவில் இருந்தும் அனைத்துக் கட்சிகளின் குழு ஒன்று விரைவில் தமிழ்நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
சிறிலங்கா அரசை பொறுத்தவரையில் இன்று செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்துவிட முடியும் எனக் கருதுவதுடன், தமது பிரச்சாரத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு செயற்படுகின்றது என்பதை அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன்று கொழும்பு செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 'இந்து' ஆசிரியர் என்.ராம் போல சிறிலங்காவின் பிரச்சாரங்களுக்கு துணை போகப் போகின்றார்களா அல்லது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முயற்சிப்பார்களா என்பதுதான் இன்று ஈழத் தமிழர்கள் அனைவரிடமும் எழும் கேள்வி.
பல வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் வடபகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் முகாம் நிலைமைகளை ஏற்கனவே பார்வையிட்டுள்ளன.
குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. உயர் அதிகாரிகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.
முகாம்களின் மோசமான நிலைமை தொடர்பாக தமது இந்தப் பயணங்களின் பின்னர் கவலையுடன் குறிப்பிடும் அவர்கள், முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திச் சென்றிருந்தார்கள்.
இவை அனைத்தும் வெறும் அறிக்கைகளாக மட்டுமே உள்ள நிலையில், தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து போயுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று செல்கின்றது என்பது பெரும் விரக்திகளுக்கு மத்தியிலும் அவர்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிப்பதாக அமைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தொப்புள் கொடி உறவைக்கொண்டுள்ள தமிழ்நாட்டின் தலைவர்கள் தம்மைப் பாதுகப்பார்கள் என்ற காலாதி காலமான அவர்களின் நம்பிக்கைக்கான இறுதிப் பரிசோதனையாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஐ.நா. போலவோ மேற்குலக நாடுகளைப் போலவோ வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன் தமது பணியை அவர்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். தமிழ்நாட்டில் இவர்களின் வருகை அசைவை ஏற்படுத்தும் என்றே அவர்கள் நம்புகின்றார்கள்.
தமிழ்நாட்டு தலைவர்களின் பயணம் - அவர்கள் சிறிலங்காவின் வழிநடத்தலில்தான் நடந்துகொள்ளப் போகின்றார்களா என்பதும், நாடு திரும்பிய பின்னர் அவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும்தான் முகாம் மக்களின் விடிவுக்கான வழியைத் திறப்பதாக அமையும். அவர்களும் அறிக்கைகளுடன் தமது பணியை முடித்துக்கொண்டால் முகாம் மக்களுக்கு விடிவு இல்லை என்பதுதான் அர்த்தமாக இருக்கும்.
Friday, October 9, 2009
அரியானா தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகம்
சண்டிகார் : அரியானா சட்டசபைத் தேர்தலில், கோடீஸ்வரர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். அரியானாவில், அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 90 இடங்களுக்கான இந்த தேர்தலில், கோடீஸ்வர வேட்பாளர்கள் 251 பேர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் 72 கோடீஸ்வரர்களும், இந்திய தேசிய லோக் தளம் சார்பில் 56 பேரும், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் சார்பில் 44 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வர் பஜன்லாலின் அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சி சார்பில், கோஸ்லி தொகுதியில் போட்டியிடும் மோகித்யாதவ் தனக்கு 92 கோடியே 70 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, அம்பாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வினோத்சர்மா, தனக்கு 87 கோடியே 40 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸ்சார் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 44 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் பூபிந்தர் சிங்கை எதிர்த்து, ரோதக் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பதே சிங், தனக்கு 29 கோடி ரூபாய் சொத்து உள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரியானா காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் பிரகாஷ் குறிப்பிடுகையில், "அரியானா மாநிலம் டில்லிக்கு அருகே உள்ளதால், இங்கு நிலங்களின் விலை பல மடங்கு கூடியுள்ளது. ஐந்து ஏக்கர் நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை போகிறது. எனவே, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் தற்போது கோடீஸ்வரர்' என்றார். ஏழைகள் பலரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இஸ்ரானா தொகுதியில், சமஸ்த் பாரதிய கட்சியின் சார்பில் போட்டியிடும் ராம் நிவாஸ் என்பவர், தனக்கு சொத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பிரித்தாலா தொகுதியில், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிர்மலா பன்சால், தன்னுடைய கையிருப்பு ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே, என தெரிவித்துள்ளார். இதே போல நர்வானா தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சத்பால் சரோகா என்பவர் தன்னுடைய கையிருப்பு, இரண்டாயிரத்து 500 ரூபாய்மட்டும் தான், என தெரிவித்துள்ளார்.
Source:http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?News_id=5233
Thursday, October 8, 2009
தினமலர் ரமேஷ் ஒரு *****-நடிகை ஸ்ரீபிரியா கடும் தாக்கு
நேற்று தினமலருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதிலே பேசிய அனைவரும் தினமலரின் அனைத்து நிர்வாகிகளையும் குதறிஎடுத்து விட்டனர்.
நடிகை ஸ்ரீபிரியா பேசும் போது அதிகதிகமாக தினமலரைத் தாக்கினார். இறுதியிலே முடிக்கும் போது தினமலர் ரமேஷ் ஒரு பாஸ்டர்ட் என மிக ஆவேசமாகக் கத்தினார்.
ஸ்ரீப்ரியாவைத் தொடர்ந்து பேச வந்த சத்யராஜ் ஸ்ரீப்ரியா சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் கைகளைத் தூக்குங்கள் . ஸ்ரீபிரியா ஆங்கிலத்தில் சொன்னதை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறேன். எங்கள் மீது கேஸ் போட முடிஞ்சா போட்டுக்குங்கடா உங்களால ஒன்னும் புடுங்க முடியாது என வழக்கம் போல கொதித்தார்.
அடுத்து பேச வந்த விஜயகுமார், நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தினமலர் அலுவலகம் சென்று அங்கே கண்ணில் படும் நான்கு பேரை வெட்டிப் போட்டு விட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருந்தது எனக் கூறினார்.
விவேக் எந்த அளவிற்கு மேடையில் கேவலமாக பேசக் கூடாதோ அதைவிட மிகக் கேவலமாக பேசினார். ஏன்டா டேய்! யாரு படத்தடா போடுற? உங்கக்கா, உங்கம்மா,உன் பாட்டி நிர்வாண படம் இருந்த அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல உட்டியே, உன் பொண்டாட்டி, உன் அக்கா ,உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதைப் போடு. உன் அம்மாவும், உன் அக்காவும் குளிக்கும் பொது ரெயின் கோட்டு மாட்டிக்கிட்டா குளிப்பாங்க? அவங்களும் நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க . அத எடுத்து உன் பத்திரிகையில போடுறா. டேய் நான் உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கிறேண்டா. உன் அம்மா படம், உன் பொண்டாட்டி படம், உன் அக்கா படம், இது மூணையும் எங்கிட்ட தா. அத நான் மார்பிங்க் பண்ணி ஜட்டி பிகினி போட்டு ஊர் பூரா போஸ்டர் அடிச்சி ஒட்டுறேண்டா. அப்ப அத எடுத்து படமா போடுறா என விவேக் மிகக் கீழ்த்தரமாக பேசினார்.
நடிகை புவனேஸ்வரியை கைது செய்த போது அவர் கொடுத்த தகவலைத் தான் தினமலர் வெளியிட்டது. ஆனால் பத்திரிகை சுதந்திரம் என வாய்கிழிய பேசும் பல முன்னனி பத்திரிகைகள் எதையுமே வெளியிடவில்லை. வழக்கம் போல வில்லங்கமாக நடிகைகளின் படத்தையும் வெளியிட்டு அந்த புண்ணிய ஆத்மாக்களைக் கலங்கப் படுத்தும் அந்தப் பாதக வேலையைச் செய்து விட்டது தினமலர்.
இந்த விசயம் வெளியானதும் எல்லா நடிகைகளும் பேதியாகிவிட்டனர். காரணம் எங்கே சக தொழில்காரி புவனேஸ்வரி தங்கள் விவரங்களையெல்லாம் முழுமையாகக் கொடுத்திருப்பாரோ? என பீதியில் உறைந்து தங்களுடைய மாமாமார்களுக்கு போன் போட்டு இப்ப விசயம் எப்படி இருக்கு? எனத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். காவல்துறை புவனேஸ்வரி கொடுத்த எதையுமே வெளியிடாமல் மவுனம் காத்தது. ஆனால் அதிகப்பிரசங்கித்தனமாக தினமலர், பெயரை மட்டுமின்றி போட்டோக்களையும் போட்டுவிட்டது. காவல்துறையே கம்முனு பொத்திக்கிட்டு இருக்கும் போது ஒனக்கு இன்னாடா வந்தது என கோபமடைந்த கண்ணகிகள் கூட்டம் தங்களின் நடிக நாயகர்களுகளிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி கண்களை கசக்க ஆரம்பித்தும் துடித்தெழுந்தனர் நாயர்கள். அதன் விளைவு தான் இந்த கண்டனக் கூட்டம்.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பட்டியலைக் கொடுத்த புவனேஸ்வரியை யாரும் கண்டிக்கவில்லை. அல்லது புவனேஸ்வரியிடம் , சரிம்மா நாங்க விபச்சாரம் பண்ணுறோம்னு நீ சொல்றீயே அதுக்கு ஆதாரத்தை கொண்டு வா, நாங்க அத இல்லைன்னு நிறுபிக்கிறோம் என நேற்று வாய் கிழிய நரம்புகள் முறுக்கேறப் பேசிய நமது ரசிக கண்மனிகளின் தலைவர்களோ அல்லது கண்ணகியின் மறு உருவங்களாக தமிழ்சினிமாவிலே ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர்விட்டு விடக்கூடிய பத்தினி தெய்வங்களோ கேட்காதது தான் ஆச்சரியாமாக இருக்கிறது. ஆக நேற்று நடந்த கூட்டத்தின் சாராம்சம் நடிகைகள் விபசாரம் செய்வதாக அவதூறு பரப்பாதே என்பதற்காக அல்ல, இனியும் நடிகைகள் விபசாரம் செய்தால் அதை வெளியிடாதே என்பது போலத் தான் இருந்தது.
சாக்கடையிலே புரளும் பன்னிகள், எவண்டா எங்களை பன்னிகள் என சொல்றது? நாங்களெல்லாம் கவரி மான்கன், எங்கள் மீது வீசும் வாசனை சாக்கடையல்ல, ஜவ்வாது என சொல்வது போல இருக்கிறது நடிகை ஸ்ரீபிரியா தினமலர் ரமேஷை பாஸ்டர்ட் என சொன்னது.
இந்த செய்திகளை படம் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளும் மேற்கண்ட எந்தக் காட்சியையும் ஒளிபரப்பாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டு கடைசியாக கருவேப்பிலையாகப் பேசிய ரஜினிகாந்தின் பேச்சை மட்டுமே ஒளிபரப்பின. ஆனால் வின்டிவி மட்டும் தான் தலைப்புச்செய்திகளில் கூட தினமலர் ரமேஷை தேவடியாப் பையன் என்று சொல்லிய ஸ்ரீபிரியா என மேற்படி செய்திகளை முழுமையாக வெளியிட்டது. அதே போல பத்திரிகையாளர் சார்பிலே வின் டிவியின் இயக்குனர் திரு.திருவே தேவநாதன் அவர்கள் தன் கண்டனத்தினைப் பதிவு செய்த பிறகு தான் பிரஸ்கிளப்பில் இருந்து கண்டனக் குரல்கள் வெளியாகின.
நேற்று இரவே தினமலரின் அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆசிரியர் திரு.லெனினிடம், உங்களை விசாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போதே, அதிகாரிக்கு சில போன் கால்கள் வர திடீரென அவரிடம் உங்களைக் கைது செய்கிறோம் என அடாவடியாகக் கூற, அதற்கு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலே திரு.லெனின் அவர்கள் காவல்துறையிடம் வாரண்ட் கேட்க, உங்களையெல்லாம் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை என காவல்துறை அடாவடியாகக் கூறி அவரை மிகக் கேவலமாக இழுத்துச்சென்றிருக்கின்றனர். இதை வேடிக்கையாக அல்லது மகிழ்சியாக பார்த்துக் கொண்டிருந்த மற்ற பத்திரிகை நண்பர்களுக்கும் நாளை இது போல நிலமை வரலாம்.
மாமா சேவைக்காக சில வருடங்களுக்கு முன்னால் காவல்துறையின் சிறந்த விருது வாங்கிய கன்னட பிரசாத் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது அவர் குறிப்பிடாத நடிகையே இல்லை. அப்போது எங்கே போனார்கள் இந்த திரைஉலகினர். ஏன் ஆர்பாட்டம் நடத்தவில்லை.
அதெல்லாம் ஓக்கே! சிறையில் இருந்து நக்கீரனுக்காக தொடர் எழுதி அது புத்தகமாகவும் வெளியிடப் பட்டுள்ளதே! அதிலே மிக முக்கியமாக ஸ்ரீபிரியாவைப் பற்றியும், மஞ்சுலாவின் குடும்பத்தைப் பற்றியும், குமாரி மீனா பற்றியும் மிகத் தெளிவாக புட்டுபுட்டு வைத்தாரே கோடம்பாக்கம் மாமா பிரசாத், அப்போது ஏன் இந்த திரைஉலகம் கண்டனம் தெரிவிக்கவில்லை.
திரை உலகம் என்றாலே விபச்சார உலகம் தான் என்பது இன்றைய சூழ்நிலையில் படிக்காத பாமரன் கூட உணர்ந்த நிலையில் அதை மேற்கண்டவர்கள் மறுப்பது ஏன்? சினிமா விபச்சாரம் பற்றி எத்தனை படங்கள் வந்து விட்டன,எத்தனை படங்களில் விவேக் சினிமா விபசாரம் பற்றி காமெடியாக சொல்லியிருக்கிறார். அதெல்லாம் சும்மாவா? கூட்டத்திலே அவர் பேசிய வார்த்தைகளைப் பாப்பவர்கள் மிக நோவார்கள், இவருக்கு யார் சின்னக் கலைவானர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் பட்டம் கொடுத்தார்கள் என்று...,
இது தான் அந்த சர்ச்சைகுரிய செய்தி.
கசாப்புக் கடைக்காரனும் சதையை வியாபாரம் செய்கிறான். நடிகைகளும் சதையை வியாபாரம் செய்கின்றனர். நடிகைகள் பெண்ணியம் குறித்தும் பண்பாடு குறித்தும் பேசுவது கசாப்புக் கடைக்காரான் காந்தீயம் பேசுவது போன்றதாகும்.
Source: http://etiroli.blogspot.com/2009/10/blog-post_1679.html
காதல் மன்னன் கருணாநிதி ?
நன்றிக்கடன் செலுத்துவது இப்படியா?முதல்வர் கருணாநிதியை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகைகள் ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
விபச்சார வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெரிய நடிகைகள் பற்றி போலீசாரிடம் வெளியிட்டதாகக் கூறப்பட்ட பட்டியலை தமிழ் தினசரி படங்களுடன் வெளியிட்டது.ஆனால் சென்னை போலீஸ் இப்படி ஒரு பட்டியலை நாங்கள் யாருக்கும் தரவில்லை என்று கூறி விட்டதால், பொய்ச் செய்தியை அப் பத்திரிகை வெளியிட்டதாகக் கூறி, அந்தப் பத்திரிகை மீது நடவடிக்கை கோரியது நடிகர் சங்கம்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி. இந்த புகாரின் பேரில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று கூறியிருந்தார். நடிகர் சரத்குமாரும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சரத் குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, அவரது ஆறுதலான ஆதரவான நடவடிக்கைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.இந்தக் குழுவில் சரத்குமாருடன் நடிகைகள் ஷகிலா, ராதிகா, மும்தாஜ், நளினி, நடிகர்கள் விஜய்குமார், சூர்யா, சத்யராஜ் இடம் பெற்றிருந்தனர்.முதல்வரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நன்றி தெரிவித்துப் பேசினர்.
காதல் மன்னன்?- இது செய்தி.
இதில் ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி இவர்களெல்லோரும் நடிகை புவனேஸ்வரியால் விபச்சாரம் செய்பவர்களாகப் பிரஸ்தாபிக்கப்பட்டவர்கள். இந்நடிகைகளை அனுபவித்தவர்களில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அடங்குவர்.இவர்களைக் காக்க கருணாநிதி எடுத்த நடவடிக்கைக்காக வீடு தேடிச் சென்று நன்றி கூறியிருக்கின்றார்கள். இது ஒரு வகை நன்றிக்கடன் என்றால், கருணாநிதி இவர்களைக் காக்க முண்டியடித்ததின் மர்மம் என்ன? இதயும் ஒரு வகை நன்றிக்கடனாக நினைக்க முடியுமா?
மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அவதிப்படுவது கேட்டும் துடிக்காத கருணாநிதி விபச்சாரிகள் என்று பகிரங்கப்படுத்தியவர்களைக் காக்க வேட்டி அவிழ்வதையும் பாராது வேகம் எட்டுத்துச் சென்றது ஏன்?பிற்குறிப்பு: நடிகைகளை அவதூறு செய்வது என் நோக்கம் என்றில்லாவிட்டாலும் அவர்கள் பத்தினிகள் ஒன்றுமில்லை.
பின்பின்குறிப்பு: இந்த வயதிலுமா? கருப்புக்கண்ணாடி கழட்டா கருணாநிதி.. ஆச்சரியம் தான்..
Source: http://thurkai.blogspot.com/2009/10/blog-post_1959.html