தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது.
பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம்.
ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம்.
சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ‘‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’’ என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி.
ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா?
ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார்.
அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள். http://truetamilans.blogspot.com/
அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று.
அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ‘’நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்” ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள்.
இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார்.
ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை.கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?
இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு. ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும்.
ஆனால் அவருக்கு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள். தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதியின் இன்றைய வருத்தமெல்லாம் உலக்த் தமிழர்களின் தலைவர் பதவி பறிபோய் விட்டதே என்ற கவலைதான்.
Monday, October 5, 2009
கருணாநிதி அல்ல இவன் பெயர் – கருணா(ய்)நிதி இதுதான் மிகவும் பொருத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
கருணாநிதி மேல இம்புட்டு காண்டா...
ReplyDelete”குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் போல”ன்ற திருவிளையாடல் வசனம்தான் நினைவுக்கு வருது..
என்னவோ போங்க...
வேர்ட் வெரிஃபிகேசன் எல்லாம் வச்சிருக்கீங்க...இம்புட்டு தைரியசாலியா நீங்க, மொதல்ல அதை எடுத்து கடாசுங்க பாஸ்
ReplyDeleteits a nice blog boss.
ReplyDelete