Thursday, June 18, 2009
மக்களை முட்டாள் ஆக்கும் இலங்கை அரசு.
இங்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஒரு தலைவரை முக்கியமான இடத்துக்கு மாற்றும் போது எந்த தளபதியும் அவருடைய முக்கிய நபரின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் முடித்து விட நினைப்பர்.ஆனால் இங்கு தலைவர் கொல்லப்பட்டு அவரின் உதவியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்து விட்டதாக கதை புணயபபட்டு உள்ளது.
எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்னாள் உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.
ATTN: இந்த புதிய கதையை நம்புவது அவரவர் பொறுப்பு
Friday, May 29, 2009
சாயம் வெளுக்கும் இலங்கை அரசின் பொய்
Wednesday, May 27, 2009
கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது
கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.
சமீபத்தில் செல்வராஜா பத்மநாதன் என சொல்லப்படும் வீடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் தேசிய தலமை பீடம் வீரமரணம் அடைந்துவிட்டதாக ஒரு அறிவிப்பை செய்திருந்தார்.
ஆனால், இது பற்றிய தகவல் இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கே இலங்கை புலனாய்வு துறையால் பல பத்திரிகை களுக்கு தெரிவிக்க இருந்தது. இங்கு ஏற்படும் சர்ச்சை என்னவென்றால், பத்மநாதன் என சொல்லப்படும் நபர் இரவு 9 மணிக்கு தான் BBC தமிழ் ஓசையுடன் பேசியுள்ளார். ஆனால் அவர் பேச போகும் தகவல் காலையிலே எப்படி இலங்கை அரசுக்கு தெரியவந்தது?மேலும், பேசிய நபர் அவர்தான் என அவதானிக்க முடியவில்லை, ஏனென்றால் KP யோ அல்லது எஸ் பீ யோ எங்கு உள்ளார்கள் என யாருக்குமே தெரியாது. எனவே இலங்கை புள்ளுறுவிகளின் வேலை என தெளிவாக அறிய முடிகிறது
Friday, May 8, 2009
ஆங்கில ஊடகங்களால் மறைக்கப்படும் வன்னி காடு
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள இராணுவத்துக்கும்
நடை பெரும் சமர் கடைசி கட்டத்தை அடைந்து
விட்டதாகவும் தமிழர்கள் இரண்டு மைல் இடத்தில்
அடைக்கப்பட்டு உள்ளதாக பல செய்தி ஊடகங்கள் அதிலும்
குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் செய்திகளை அவ்வப்போது
வெளியிட்டு வருகின்றன.
ஆனால் எல்லோரும் குறிப்பாக
வன்னி காட்டு பகுதிகளை வேணுமென்றே இலங்கை ராணுவம்
கையில் இருப்பதாக பொய் செய்திகளை பரப்பி
வருகின்றனர். உண்மை என்னவென்றால் அந்த காட்டு
பகுதியில் யார் உள்ளார்கள் என்ற விடயம் இலங்கை
அரசுக்கே தெரியாது. மேலும் வன்னி காடுகளில்
நுழைவது என்பது இலங்கை ராணுவத்தால் முடியாத
ஒன்று.
ஆனால் ஆங்கில மற்றும் சிங்கள
ஊடகங்கள் இந்த புதிர் காடுகளை பற்றி மூச்சுவிடவே
மறுக்கின்றனர். ஒரு பொய்யை பலமுறை சொன்னால்
அது உண்மையாக மாறிவிடும் என்பதர்க்கு இணங்க
வன்னி காடுகள் பற்றிய உண்மை நிலையை அந்த
ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளன.
மேலும் தான் பெற்று வந்த பல வெற்றிகளை
செய்திகளாக வெளியிட்டு வரும் ராணுவம் வன்னி
காடுகள் பற்றி இதுவரை தெளிவாக எந்த தகவலையும்
வெளியிட தயக்கம் காட்டி வருவது இங்கே
குறிப்பிடத்தக்கது.
வன்னி காடுகள் பற்றி வெளி
உலகில் உள்ள பலருக்கும் ஏதும் தெரிந்து
இருக்க வாய்ப்புகள் குறைவு. அங்கு சென்று
வந்த இந்திய படை முக்கியாஸ்தர்கள் சொன்னதாக சிலர்
கூறியதை பல நாட்களுக்கு முன் நான்
கேட்க நேர்ந்தது. அவர்கள் கூற்று படி
வன்னி காடுகள் இந்தியாவில் உள்ள அதற் காடுகளையும்
விட மிகவும் அடர்ந்து உள்ளதாம்.
ஆகவே
இனி வரும் நாட்களில் சண்டை வன்னி
காடுகளில் நடை பெற்றால் ஆச்சரிய பட ஒன்றுமில்லை
.
ஆனால் ஆங்கில ஊடகங்கள் அதை எவ்வாறு
நோக்குக்கின்றன என்பது தான் முக்கியம்.
Thursday, May 7, 2009
முக்கிய செய்தி: மு கருணாநிதி சார்பில் ராஜபாக்சே ஒட்டு சேகரிப்பு.
குறிப்பு : இது ரூம் போட்டு யோசிச்சு அடித்த செய்தி
முழுவதுமாக நம்பிய அன்னை சோனியா சென்னை விஜயத்தை ரத்து செய்ததால் தமிழர்களின் தலைவர் மு கருணாநிதி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபாக்சேவின் உதவியை நாடி உள்ளார். ஆகவே வரும் 11 ஆம் தேதி அன்று சென்னை தீவுத் திடலில் கட்சியினர் புடை சூழ தமிழர்களின் ஒரே தலைவர் வரலாற்று நாயகன் முத்து வேல் கருணாநிதி முன்னிலையில் ராஜபாக்சே சகோதரர்கள் (குறிப்பாக கொதபாயா) டி ம் கே உக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கூட்டத்தில் இலங்கை நாட்டில் உள்ள பல புத்த துறவிகளும் பங்கு கொள்ள இசைவு தெரிவித்து உள்ளதாக அறிய முடிகிறது. அவர்கள் எல்லோரும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் வாழ்வு நிலை பற்றி பேச போவதாக தகவல்.
இனி இந்தியாவை நம்பி தன் கட்சியை வளர்க்க போவதில்லை என கருணாநிதி தெரிவித்து உள்ளதாக அந்த கட்சியின் அதிகார ஊடகம் கொலைஞர் டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை வரும் ராஜபாக்சே சகோதரர்கள் கலைஞர் அவர்களின் துணைவியார் வீட்டில் தங்கி வேறு சில நகரங்களுக்கும் சென்று கட்சிக்காக தீவிர ஒட்டு சேகரிக்க உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்து உள்ளது
இந்த சென்னை விஜயம் குறித்து ராஜபாக்சே கருத்து சொல்லும் போது இந்தியா இலங்கைக்கு செய்த அனைத்து உதவிகளுக்கு பிரதிபலனாக அவர்கள் இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறி உள்ளனர்.
Tuesday, April 28, 2009
சில வெளிவராத பத்திரிகை செய்தி தலைப்புகள்
செய்தி தலைப்புகள்.
விடுதலைப்புலிகள் கூண்டோடு சாவு.
பிராபகரன் புறமுதுகு காட்டி வன்னி காட்டில் இருந்து ஓட்டம்.
வன்னி காட்டில் புலிகளுக்கு சமாதி.
இதுபோன்ற பல தலைப்புகளை வெளியிட பல பார்ப்பன தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் ஆவலாக காத்திருந்தன. எல்லா பத்திரிகைகளும் இலங்கையில் புலிகளின் கதை இன்னும் சில மணித்துளிகளில் முடிந்துவிடும், நாம் எப்படிவேனுமானாலும் செய்தியை வெளியிடலாம் என நாய் போல் நாக்கை தொங்க போட்டு கொண்டு இருக்கும் போதுதான்,
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபமா அளித்த அதிர்ச்சி வைத்தியம் இலங்கை ஜனாதிபதியையே உச்சா போகவைத்துவிட்டது.
பித்து பிடித்து சுத்திய நாதாரி ராஜபாக்சே இந்தியாவின் உதவியை உடனே
நாடினார். டெல்லியில் இருந்து இரண்டு பருப்புகள் கொழும்பு நோக்கி பயனமானர்கள். அவர்களின் பயணம் புலிகளை பூண்டோடு ஒழிக்க பயன்படும் என கனா கண்டு கொண்டு இருந்த ராஜபாக்சே உக்கு தொலைதூர அமெரிக்காவிலிருந்து ஆப்பு அடித்தார் ஒபமா.
இவர்களின் மோசடி திட்டத்தை அறிந்துகொண்ட அவர் ஐநா சபையின் முக்கியமான தலைவர் ஒருவரையும்
இலங்கை நாட்டுக்கு அனுப்பி விட்டுவிட்டார். ஆகவே, சென்னையில் மு க செய்த உண்ணாவிரததத்ினால் ஒன்றுமே நடை பெற வில்லை.
இந்தியாவின் முழு ஒத்த்துழைப்புடன் வண்ணியில் பாடு பாதக செயலை செய்ய முடிவு செய்து இருந்த சிங்களவர்கள் கொஞ்சம் ஆடி தான் போனார்கள். இந்தியாவில் உள்ள பார்ப்பன செய்தி ஊடகங்களும் தன்னுடைய ஈழ எதிர்ப்பு அரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஒபாமவின் ஆப்பு வராமல் இருந்து இருந்தால் இந்நேரம் எப்படி எப்படி எல்லாம் இந்த பத்திரிக்கை
கூட்டங்கள் புலிகளை பேனா கத்தியினால் கொன்று பாத்திருக்கும்.
Monday, April 27, 2009
முடிவெடுக்கும் நேரம் இது

பாரீர் பர்ரீர் இலங்கையில் தமிழினம் அழிவதை பாரீர்.இங்கு பிரசுரிக்க பட்டுள்ள படங்கள் ஒரு வாழ்ந்த இனம் அழிவதை காட்டுகின்றது.யாரும் கேட்க நாதியில்லாதவர்களாக இவர்கள்?இந்திய அரசின் பக்க பலத்துடன் இலங்கை அரசு செய்யும் இந்த பாதக செயல்களுக்கு உலக மன்னிப்பு கிடையாது.சிங்களவர்களுக்கு உதவும் இந்திய எச்சை கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகத்துங்கள். அந்த தாயின் கண்ணீரை பாருங்கள். அந்த தந்தையின் இயலாமையை பாருங்கள். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? சிங்களவர்களின் பாதக செயல்களுக்கு காவடி தூக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு செருப்பால் அடித்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.










